முஸ்லிம் பெண்ணின் ஹிஜாபின் தன்மைகள் எவை?
- الباب / الفصل
- قسم المنوعات
السؤال
س١٤: ما صفات حجاب المرأة المسلمة؟
கேள்வி 14 : முஸ்லிம் பெண்ணின் ஹிஜாபின் தன்மைகள் எவை?
الجواب
ج:- أن يكون ساترًا لجميع البدن.
– أن لا يكون به زينة.
– أن لا يكون شفافًا.
– أن يكون واسعًا غير ضيق.
– أن لا يكون مبخرًا مطيبًا.
– أن لا يشبه لباس الرجل.
– أن لا يشبه لباس الكافرات والفاسقات.
- قال تعالى:
﴿يَٰٓأَيُّهَا ٱلنَّبِيُّ قُل لِّأَزۡوَٰجِكَ وَبَنَاتِكَ وَنِسَآءِ ٱلۡمُؤۡمِنِينَ يُدۡنِينَ عَلَيۡهِنَّ مِن جَلَٰبِيبِهِنَّۚ ذَٰلِكَ أَدۡنَىٰٓ أَن يُعۡرَفۡنَ فَلَا يُؤۡذَيۡنَۗ وَكَانَ ٱللَّهُ غَفُورٗا رَّحِيمٗا﴾
[الأحزاب: ٥٩].
معنى الآية:
يا أيها النبي قل لأزواجك وبناتك ونساء المؤمنين يرخين على رؤوسهن ووجوههن مِن أرديتهن وملاحفهن؛ لستر وجوههن وصدورهن ورؤوسهن؛ ذلك أقرب أن يميَّزن بالسَّتر والصيانة، فلا يُتعرَّض لهن بمكروه أو أذى. وكان الله غفورًا رحيمًا حيث غفر لكم ما سلف، ورحمكم بما أوضح لكم من الحلال والحرام.
பதில் : - உடல் முழுவதையும் மறைக்கக்கூடியதாக இருத்தல் வேண்டும்.
– அதில் அலங்காரம் இருத்தல் கூடாது.
- மெல்லியதாக இருத்தல் கூடாது.
– இறுக்கமானதாக அல்லாமல் விசாலமானதாக இருத்தல் வேண்டும்.
– நறுமணம் புகையூட்டப்பட்டதாகவோ வாசனைத்திரவியம் பூசப்பட்டதாகவோ இருத்தல் கூடாது.
– ஆணின் ஆடையை ஒத்ததாக இருக்கக் கூடாது.
– காபிரான மற்றும் பாவியான பெண்களின் ஆடைகளுக்கு ஒப்பாக அமையாதிருத்தல்.
அல்லாஹ் கூறுகிறான் :
நபியே! உமது மனைவிமார்களுக்கும் உமது பெண் பிள்ளைகளுக்கும் முஃமின்களின் பெண்(பிள்ளை)களுக்கும் கூறுவீராக, அவர்கள் தங்கள் பர்தாக்களை தங்கள் மீது போர்த்திக்கொள்வார்கள்! இது அவர்கள் (கண்ணியமானவர்கள் என்று) அறியப்படுவதற்கு மிக சுலபமானதாகும். ஆகவே, அவர்கள் தொந்தரவு செய்யப்பட மாட்டார்கள். அல்லாஹ் மகா மன்னிப்பாளனாக பெரும் கருணையாளனாக இருக்கிறான்.
تقدم
வசனத்தின் பொருள் :
நபியே! நீர் உமது மனைவிகளுக்கும், உமது மகள்களுக்கும், நம்பிக்கையாளர்களின் பெண்களுக்கும், அவர்கள் தங்கள் முகங்களையும், மார்புகளையும், தலைகளையும் மறைப்பதற்காக, தங்கள் தலைகள் மற்றும் முகங்கள் மீது தங்களது மேலாடைகளையும் போர்வைகளையும் இறக்கிக் கொள்ளும்படி நீர் கூறுவீராக. அதனால், அவர்கள் (தங்களை) மறைத்து நடக்கும் பேணுதலானவர்கள் என அறியப்பட்டு, எந்தவொரு தீங்கிற்கும் அல்லது துன்பத்திற்கும் அவர்கள் உள்ளாகாதிருப்பதற்கு இது சுலபமான வழியாகும். அல்லாஹ் மிக்க மன்னிப்பவனாக, மகா கருணையாளனாக இருக்கிறான்; ஏனெனில், முந்திக் கழிந்தவற்றை அவன் உங்களுக்கு மன்னித்து விட்டான். மேலும், ஆகுமானவை (ஹலால்) மற்றும் ஆகாதவை (ஹராம்) எவை என்பதை உங்களுக்குத் தெளிவுபடுத்தியதன் மூலம் உங்கள் மீது கருணை புரிந்துள்ளான்.