Skip to content

எனது உம்மத்தில் ஒரு தரப்பினர் மிகைத்தவர்களாகவே இருப்பார்கள். அவ்வாறே அவர்கள் மிகைத்தவர்களாகவே இருக்கும் நிலையில் அல்லாஹ்வுடைய கட்டளையும் வரும்.

நபி (ஸல்) அவர்கள் கூறியதாக, முகீரா இப்னு சுஃபா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் :

எனது உம்மத்தில் ஒரு தரப்பினர் மிகைத்தவர்களாகவே இருப்பார்கள். அவ்வாறே அவர்கள் மிகைத்தவர்களாகவே இருக்கும் நிலையில் அல்லாஹ்வுடைய கட்டளையும் வரும்.

«لاَ يَزَالُ طَائِفَةٌ مِنْ أُمَّتِي ظَاهِرِينَ، حَتَّى يَأْتِيَهُمْ أَمْرُ اللَّهِ وَهُمْ ظَاهِرُونَ».

இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்.
சரியானது
விளக்கவுரை

இங்கு நபியவர்கள் அறிவிப்பதாவது, எனது உம்மத்தில் ஒரு தரப்பினர் மக்களை மிகைத்தவர்களாகவும், அவர்களை எதிர்ப்பவர்களை வென்றவர்களாகவும் இருப்பார்கள். மறுமை ஏற்பட முன்னர், இவ்வுலகின் இறுதிக் காலங்களில் அவர்களது உயிர்கள் கைப்பற்றப்படும் வரை, அவர்கள் மிகைத்தவர்களாகவே இருப்பார்கள்.

ஹதீஸிலிருந்து பெறப்பட்ட சில பயன்கள்

மிகத் தெளிவான, நபியவர்களின் அற்புதங்களில் ஒன்று. ஏனெனில், இந்தப் பண்பு. - அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும் - நபியவர்களது காலம் தொடக்கம், இன்று வரை இருந்து கொண்டே இருக்கின்றது. இந்த ஹதீஸில் கூறப்பட்டுள்ள, அல்லாஹ்வின் கட்டளை வரும் வரை அவ்வாறே இருக்கும்.

சத்தியத்தில் நிலைத்திருத்தல், அதை நடைமுறைப்படுத்தல், ஆகியவற்றின் சிறப்பும், அதற்காக ஆர்வமூட்டலும்.

மார்க்கம் மிகைத்திருப்பதென்பது இரு வகைப்படும். ஒன்றில், ஆதாரம் மற்றும் வாதங்களால் மிகைத்தல், அல்லது அதிகாரம் மற்றும் ஆயுதத்தால் மிகைத்தல். ஆதாரத்தினால் மிகைத்தல் என்பது நிலையானது. ஏனெனில் இஸ்லாத்தின் ஆதாரம் என்பது அல்குர்ஆனே. அது ஏனைய அனைத்தையும் மிகைத்து, அவற்றின் மீது ஆதிக்கம் செலுத்தக் கூடியது. எனினும், இரண்டாவது வகை மிகைத்தல் ஆன, ஆயுதம் மற்றும் அதிகாரத்தினால் மிகைத்தல் என்பது, இறைவிசுவாசம் மற்றும் பூமியில் வசதி அமைத்துக் கொடுக்கப்படல் ஆகியவற்றிற்கு ஏற்ப நிகழும்.

மேற்கோள்கள்

புஹாரி (9/ 101) (7311).

முஸ்லிம் (3/ 1523) (1921).

மேலதிகமாக (1)

البحر المحيط الثجاج في شرح صحيح الإمام مسلم بن الحجاج (33/ 18).