7 : 80
وَلُوطًا إِذۡ قَالَ لِقَوۡمِهِۦٓ أَتَأۡتُونَ ٱلۡفَٰحِشَةَ مَا سَبَقَكُم بِهَا مِنۡ أَحَدٖ مِّنَ ٱلۡعَٰلَمِينَ
இன்னும், ‘லூத்’ஐ (தூதராக அனுப்பினோம்). அவர் தம் சமுதாயத்தை நோக்கி, “மானக்கேடானதை செய்கிறீர்களா? உலகத்தாரில் ஒருவருமே இதில் உங்களை முந்தவில்லை. (உலகில் எவரும் இதற்கு முன் செய்யாத மானக்கேடான செயலை செய்கிறீர்களா?)” என்று கூறிய சமயத்தை நினைவு கூர்வீராக.