"இரண்டு முஸ்லிம்கள் சந்தித்து ஒருவருடன் ஒருவர் முஸாபஹா செய்யும் போது, அவர்கள் பிரியும் முன்னரே அவ்விருவரின் (சிறிய) பாவங்கள் மன்னிக்கப்பட்டு விடுகின்றன".
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக அல் பரா ரழியல்லாஹு அன்ஹு அறிவிக்கிறார்கள்:
"இரண்டு முஸ்லிம்கள் சந்தித்து ஒருவருடன் ஒருவர் முஸாபஹா செய்யும் போது, அவர்கள் பிரியும் முன்னரே அவ்விருவரின் (சிறிய) பாவங்கள் மன்னிக்கப்பட்டு விடுகின்றன".
«مَا مِنْ مُسْلِمَيْنِ يَلْتَقِيَانِ فَيَتَصَافَحَانِ إِلَّا غُفِرَ لَهُمَا قَبْلَ أَنْ يَفْتَرِقَا».
ஒரு பாதையில் அல்லது அதுபோன்ற இடத்தில் இரண்டு முஸ்லிம்கள் சந்தித்து, அவர்களில் ஒருவர் மற்றவருக்கு சலாம் கூறி, கைகுலுக்கினால்—அவர்கள் உடலால் பிரியும் முன்போ அல்லது கைகுலுக்கலை முடிக்கும் முன்போ—அவர்களிருவருக்கும் (அவர்களின் பாவங்கள்) மன்னிக்கப்படும் என நபி ﷺ அவர்கள் இந்த ஹதீஸில் குறிப்பிடுகிறார்கள்.
சந்திக்கும் போது கைகுலுக்குவது (முஸ்தஹப்பாகும்) விரும்பத்தக்கதாகும் என்பதுடன் அதற்கான ஊக்குவிப்பும் வழங்கப்பட்டுள்ளமை.
அல்-முனாவி (ரஹிமஹுல்லாஹ்) கூறுகிறார்: 'உடல் நலக்குறைபாடு போன்ற நியாயமான எந்தக் காரணமும் இல்லாத நிலையில், வலது கையை வலது கையில் வைப்பதன் மூலமே இந்த ஸுன்னா நிறைவேறும்.'
ஸலாமைப் பரப்புமாறு ஊக்குவித்தல், மற்றும் ஒரு முஸ்லிம் தனது சக முஸ்லிமுடன் கைகுலுக்குவதற்கான மிகப்பெரிய கூலியை இந்த ஹதீஸ் தெளிவுபடுத்தியுள்ளமை.
இந்த ஹதீஸின் அடிப்படையில் அந்நிய (மஹ்ரம் அல்லாத) பெண்களுடன் கைகுலுக்குவது போன்ற தடைசெய்யப்பட்ட கைகுலுக்கல்கள் விலக்கப் படுகின்றன.
ஸுனன் அபூ தாவூத் (7/ 502) (5212).
ஸுனன் திர்மிதீ (4/ 447) (2727).
ஸுனன் இப்னு மாஜா (4/ 654) (3703).
முஸ்னத் அஹ்மத் (30/ 517) (18547).
மேலதிகமாக (4)
بهجة الناظرين شرح رياض الصالحين.
لسليم الهلالي (2/ 152).
نزهة المتقين شرح رياض الصالحين.
لمجموعة من الباحثين (1/ 680).