Skip to content
ஸூராக்களின் பட்டியல் /

الكَهف

الكَهف is chapter 18 of the Quran and has 110 verses. This page presents it in full in the Uthmani script, with a verse-by-verse translation of its meaning.

110 வசனங்கள் ஸூரா எண் 18
வசனத்திற்குச் செல்
தமிழ் · Baqavi
بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ

ٱلۡحَمۡدُ لِلَّهِ ٱلَّذِيٓ أَنزَلَ عَلَىٰ عَبۡدِهِ ٱلۡكِتَٰبَ وَلَمۡ يَجۡعَل لَّهُۥ عِوَجَاۜ

புகழ் அனைத்தும் அல்லாஹ்வுக்குரியதே! அவன்தான் தன் அடியார் (நபி முஹம்மது) மீது இவ்வேதத்தை இறக்கிவைத்தான். அதில் அவன் எத்தகைய (குறைபாட்டையும்) கோணலையும் வைக்கவில்லை.

قَيِّمٗا لِّيُنذِرَ بَأۡسٗا شَدِيدٗا مِّن لَّدُنۡهُ وَيُبَشِّرَ ٱلۡمُؤۡمِنِينَ ٱلَّذِينَ يَعۡمَلُونَ ٱلصَّٰلِحَٰتِ أَنَّ لَهُمۡ أَجۡرًا حَسَنٗا

இது உறுதியான அடிப்படையின் மீதுள்ளது. அல்லாஹ்வுடைய கடினமான வேதனையைப் பற்றி (நிராகரிப்பவர்களுக்கு) அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதற்காகவும், எவர்கள் இதை நம்பிக்கை கொண்டு நற்செயல்கள் செய்கிறார்களோ அவர்களுக்கு (அழகான) நற்கூலி(யாகிய சொர்க்கம்) நிச்சயமாக உண்டென்று நற்செய்தி கூறுவதற்காகவும் (இதை இறக்கிவைத்தான்).

مَّٰكِثِينَ فِيهِ أَبَدٗا

அ(ந்த சொர்க்கத்)தில் அவர்கள் என்றென்றும் தங்கிவிடுவார்கள்.

وَيُنذِرَ ٱلَّذِينَ قَالُواْ ٱتَّخَذَ ٱللَّهُ وَلَدٗا

அல்லாஹ் சந்ததி எடுத்துக்கொண்டான் என்று கூறுபவர்களையும் இது கண்டித்து எச்சரிக்கை செய்கிறது.

مَّا لَهُم بِهِۦ مِنۡ عِلۡمٖ وَلَا لِأٓبَآئِهِمۡۚ كَبُرَتۡ كَلِمَةٗ تَخۡرُجُ مِنۡ أَفۡوَٰهِهِمۡۚ إِن يَقُولُونَ إِلَّا كَذِبٗا

அவர்களுக்கும் அவர்களுடைய மூதாதைகளுக்கும் இதற்குரிய ஆதாரம் ஒரு சிறிதும் இல்லை. இவர்கள் வாயிலிருந்து புறப்படும் இந்த வாக்கியம் மாபெரும் (பாவமான) வாக்கியமாகும்; பொய்யையே தவிர (இவ்வாறு) இவர்கள் (உண்மை) கூறவில்லை.