Skip to content

கருணை காட்டுதல் எனும் நற்குணத்தின் வடிவங்கள் எவை?

الباب / الفصل
قسم الأخلاق

السؤال

س١٤: ما صور خُلق الرحمة؟

கேள்வி 14 : கருணை காட்டுதல் எனும் நற்குணத்தின் வடிவங்கள் எவை?

الجواب

ج:- رحمة كبار السن وتوقيرهم.

  • رحمة صغار السن والأطفال.

في الحديث:

«لَيْسَ مِنَّا مَنْ لَمْ يُوَقِّرْ كَبِيرَنَا، وَيَرْحَمْ صَغِيرَنَا»

رواه أحمد.

  • رحمة الفقير والمسكين والمحتاج.
  • رحمة الحيوان بأن تطعمه ولا تؤذيه.

من ذلك قول النبي عَلَيْهِ الصَّلَاةُ وَالسَّلَامُ:

«تَرَى المُؤْمِنينَ في تَراحُمِهِم وتَوادِّهِم وتَعاطُفِهِم كمَثَلِ الجَسَدِ، إذا اشتَكَى عُضْوٌ تَداعَى لهُ سائِرُ جَسَدِهِ بالسَّهَرِ والحُمَّى»

متفق عليه.

  • وقال رسولُ اللهِ ﷺ:

«الرَّاحِمونَ يَرحَمُهُمُ الرَّحمنُ، ارْحَمُوا أهْلَ الأَرضِ، يَرحَمُكُمْ مَن في السَّماءِ»

رواه أبو داود والترمذي.

பதில் : வயதில் மூத்தோருக்கு கருணை காட்டுவதுடன் அவர்களை மதித்து நடந்து கொள்ளுதல்.

சிறியோர் மற்றும் குழந்தைகளுக்கு இரக்கம் காட்டுதல்.

ஹதீஸில் பின்வருமாறு இடம்பெற்றுள்ளது:

""எங்களில் பெரியோரை மதிக்காதவரும், சிறார்களுக்கு இரக்கம் காட்டாதவரும் எம்மைச் சார்ந்தவரல்லர்"."

(ஆதாரம் : அஹ்மத்)

வரியவர் எளியவர் தேவையுடைவர் ஆகியோருக்கு கருணை காட்டல்.

விலங்கினங்களுக்கு துன்பம் இழைக்காது உணவளிப்பதன் மூலம் கருணை காட்டல்.

இது குறித்து நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் பின்வருமாறு கூறினார்கள் :

"முஃமின்கள் தங்களுக்கு மத்தியில் பரஸ்பரம் அன்பு காட்டுவதிலும் பாசத்தோடு நடந்து கொள்வதிலும் பரிவு காட்டுவதிலும் ஒரு உடலைப் போன்றவராய் காண்பீர். அந்த உடம்பில் ஏதாவது ஒரு உறுப்பிற்கு வலி ஏற்பட்டுவிட்டால் ஏனைய உறுப்புகளும் தூக்கமின்மையாலும் கஷ்டத்தாலும் அவதிப்படுகின்றன".

ஆதராம் : புஹாரி முஸ்லிம்.

நபி (ஸல்) கூறுகிறார்கள் :

"இரக்கம் காட்டுபவர்களுக்கு ரஹ்மானாகிய அல்லாஹ் இரக்கம் காட்டுவான், பூமியிலுள்ளவர்களுக்கு இரக்கம் காட்டுங்கள், வானிலுள்ளவன் உங்களுக்கு இரக்கம் காட்டுவான்".

ஆதாரம் : அபு தாவூத், திர்மிதி.