ஒரு மனிதர் விருப்பமான ஒரு கனவைக் கண்டால், அது அல்லாஹ்விடமிருந்தே வந்துள்ளது. எனவே, அவர் அதற்காக அல்லாஹ்வைப் புகழ்ந்துவிட்டு, அதை (மக்களுக்குக்) கூறவும். அவ்வாறல்லாமல் வெறுக்கும் ஏதாவதொன்றைக் கண்டால், அது ஷைத்தானிடமிருந்தே வரும். அதன் தீங்கை விட்டும் அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடுவதுடன், யாரிடமும் அதைக் கூறாமலிருக்கட்டும். அப்போது, அது அவருக்கு எந்தத் தீங்கையும் ஏற்படுத்தமாட்டாது.
நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறியதைத் தாம் கேட்டதாக அபூ ஸஈத் அல்குத்ரி (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்:
ஒரு மனிதர் விருப்பமான ஒரு கனவைக் கண்டால், அது அல்லாஹ்விடமிருந்தே வந்துள்ளது. எனவே, அவர் அதற்காக அல்லாஹ்வைப் புகழ்ந்துவிட்டு, அதை (மக்களுக்குக்) கூறவும். அவ்வாறல்லாமல் வெறுக்கும் ஏதாவதொன்றைக் கண்டால், அது ஷைத்தானிடமிருந்தே வரும். அதன் தீங்கை விட்டும் அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடுவதுடன், யாரிடமும் அதைக் கூறாமலிருக்கட்டும். அப்போது, அது அவருக்கு எந்தத் தீங்கையும் ஏற்படுத்தமாட்டாது.
«إِذَا رَأَى أَحَدُكُمُ الرُّؤْيَا يُحِبُّهَا فَإِنَّهَا مِنَ اللَّهِ، فَلْيَحْمَدِ اللَّهَ عَلَيْهَا وَلْيُحَدِّثْ بِهَا، وَإِذَا رَأَى غَيْرَ ذَلِكَ مِمَّا يَكْرَهُ، فَإِنَّمَا هِيَ مِنَ الشَّيْطَانِ، فَلْيَسْتَعِذْ مِنْ شَرِّهَا، وَلاَ يَذْكُرْهَا لِأَحَدٍ، فَإِنَّهَا لَنْ تَضُرَّهُ».
தூக்கத்தில் வரும் மகிழ்ச்சியான கனவுகள் அல்லாஹ்விடமிருந்தே வருகின்றன என்பதை நபியவர்கள் கூறிவிட்டு, அதற்காக அல்லாஹ்வைப் புகழ்ந்துவிட்டு, அதை ஏனையோருக்குக் கூறுமாறு அறிவுறுத்துகின்றார்கள். வெறுப்பான, கவலையான ஏதாவதொன்றைக் கண்டால், அது ஷைத்தானிடமிருந்து வரக்கூடியது எனவும், அதை விட்டும் அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடுவதோடு, அதை யாரிடமும் கூறாமல் இருக்கட்டும் எனவும் அறிவுறுத்தியதோடு, அப்போது அது பாதிப்பை ஏற்படுத்தமாட்டாது என்றும் கூறினார்கள். அதாவது, மேற்கூறப்பட்ட அம்சங்களை, கனவினால் ஏற்பட வாய்ப்புள்ள பாதிப்புக்களைத் தடுக்கும் காரணிகளாக அல்லாஹ் வைத்துள்ளான்.
கனவின் வகைகள்: 1. நல்ல கனவுகள்; இவை உண்மையான கனவுகள் மற்றும் அல்லாஹ்விடமிருந்து வரும் நற்செய்திகளாகும். அவை அவர் காணும் கனவாகவோ, அல்லது அவரைப் பற்றி இன்னொருவர் காணும் கனவாகவோ இருக்கலாம். 2. மனக் கற்பனைகள்; அதாவது, மனிதன் விழிப்பில் தனக்குள் கூறிக்கொள்ளும் கற்பனைகள். 3. மனிதனைக் கவலைப்படுத்தும் நோக்கில் ஷைத்தான் உருவாக்கும் பயங்கரமான, பயமுறுத்தவும் கவலையுறவும் செய்யும் கனவுகள்.
நல்ல கனவுகள் விடயத்தில் கூறப்பட்டுள்ளவை சுருக்கமாக மூன்றாகும்: அதற்காக அல்லாஹ்வைப் புகழ்தல், சந்தோசப்படல், தனக்கு வெறுப்பானவர்களுக்கல்லாமல், விருப்பமானவர்களுக்கு மாத்திரம் அதைக் கூறல்.
கெட்ட கனவுகள் விடயத்தில் கூறப்பட்டுள்ள ஒழுக்கங்கள் சுருக்கமாக ஐந்தாகும்: அதன் தீங்கையும், ஷைத்தானின் தீங்கையும் விட்டு அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடல், தூக்கத்தில் இருந்து விழிக்கும் போது இடப்பக்கமாக மூன்று தடவைகள் உமிழ்தல், யாரிடமும் அதைக் கூறாமல் இருத்தல், தொடர்ந்து உறங்க விரும்பினால் ஏற்கனவே உறங்கிய பக்கத்திற்கு மாற்றமான பக்கத்தில் சாய்ந்து உறங்குதல். அப்போது அவை எப்பாதிப்பையும் ஏற்படுத்தமாட்டாது.
இப்னு ஹஜர் (ரஹ்) கூறுகின்றார்கள்: இதற்கான காரணம் என்னவென்றால், ஒருவர் நல்ல கனவை தனக்கு விருப்பமில்லாத ஒருவருக்குக் கூறினால், அவர் குரோதத்தினாலும், பொறாமையினாலும் விருப்பமில்லாத விதத்தில் அதற்கு விளக்கமளிப்பார். சிலவேளை அவ்வாறே நடந்துவிடும். அல்லது முற்கூட்டியே தனக்குக் கவலையை ஏற்படுத்திக் கொள்வார். எனவேதான், தான் விரும்பாதவர்களுக்கு அதைக் கூறவேண்டாம் எனத் தடுக்கப்படுள்ளது.
புதிய அருட்கொடைகள் கிடைக்கும் போது அல்லாஹ்வைப் புகழ்தல் அவை நிலைத்திருப்பதற்கான ஒரு காரணமாகும்.
புஹாரி (9/ 43) (7045).
மேலதிகமாக (10)
كنوز رياض الصالحين.
لمجموعة من الباحثين (11/ 181).
شرح رياض الصالحين.
لابن عثيمين (4/ 370).
تطريز رياض الصالحين.
لفيصل آل مبارك (ص510).
بهجة الناظرين شرح رياض الصالحين.
لسليم الهلالي (2/ 124).
نزهة المتقين شرح رياض الصالحين.
لمجموعة من الباحثين (1/ 657).