Skip to content

ஒரு பெண் அவளின் வழமையான மாதவிடாய் காலத்தில் ஒரு நாள் சுத்தமற்ற நிலையிலும் அடுத்த நாள் சுத்தமான நிலைமையிலும் இருந்தால் அவள் என்ன செய்ய வேண்டும்?

السؤال

கேள்வி 1 :

ஒரு பெண் அவளின் வழமையான மாதவிடாய் காலத்தில் ஒரு நாள் சுத்தமற்ற நிலையிலும் அடுத்த நாள் சுத்தமான நிலைமையிலும் இருந்தால் அவள் என்ன செய்ய வேண்டும்?

س15: إذا رأت المرأة في زمن عادتها يومًا دمًا، والذي يليه لا ترى الدم طيلة النهار، فماذا عليها أن تفعل؟

الجواب

பதில் 1 :

அவ்வாறு குறிப்பிட்ட நேரம் அசுத்த நிலையிலிருந்து தூய்மை ஏற்படுவது அவளின் வழமையான மாதவிடாய் காலத்தில் நிகழ்ந்தால் அது மாதவிடாயாகக் கொள்ளப்படுமே தவிர மாதவிடாயிலிருந்து தூய்மையடைந்ததாகக் கருதப்படமாட்டாது என்பதே சரியான நிலைப்பாடாகும். இதனடிப்படையில் அவள் மாதவிடாய் ஏற்பட்ட பெண் தவிர்ந்து கொள்ள வேண்டிய விடயங்களை தவிர்ந்து நடக்க வேண்டும்.

சில அறிஞர்கள் : ஒரு பெண் ஒரு தினம் சுத்தமற்ற நிலையிலும் இன்னொரு தினம் சுத்தமான நிலையிலும் காணப்பட்டால் அசுத்தமான நிலை மாதவிடாயாகவும் தூய்மையான நிலை மாதவிடாய் அற்ற சுத்தமான நிலையையும் குறிக்கும். இந்நிலை பதினைந்து நட்கள் வரைக்குமாகும்.

இந்நிலையானது பதினைந்து நாட்கள் தாண்டிச் சென்றால்; அது இஸ்திஹாழா (தொடர் உதிரப்போக்கு) நிலையாகக் கருதப்படும். இது இமாம் அஹ்மத் (ரஹ்) அவர்களின் மத்ஹபின் பிரபல்யமான –ஏற்றுக்கொள்ளப்பட்ட- கருத்தாகும்

ﺟ15: الظاهر أن هذا الطّهر أو اليبوسة التي حصلت لها في أيام حيضها تابعٌ للحيض، فلا يعتبر طهرًا، وعلى هذا فتبقى ممتنعةً ممّا تمتنع منه الحائض.

وقال بعض أهل العلم: من كانت ترى يومًا دمًا، ويومًا نقاءً، فالدم حيضٌ، والنقاء طهرٌ حتى يصل إلى خمسة عشر يومًا،

فإذا وصل إلى خمسة عشر يومًا صار ما بعده دم استحاضةٍ. وهذا هو المشهور من مذهب الإمام أحمد بن حنبلٍ رحمه الله.