17 : 15
مَّنِ ٱهۡتَدَىٰ فَإِنَّمَا يَهۡتَدِي لِنَفۡسِهِۦۖ وَمَن ضَلَّ فَإِنَّمَا يَضِلُّ عَلَيۡهَاۚ وَلَا تَزِرُ وَازِرَةٞ وِزۡرَ أُخۡرَىٰۗ وَمَا كُنَّا مُعَذِّبِينَ حَتَّىٰ نَبۡعَثَ رَسُولٗا
எவர் நேர்வழி செல்வாரோ அவர் நேர்வழி செல்வதெல்லாம் தன் நன்மைக்காகவே. இன்னும், எவர் வழிகெடுவாரோ அவர் வழிகெடுவதெல்லாம் தனக்கெதிராகத்தான். மேலும், பாவியான ஓர் ஆன்மா மற்றோர் ஆன்மாவின் பாவத்திற்கு பொறுப்பாகாது. இன்னும், நாம் ஒரு தூதரை அனுப்பும் வரை (எவரையும்) தண்டிப்பவர்களாக நாம் இருக்கவில்லை.