Skip to content

'அத்தஹாரா' (சுத்தம்) என்பதை வரைவிலக்கணப்படுத்துக?

الموضوعات
الطهارة
التصنيف الشرعي
الفقهالطهارةتعريف الطهارة
الباب / الفصل
قسم الفقه

السؤال

س1: عرف الطهارة.

கேள்வி 1 : 'அத்தஹாரா' (சுத்தம்) என்பதை வரைவிலக்கணப்படுத்துக?

الجواب

ج:الطهارة: هي رفع الحدث، وزوال الخبث. أي: رفع ما يمنع من الصلاة.

قال النبي صلى الله عليه وسلم:

«مِفْتَاحُ الصَّلَاةِ الطُّهُورُ»

رواه أبو داود.

طهارة من الخبث: وهي أن يزيل المسلم ما وقع من النجاسة على بدنه، أو على ثوبه، أو على البقعة والمكان الذي يصلي فيه.

طهارة من الحدث: وهي التي تكون بالوضوء أو الغسل، بالماء الطهور، أو التيمم لمن فقد الماء، أو تعذر عليه استعماله.

பதில் : 'அத்தஹாரா' என்பது தொடக்கை நீக்கி, அழுக்கை அகற்றுதல் என்பதாகும். அதாவது: தொழுகைக்குத் தடையாக இருப்பதை நீக்குவதாகும்.

நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறினார்கள் :

""தொழுகையின் திறவுகோள் சுத்தமாகும்"."

ஆதாரம் : அபூதாவூத்

அழுக்கை அகற்றி தூய்மைப்படுத்தல் என்பது ஒரு முஸ்லிம் தனது மேனியில் அல்லது ஆடையில் அல்லது தரையில் மற்றும் அவன்தொழுமிடத்தில் ஏற்பட்ட நஜிஸை –அழுக்கு அசுத்தம் போன்றவற்றை –அகற்றுவதாகும்.

தொடக்கிலிருந்து சுத்தமாகுதல் (தொடக்கை நீக்குதல்) என்பது பரிசுத்தமான நீரினால் வுழு செய்தல், மற்றும் குளித்தல். நீர் கிடைக்காவிட்டால் அல்லது நீரைப் பயன்படுத்துவது சிரமமாக இருப்பின் தயம்மும் செய்வதன் மூலம் தொடக்கிலிருந்து விடுபடுவதைக் குறிக்கும் (தொடக்கு என்பது மனிதன் தனது உடலில் உணரக் கூடிய,உடலிருந்து வெளியாகக்கூடிய அசுத்தமானவைகளைக் குறிக்கும். இதிலிருந்து தூய்மை பெற குளித்தல் வுழு செய்தல் அல்லது தயம்மும் செய்தல் போன்ற விடயங்களை அசுத்தத்தின் நிலைக்கேற்ப மேற்கொள்ளுதல் வேண்டும்) (பெயர்பாளர்).