Skip to content
ஸூராக்களின் பட்டியல் /

الأعرَاف

الأعرَاف is chapter 7 of the Quran and has 206 verses. This page presents it in full in the Uthmani script, with a verse-by-verse translation of its meaning.

206 வசனங்கள் ஸூரா எண் 7
வசனத்திற்குச் செல்
தமிழ் · Omar
بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ

الٓمٓصٓ

அலிஃப் லாம் மீம் ஸாத்.

كِتَٰبٌ أُنزِلَ إِلَيۡكَ فَلَا يَكُن فِي صَدۡرِكَ حَرَجٞ مِّنۡهُ لِتُنذِرَ بِهِۦ وَذِكۡرَىٰ لِلۡمُؤۡمِنِينَ

(நபியே! இது) உம் மீது இறக்கப்பட்ட ஒரு வேதமாகும். ஆக, இதன் மூலம் (நீர் மக்களை) எச்சரிப்பதற்கு உம் இதயத்தில் இதில் நெருக்கடி இருக்க வேண்டாம். இன்னும், (இது) நம்பிக்கை கொண்டவர்களுக்கு ஒரு நல்லுபதேசமாகும்.

ٱتَّبِعُواْ مَآ أُنزِلَ إِلَيۡكُم مِّن رَّبِّكُمۡ وَلَا تَتَّبِعُواْ مِن دُونِهِۦٓ أَوۡلِيَآءَۗ قَلِيلٗا مَّا تَذَكَّرُونَ

(உலக மக்களே!) உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்கு இறக்கப்பட்ட (இந்த வேதத்)தை பின்பற்றுங்கள். அதைத் தவிர (நீங்களாக ஏற்படுத்திக்கொண்ட, வழிகேட்டின் பக்கமும் சிலைகளை வணங்குவதின் பக்கமும் உங்களை அழைக்கின்ற உங்கள்) பொறுப்பாளர்க(ளின் வழிகாட்டுதல்க)ளை பின்பற்றாதீர்கள். மிகக் குறைவாகவே நீங்கள் நல்லுணர்வு (-நல்லுபதேசம்) பெறுகிறீர்கள்.

وَكَم مِّن قَرۡيَةٍ أَهۡلَكۡنَٰهَا فَجَآءَهَا بَأۡسُنَا بَيَٰتًا أَوۡ هُمۡ قَآئِلُونَ

இன்னும், எத்தனையோ நகரங்கள், அவற்றை அழித்தோம். ஆக, அவற்றுக்கு நம் தண்டனை இரவில் அல்லது அவர்கள் பகலில் தூங்கிக் கொண்டிருந்தபோது வந்தது.

فَمَا كَانَ دَعۡوَىٰهُمۡ إِذۡ جَآءَهُم بَأۡسُنَآ إِلَّآ أَن قَالُوٓاْ إِنَّا كُنَّا ظَٰلِمِينَ

ஆக, அவர்களுக்கு நம் தண்டனை வந்தபோது அவர்களுடைய கூக்குரல் இருக்கவில்லை, - “நிச்சயமாக நாம் அநியாயக்காரர்களாக இருந்தோம்” என்று அவர்கள் கூறியதைத் தவிர.