Skip to content

தவ்ஹீதின் வகைகள் என்ன ?

الباب / الفصل
قسم العقيدة

السؤال

س10: ما أنواع التوحيد؟

கேள்வி 10 : தவ்ஹீதின் வகைகள் என்ன ?

الجواب

ج:1. توحيد الربوبية: وهو الإيمان بأن الله هو الخالق الرازق المالك المدبر، وحده لا شريك له.

  1. توحيد الألوهية: وهو إفراد الله بالعبادة، فلا يعبد أحد إلا الله تَعَالَى.
  2. توحيد الأسماء والصفات: وهو الإيمان بالأسماء والصفات لله تَعَالَى الواردة في الكتاب والسنة، من دون تمثيل، ولا تشبيه، ولا تعطيل، ولا تكييف.

ودليل أنواع التوحيد الثلاثة:

قوله تَعَالَى:

﴿رَّبُّ ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضِ وَمَا بَيۡنَهُمَا فَٱعۡبُدۡهُ وَٱصۡطَبِرۡ لِعِبَٰدَتِهِۦۚ هَلۡ تَعۡلَمُ لَهُۥ سَمِيّٗا﴾

[مريم: 65].

பதில்: தவ்ஹீத் மூன்று வகைப்படும் அவையான : 1. தவ்ஹீதுர் ருபூபிய்யா: அல்லாஹ்வே அனைத்தையும் படைத்து, வாழ்வாதாரமளித்து, சொந்தமாக்கி, வழிநடாத்துபவன் என்பதையும், அவனுக்கு இணையாக எவரும் இல்லை என்பதையும் விசுவாசம் கொள்வதாகும்.

2-தவ்ஹீதுல் உலூஹிய்யா : வணக்க வழிபாடுகளின் மூலம் அல்லாஹ்வை ஒருமைப்படுத்துவதாகும். அவனைத் தவிர வணங்கி வழிபடுவதற்கு எவரும் கிடையாது.

  1. தவ்ஹீதுல் அஸ்மாஇ வஸ்ஸிஃபாத்: இது அல்குர்ஆனிலும் அஸ்ஸுன்னாவிலும் வந்துள்ள அல்லாஹ்வின் பெயர்களையும் பண்புகளையும் உதாரணம் கூறாமலும், உவமைப்படுத்தாமலும், மறுக்காமலும், அமைப்பைக் கூறாமலும் ஈமான் கொள்வதாகும்.

தவ்ஹீதின் மூன்று வகைகளுக்குமான ஆதாரம் :

அல்லாஹ் கூறுகிறான்

(அவனே) வானங்கள், பூமி இன்னும் அவை இரண்டிற்கும் இடையில் உள்ளவற்றின் இறைவன் ஆவான். ஆகவே, அவனை வணங்குவீராக! இன்னும், அவனை வணங்குவதில் உறுதியாக (நிரந்தரமாக) இருப்பீராக! அவனுக்கு ஒப்பான ஒருவரை நீர் அறிவீரா!

(மர்யம் : 65).