7 : 95
ثُمَّ بَدَّلۡنَا مَكَانَ ٱلسَّيِّئَةِ ٱلۡحَسَنَةَ حَتَّىٰ عَفَواْ وَّقَالُواْ قَدۡ مَسَّ ءَابَآءَنَا ٱلضَّرَّآءُ وَٱلسَّرَّآءُ فَأَخَذۡنَٰهُم بَغۡتَةٗ وَهُمۡ لَا يَشۡعُرُونَ
பிறகு, துன்பத்தின் இடத்தில் இன்பத்தை மாற்றினோம். இறுதியாக அவர்கள் (எண்ணிக்கை) அதிகரிக்கவே, “எங்கள் மூதாதைகளை நோயும், சுகமும் (இப்படித்தான்) அடைந்திருக்கிறது” என்று கூறினர். ஆகவே, அவர்கள் உணராமல் இருந்த நிலையில் அவர்களைத் திடீரெனப் பிடித்தோம்.