Skip to content

'நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் ஒவ்வொரு தொழுகைக்காகவும் வுழுச் செய்வார்கள்'

அம்ர் இப்னு ஆமிர், அனஸ் இப்னு மாலிக் ரழியல்லாஹு அன்ஹு கூறியதாக அறிவித்துள்ளார்கள் :

'நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் ஒவ்வொரு தொழுகைக்காகவும் வுழுச் செய்வார்கள்' என அனஸ் ரழியல்லாஹு கூறியபோது, 'நீங்கள் எப்படிச் செய்வீர்கள்?' என அனஸ் ரழியல்லாஹுஅவர்களிடம் நான் கேட்டதற்கு, வுழுவை முறிக்கும் செயல்கள் நிகழாமலிருக்கும் போதெல்லாம் ஒரே வுழுவே எங்களுக்குப் போதுமானதாக இருந்தது' என்று அனஸ் ரழியல்லாஹு அன்ஹு கூறினார்'.

كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَتَوَضَّأُ عِنْدَ كُلِّ صَلَاةٍ، قُلْتُ: كَيْفَ كُنْتُمْ تَصْنَعُونَ؟ قَالَ: يُجْزِئُ أَحَدَنَا الْوُضُوءُ مَا لَمْ يُحْدِثْ.

இமாம் புஹாரி இதனைப் பதிவு செய்திருக்கிறார்
சரியானது
விளக்கவுரை

சிறப்பையும்; கூலியையும் அடைந்து கொள்வதற்காக தனது வுழு முறியாமல் இருந்தாலும் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் பர்ழான ஒவ்வொரு தொழுகைக்கும் வுழு செய்பவர்களாக இருந்தார்கள். வுழு முறியாமல் இருக்கும் நிலையில் ஒரே வுழுவினால் அதிகமான பர்ழ் தொழுகைகளை தொழுவதற்கு அனுமதியுண்டு.

சொற்களுக்கான பொருள் (பதவிளக்கம்)

...:

ஹதீஸிலிருந்து பெறப்பட்ட சில பயன்கள்

பூரணத்துவத்தை வேண்டுமுகமாக ஒவ்வொரு தொழுகைக்கும் வுழு செய்வது நபியவர்களின் செயல்சார் வழிமுறையில் அதிகம் இடம்பெற்ற ஒரு விடயமாகும்.

ஒவ்வொரு தொழுகைக்காகவும் வுழூச் செய்வது (ஸுன்னத்தாகும்.) விரும்பத்தக்கதாகும்.

ஒரு வுழூவினால் ஒன்றிற்கு மேற்பட்ட தொழுகைகளை நிறைவேற்றலாம்.

மேற்கோள்கள்

புஹாரி (1/ 53) (214).

மேலதிகமாக (2)

شرح ابن بطّال (1/321).

إرشاد الساري لشرح صحيح البخاري (1/ 285).