ஒரு ஜனாஸா வைக்கப்பட்டு, அதை மனிதர்கள் சுமந்து விட்டால், அது ஸாலிஹான (நல்ல) ஜனாஸாவாக இருந்தால், 'என்னை முற்படுத்துங்கள்' என்று கூறும்.
நபி (ஸல்) அவர்கள் கூறியதாக, அபூ ஸஈத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் :
ஒரு ஜனாஸா வைக்கப்பட்டு, அதை மனிதர்கள் சுமந்து விட்டால், அது ஸாலிஹான (நல்ல) ஜனாஸாவாக இருந்தால், 'என்னை முற்படுத்துங்கள்' என்று கூறும். அது நல்லதற்றதாக இருந்தால், 'அதற்கேற்பட்ட கேடே! அதை எங்கு கொண்டு செல்கின்றார்கள்?' என்று கேட்கும். அதன் சப்தத்தை மனிதர்களைத் தவிர அனைத்துமே கேட்கும். அதை மனிதன் கேட்டுவிட்டால், மூர்ச்சையடைந்து விடுவான்.
«إِذَا وُضِعَتِ الجِنَازَةُ وَاحْتَمَلَهَا الرِّجَالُ عَلَى أَعْنَاقِهِمْ فَإِنْ كَانَتْ صَالِحَةً قَالَتْ: قَدِّمُونِي، وَإِنْ كَانَتْ غَيْرَ صَالِحَةٍ قَالَتْ: يَا وَيْلَهَا أَيْنَ يَذْهَبُونَ بِهَا؟ يَسْمَعُ صَوْتَهَا كُلُّ شَيْءٍ إِلَّا الإِنْسَانَ، وَلَوْ سَمِعَهُ صَعِقَ».
இங்கு நபி (ஸல்) அவர்கள், ஒரு ஜனாஸா கட்டிலில் வைக்கப்பட்டு, அதை மனிதர்கள் தமது தோல்களில் சுமந்து விட்டால், அது ஸாலிஹான (நல்ல) ஜனாஸாவாக இருந்தால், தான் தனது முன்னால் காணும் இன்பங்களை நோக்கி, தன்னை முற்படுத்துங்கள் என்று கூறும். அது நல்லதற்றதாக இருந்தால், தனக்கு முன்னால் காணும் வேதனைகள் காரணமாக, மோசமான ஒரு சப்தத்தில், 'அதற்கேற்பட்ட கேடே! அதை எங்கு கொண்டு செல்கின்றார்கள்?' என்று கேட்கும். அதன் சப்தத்தை மனிதர்களைத் தவிர அனைத்துமே கேட்கும். அதை மனிதன் கேட்டுவிட்டால், அந்த சப்தத்தின் அகோரத்தின் காரணமாக மூச்சையடைந்து விடுவான்.
ஸாலிஹான மய்யித், அடக்கம் செய்யப்பட முன்னர் நன்மாராயங்களைக் காணும். நிராகரிப்பாளனோ, அதற்கு நேர்மாற்றமானதைக் காண்பதனால், எரிச்சலடைவான்.
சில சப்தங்களை மனிதர்களைத் தவிர அனைவருமே கேட்பார்கள், மனிதர்களால் அவற்றைக் கேட்க முடியாது.
ஜனாஸாவை பெண்கள் அன்றி, ஆண்கள் சுமந்துசெல்வதே ஸுன்னாவாகும். ஏனெனில், நபியவர்கள் பெண்கள் ஜனாஸாவைப் பின்துயர்ந்து செல்வதைத் தடுத்துள்ளார்கள்.
புஹாரி (2/ 85) (1314).
மேலதிகமாக (8)
بهجة الناظرين شرح رياض الصالحين.
لسليم الهلالي (1/ 513).
نزهة المتقين شرح رياض الصالحين.
لمجموعة من الباحثين (1/ 400).
كنوز رياض الصالحين.
لمجموعة من الباحثين (7/ 122).
شرح رياض الصالحين.
لابن عثيمين (4/ 546).