Skip to content

ஷிர்க் என்றால் என்ன? அதன் வகைகள் யாவை?

الباب / الفصل
قسم العقيدة

السؤال

س12: ما الشرك وأنواعه؟

கேள்வி 12 : ஷிர்க் என்றால் என்ன? அதன் வகைகள் யாவை?

الجواب

ج:الشرك: هو أن يجعل الإنسان لله نِدًّا؛ في عبادته أو ربوبيته أو أسمائه وصفاته.

ومن الشرك صرف أي نوع من أنواع العبادة لغير الله تَعَالَى.

أنواعه:

  • شرك أكبر؛ مثل: دعاء غير الله تَعَالَى، أو السجود لغيره سُبْحَانَهُ، أو الذبح لغير الله عَزَّ وَجَلَّ.
  • شرك أصغر؛ وهو الذي لا يخرج من الملة مثل: الحلف بغير الله تَعَالَى، أو التمائم، وهو ما يُعلق من الأشياء لجلب نفعٍ أو دفع ضرٍّ، ويسير الرياء، كأن يحسِّن صلاته لما يرى من نظر الناس إليه.

பதில் : ஷிர்க்: அல்லாஹ்வின் வணக்கத்தில், ருபூபிய்யத்தில் (படைத்தல், பரிபாலித்தல், நிர்வகித்தல்) அல்லது அவனது அழகிய திருநாமங்களிலும் உயரிய பண்புகளிலும், அவனுக்கு இணை அல்லது நிகரானவரை ஏற்படுத்துவதே ஷிர்க் ஆகும்

வணக்கவழிபாடுகளில் ஏதாவது ஒன்றை அல்லாஹ் அல்லாதவருக்கு திருப்புவதும் இணைகற்பித்தலாகும்.

ஷிர்கின் (இணைவைத்தலின்) வகைகள் :

  • பெரியவகை இணைவைப்பு : பெரியவகை இணைவைப்புக்கு உதாரணம் அல்லாஹ் அல்லாதவரிடம் பிரார்த்தித்தல், அல்லாஹ் அல்லாதவருக்கு ஸுஜூது செய்தல் மற்றும் அறுத்துப் பலியிடுதல் போன்றவைகளாகும்.
  • சிறிய இணைவைப்பு : இது மார்க்கத்தை விட்டு வெளியேற்றாததாகும். இதற்கு உதாரணம் அல்லாஹ் அல்லாத ஒன்றின் மீது சத்தியம் செய்தலும், அல்லது ஏதாவது ஒரு நன்மையைப் பெற்றுக் கொள்ள அல்லது ஒரு தீங்கிலிருந்து பாதுகாப்புப் பெற நாடி தாயத்துக் கட்டிக்கொள்வதும், சாதாரண முகஸ்துதியும் ஆகும். முகஸ்துதிக்கான உதாரணம் மக்கள் தன்னைப் பார்க்கிறார்கள் என்பதற்காக தொழுகையை அழகாக தொழுவதைக் குறிப்பிடலாம்.