Skip to content

'ஒரு உண்மையான முஃமின் மற்றவர்களை குறை கூறபவனாகவோ சபிப்பவனாகவோ மானக்கேடான செயல்களை செய்பவனாகவோ அசிங்கமானவற்றைப் பேசுபவனாகவோ இருக்க மாட்டான்'.

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள் :

'ஒரு உண்மையான முஃமின் மற்றவர்களை குறை கூறபவனாகவோ சபிப்பவனாகவோ மானக்கேடான செயல்களை செய்பவனாகவோ அசிங்கமானவற்றைப் பேசுபவனாகவோ இருக்க மாட்டான்'.

«لَيْسَ الْمُؤْمِنُ بِالطَّعَّانِ وَلاَ اللَّعَّانِ وَلاَ الفَاحِشِ وَلاَ البَذِيءِ».

இதனை இமாம் திர்மிதி பதிவு செய்துள்ளார்
சரியானது
விளக்கவுரை

இந்த ஹதீஸில், முழுமையான ஈமான் உள்ள ஒருவரிடம் காணப்படக்கூடாத சில விடயங்களைப் பற்றி நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் குறிப்பிடுகிறார்கள். ஒரு உண்மையான முஃமின் மக்களின் பரம்பரையை விமர்சிப்பவராகவோ, அதிகமாக சபிப்பவராகவோ, வார்த்தையிலோ செயலிலோ வெட்கமற்ற செயல்களைச் செய்பவராகவோ இருக்க மாட்டார்.

ஹதீஸிலிருந்து பெறப்பட்ட சில பயன்கள்

'இதைச் செய்பவர் ஈமான் கொண்டவர் அல்லர் -ஒரு முஃமின் அல்ல- என்பதைக் குறிக்கும் சொற்றொடர்கள், தடைசெய்யப்பட்ட செயலையோ அல்லது ஒரு கட்டாய விஷயத்தைக் கைவிடுவதையோ குறிக்க மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன. (இந்த ஹதீஸில் குறிப்பிடப்பட்டுள்ள விஷயங்கள் தடைசெய்யப்பட்டுள்ளன என்பதே இதன் பொருள்.)

உடல் உறுப்புகளை - குறிப்பாக நாவை - தீமையிலிருந்து பாதுகாத்துக்கொள்ள வலியுறுத்தியிருத்தல்.

இமாம் சிந்தி (றஹ்) கூறினார்கள்: ஒரு விடயத்தை அதிகம் செய்பவர் என்ற வடிவில் வந்த சொல்லான لَعَّانٌ என்ற வார்த்தையும் (இதன் அர்த்தம் ('அதிகம் சபிப்பவர் அல்லது அதிகம் சாபமிடுபவர்) அதே போன்று ,'طَعَّانٌ அதிகம் குறைசொல்வர் விமர்சிப்பவர் என்ற வார்த்தையும் சபிப்பதற்கும் திட்டுவதற்கும் தகுதியுடையவர்களை தேவையான அளவு கண்டிப்பதற்கு இவ்வாறு செய்வது ஒரு முஃமினின் பண்புகளில் எவ்விதப் பாதிப்பையும் ஏற்படுத்தாது.

மேற்கோள்கள்

ஸுனன் திர்மிதீ (3/ 520) (1977).

மேலதிகமாக (2)

تحفة الأحوذي (6/ 95).

مجموع الفتاوى (12/ 478).