Skip to content
ஸூராக்களின் பட்டியல் /

الغَاشِية

الغَاشِية is chapter 88 of the Quran and has 26 verses. This page presents it in full in the Uthmani script, with a verse-by-verse translation of its meaning.

26 வசனங்கள் ஸூரா எண் 88
வசனத்திற்குச் செல்
தமிழ் · Baqavi
بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ

هَلۡ أَتَىٰكَ حَدِيثُ ٱلۡغَٰشِيَةِ

(நபியே! அனைவரையும்) சூழ்ந்து கொள்ளக்கூடிய (மறுமையைப் பற்றிய) செய்தி உமக்குக் கிடைத்ததா?

وُجُوهٞ يَوۡمَئِذٍ خَٰشِعَةٌ

அந்நாளில், சில முகங்கள் இழிவடைந்து இருக்கும்.

عَامِلَةٞ نَّاصِبَةٞ

அவை (தவறான வழியில்) அமல் செய்து (அதிலேயே) நிலைத்திருந்தவை.

تَصۡلَىٰ نَارًا حَامِيَةٗ

கொழுந்துவிட்டு எரியும் நெருப்பிற்கே அவை செல்லும்.

تُسۡقَىٰ مِنۡ عَيۡنٍ ءَانِيَةٖ

(அவை) கொதிக்கின்ற ஓர் ஊற்றிலிருந்து நீர் புகட்டப்படும்.