Skip to content
ஸூராக்களின் பட்டியல் /

النَّجم

النَّجم is chapter 53 of the Quran and has 62 verses. This page presents it in full in the Uthmani script, with a verse-by-verse translation of its meaning.

62 வசனங்கள் ஸூரா எண் 53
வசனத்திற்குச் செல்
தமிழ் · Baqavi
بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ

وَٱلنَّجۡمِ إِذَا هَوَىٰ

விழுந்து மறையும் நட்சத்திரத்தின் மீது சத்தியமாக!

مَا ضَلَّ صَاحِبُكُمۡ وَمَا غَوَىٰ

(நம் தூதராகிய) உங்கள் தோழர் வழி தவறி விடவுமில்லை; தவறான வழியில் செல்லவுமில்லை.

وَمَا يَنطِقُ عَنِ ٱلۡهَوَىٰٓ

அவர் தன் விருப்பப்படி எதையும் கூறுவதில்லை.

إِنۡ هُوَ إِلَّا وَحۡيٞ يُوحَىٰ

இது அவருக்கு வஹ்யி மூலம் அறிவிக்கப்பட்டதே தவிர (வேறு) இல்லை.

عَلَّمَهُۥ شَدِيدُ ٱلۡقُوَىٰ

(ஜிப்ரயீல் என்னும்) வலுவான ஆற்றலுடையவர் இதை அவருக்குக் கற்றுக் கொடுக்கிறார்.