Skip to content
ஸூராக்களின் பட்டியல் /

الإسرَاء

الإسرَاء is chapter 17 of the Quran and has 111 verses. This page presents it in full in the Uthmani script, with a verse-by-verse translation of its meaning.

111 வசனங்கள் ஸூரா எண் 17
வசனத்திற்குச் செல்
தமிழ் · Omar
بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ

سُبۡحَٰنَ ٱلَّذِيٓ أَسۡرَىٰ بِعَبۡدِهِۦ لَيۡلٗا مِّنَ ٱلۡمَسۡجِدِ ٱلۡحَرَامِ إِلَى ٱلۡمَسۡجِدِ ٱلۡأَقۡصَا ٱلَّذِي بَٰرَكۡنَا حَوۡلَهُۥ لِنُرِيَهُۥ مِنۡ ءَايَٰتِنَآۚ إِنَّهُۥ هُوَ ٱلسَّمِيعُ ٱلۡبَصِيرُ

(மக்காவின்) புனிதமான மஸ்ஜிதிலிருந்து (பைத்துல் முகத்தஸில் உள்ள) அல் மஸ்ஜிதுல் அக்ஸா வரை தன் அடிமை(யாகிய முஹம்மத் நபி)யை இரவில் அழைத்துச் சென்ற (இறை)வன் மிகப் பரிசுத்தமானவன். அ(ந்த மஸ்ஜி)தைச் சுற்றி நாம் அருள் புரிந்தோம். நமது அத்தாட்சிகளிலிருந்து (பலவற்றை) அவருக்கு காண்பிப்பதற்காக அவரை அழைத்து சென்றோம். நிச்சயமாக அவன்தான் நன்கு செவியுறுபவன், உற்று நோக்குபவன் ஆவான்.

وَءَاتَيۡنَا مُوسَى ٱلۡكِتَٰبَ وَجَعَلۡنَٰهُ هُدٗى لِّبَنِيٓ إِسۡرَٰٓءِيلَ أَلَّا تَتَّخِذُواْ مِن دُونِي وَكِيلٗا

இன்னும், மூஸாவிற்கு வேதத்தைக் கொடுத்தோம். மேலும், “நீங்கள் என்னைத் தவிர (எவரையும் உங்கள் தேவைகளுக்கு நீங்கள் பிரார்த்திக்கின்ற) பொறுப்பாளனாக எடுத்துக் கொள்ளாதீர்கள் என்று” இஸ்ராயீலின் சந்ததிகளுக்கு நேர்வழி காட்டக் கூடியதாக அ(ந்த வேதத்)தை ஆக்கினோம்.

ذُرِّيَّةَ مَنۡ حَمَلۡنَا مَعَ نُوحٍۚ إِنَّهُۥ كَانَ عَبۡدٗا شَكُورٗا

நூஹ்வுடன் நாம் (கப்பலில்) ஏற்றி பயணிக்க வைத்தவர்களின் சந்ததிகளே! நிச்சயமாக (நூஹ் ஆகிய) அவர் (அல்லாஹ்விற்கு) அதிகம் நன்றி செலுத்துகிற அடியாராக இருந்தார்.

وَقَضَيۡنَآ إِلَىٰ بَنِيٓ إِسۡرَٰٓءِيلَ فِي ٱلۡكِتَٰبِ لَتُفۡسِدُنَّ فِي ٱلۡأَرۡضِ مَرَّتَيۡنِ وَلَتَعۡلُنَّ عُلُوّٗا كَبِيرٗا

“நிச்சயமாக பூமியில் இரு முறை நீங்கள் விஷமம் செய்வீர்கள்; இன்னும், (இறைவனுக்கு முன்பாக) நிச்சயமாக நீங்கள் பெரும் ஆணவத்துடன் நடந்து கொள்வீர்கள் (-மக்கள் மீது கொடுங்கோலர்களாக, திமிர் பிடித்தவர்களாக ஆட்சி செய்வீர்கள்) என்று இஸ்ராயீலின் சந்ததிகளுக்கு வேதத்தில் அறிவித்தோம்.

فَإِذَا جَآءَ وَعۡدُ أُولَىٰهُمَا بَعَثۡنَا عَلَيۡكُمۡ عِبَادٗا لَّنَآ أُوْلِي بَأۡسٖ شَدِيدٖ فَجَاسُواْ خِلَٰلَ ٱلدِّيَارِۚ وَكَانَ وَعۡدٗا مَّفۡعُولٗا

ஆக, அவ்விரண்டில் முதல் (முறையின்) வாக்கு வந்தபோது கடுமையான பலமு(ம் வீரமும் உ)டைய நமக்குரிய (சில) அடியார்களை உங்கள் மீது அனுப்பினோம். ஆக, அவர்கள் (உங்கள்) வீடுகளுக்கு நடுவில் ஊடுருவிச் சென்றனர். மேலும், (அது) ஒரு நிறைவேற்றப்பட்ட வாக்காக இருந்தது.