Skip to content

ஈமான் (இறைவிசுவாசம்) என்பது, சொல் செயல் விடயங்களை உள்ளடக்கியுள்ளதா?

الموضوعات
الإيمان
التصنيف الشرعي
العقيدةالإيمان
الباب / الفصل
قسم العقيدة

السؤال

س36: هل الإيمان قول وعمل؟

ஈமான் (இறைவிசுவாசம்) என்பது, சொல் செயல் விடயங்களை உள்ளடக்கியுள்ளதா?

الجواب

ج:الإيمان قول وعملٌ واعتقاد.

  • فهو قولٌ باللسان، واعتقادٌ وعمل بالجَنان - أي: القلب - وعملٌ بالجوارح والأركان.
  • في الحديث عن أبي هريرة رضي الله عنه، عن النبي صلى الله عليه وسلم قال:

«الإيمان بضع وسبعون - أو: بضع وستون - شعبة، فأفضلها قول: لا إله إلا الله، وأدناها إماطة الأذى عن الطريق، والحياء شعبة من الإيمان»

رواه مسلم.

ஆம், ஈமான் (இறைவிசுவாசம்) என்பது சொல், செயல் மற்றும் நம்பிக்கை ஆகிய விடயங்களை உள்ளடக்கியுள்ளது.

  • அது நாவால் மொழிந்து, உள்ளத்தால் - அதாவது இதயத்தால் - நம்பி, உடல் உறுப்புக்களால் செயலாற்றுவதாகும்.

இதற்கு ஆதாரமாக பின்வரும் ஹதீஸ் காணப்படுகிறது. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக அபூ ஹுரைரா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள் :

'இறைநம்பிக்கை (ஈமான்) என்பது 'எழுபதுக்கும் அதிகமான' அல்லது 'அறுபதுக்கும் அதிகமான' கிளைகள் கொண்டதாகும். அவற்றில் உயர்ந்தது 'அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை' என்று கூறுவதாகும். அவற்றில் தாழ்ந்தது, தொல்லை தரும் பொருளைப் பாதையிலிருந்து அகற்றுவதாகும்.* வெட்கமும் இறைநம்பிக்கையின் ஒரு கிளையாகும்'.

(ஆதாரம் : முஸ்லிம்.)