காலணிகள் மீது மஸ்ஹு செய்வதற்கான நிபந்தனைகள் யாது?
- التصنيف الشرعي
- الفقهالطهارةالمسح على الخفين ونحوهما
- الباب / الفصل
- قسم الفقه
السؤال
س١٣: ما هي شروط صحة المسح على الخفين؟
கேள்வி 13 : காலணிகள் மீது மஸ்ஹு செய்வதற்கான நிபந்தனைகள் யாது?
الجواب
ج:١. أن يلبس الخفين على طهارة، أي بعد وضوء.
لحديث المغيرة رضي الله عنه قال: كنت مع النبي صلى الله عليه وسلم في سفر، فأهويت لأنزع خفيه، فقال:
«دعهما فإني أدخلتهما طاهرتين». فمسح عليهما.
متفق عليه.
- أن يكون الخف طاهرًا، فلا يجوز المسح على النجس.
- أن يكون الخف ساترًا للمحل المفروض غسله في الوضوء.
- أن يكون المسح خلال المدة المحددة، للمقيم غير المسافر: يوم وليلة، وللمسافر: ثلاثة أيام ولياليهن.
لحديث علي رضي الله عنه:
جعل رسول الله صلى الله عليه وسلم ثلاثة أيام ولياليهن للمسافر، ويومًا وليلة للمقيم.
رواه مسلم.
பதில் : 1- ஹுப்பை (காலணிகளை) வுழு செய்ததன் பின் அணிந்திருத்தல் வேண்டும்.
இதற்கு பின்வரும் ஹதீஸ் ஆதாரமாக உள்ளது.முகீரா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்: 'நான் ஒரு பயணத்தின்போது நபி (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அவர்களுடன் இருந்தேன். அவர்கள் (வுழூச் செய்தபோது) அவர்களின் இரண்டு காலுறைகளையும் கழற்றுவதற்குக் குனிந்தேன். அப்போது நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறினார்கள்:'
«அதைவிட்டுவிடுங்கள்; (கால்கள் இரண்டும்) வுழூவுடன் இருக்கும் நிலையில்தான் காலுறைகளை அணிந்தேன்». பின்னர் அவ்விரு காலுறைகளின் மீதும் மஸ்ஹ் செய்தார்கள்.
ஆதராம் : புஹாரி முஸ்லிம்.
- ஹுப் (காலணி) தூய்மையானதாக இருத்தல் வேண்டும். அசுத்தமான பாதணி மீது மஸ்ஹு செய்வது அனுமதிக்கப் பட்டதல்ல.
- ஹுப்பானது வுழுவின் போது காலில் கட்டாயம் கழுவப்பட வேண்டிய பகுதியை மறைத்து இருத்தல் வேண்டும்.
- மஸ்ஹு செய்வது, அனுமதிக்கப்பட்ட காலப்பகுதிக்குள் இருக்க வேண்டும். அதாவது ஊரில் இருப்பவருக்கு ஒரு நாளும் பிரயாணிக்கு மூன்று நாட்களுக்கும் ஆகும்.
அலீ ரழியல்லாஹு அன்ஹு அறிவிக்கின்றார்கள் :
"நபி (ஸல்) அவர்கள் பிரயாணிக்கு மூன்று நாட்களையும், ஊரிலிப்பவருக்கு ஒரு நாளையும் (பாதணியில் மஸ்ஹு செய்ய அனுமதிக்கப்பட்ட காலமாக) ஆக்கினார்கள்".
(ஆதாரம் : முஸ்லிம்.)