முடிவுகளை வடிகட்டு
339 அட்டைகள்
الموضوعات
الموضوعات (13)
التصنيف الشرعي
Filter ▾
حجم المحتوى4
பதில் : ஸூறதுல் ஹுமஸாவும் அதன் விளக்கவுரையும் :
பேரருளாளன் பேரன்பாளன் அல்லாஹ்வின் பெயரால்.
குறை சொல்லிப் புறம் பேசித் திரியும் ஒவ்வொருவனுக்கும் கேடுதான்.1
அவன் செல்வத்தைத் திரட்டி எண்ணிக்கொண்டிருக்கிறான்., 2
நிச்சயமாக, தன் செல்வம் தன்னை (என்றென்னும் உலகில்) நிலைத்திருக்கச் செய்யுமென்று எண்ணுகிறான்.3
அவ்வாறல்ல! (நிச்சயமாக அவன் மரணிப்பான். பின்னர்) நிச்சயமாக அவன் ‘ஹுதமா' என்னும் நரகத்தில் எறியப்படுவான்.4
(நபியே!) “ஹூதமா” என்றால் என்னவென்று உமக்கு அறிவித்தது எது? 5
அதுதான் மூட்டி விடப்பட்டஅல்லாஹ்வின் நெருப்பாகும். 6
இதயங்கள் வரைச் சென்று பரவுகின்றது 7
நிச்சயமாக அ(ந்த நரகமான)து அவர்கள் மீது மூடப்பட்டுவிடும். (அதிலிருந்து அவர்கள் வெளியேறவே முடியாது.)
நீண்ட கம்பங்களில் அவர்கள் கட்டப்படுவார்கள்). 9﴾
(ஹுமஸா : 1-9).
விளக்கவுரை (தப்ஸீர்) :
மக்களைப் பற்றி அதிகம் புறம்பேசி குறைகூறித் திரிபவர்களுக்கு கடும் வேதனையும் கேடும்தான் உண்டாகும்.
அவனின் முழு ஈடுபாடும் - நோக்கும்_அவனது செல்வத்தை சேகரிப்பதும் அதனை எண்ணி எண்ணி பாதுகாப்பதும்தான். அதனைத் தவிர வேறுஈடுபாடுஅவனுக்கு இல்லை.
தான் சேகரித்த செல்வங்கள் தன்னை மரணத்திலிருந்து காப்பாற்றும் என்றும் இவ்வுலக வாழ்க்கையில் நிரந்தரமாக வாழ முடியும் என்றும் அவன் எண்ணுகிறான்.
இந்த மடையன் எண்ணுவது போலல்ல விடயம். தன்னில் வீசப்படும் அனைத்தையும் தனது கடுமையான சக்தியின் காரணமாக நசுக்கி உடைத்து விடும் நரக நெருப்பில் அவன் நிச்சயம் வீசப்படுவான்.
-தூதரே!- தன்னில் எறியப்படும் அனைத்தையும் நசுக்கிவிடும் நரக நெருப்பு என்னவென்று உமக்கு அறிவித்தது எது?
நிச்சயமாக அது எரியக்கூடிய அல்லாஹ்வின் நெருப்பாகும்.
அது மனிதனின் உடலிலிருந்து இதயம் வரை ஊடுருவிச் செல்லக்கூடியதாகும்.
நிச்சயமாக அது அதில் வேதனை செய்யப்படுபவர்களின் மீது மூடப்பட்டிருக்கும்.
அவர்களால் அதிலிருந்து வெளியேற முடியாத அளவுக்கு அவைகள் நீளமான கம்பங்களில் கட்டப்பட்டிருக்கும்.
பதில்: ஸூறதுல் பீலும் அதற்கான தப்ஸீர் விளக்கமும் :
பேரருளாளன் பேரன்பாளன் அல்லாஹ்வின் பெயரால்.
யானைப் படையினருடன் உம் இறைவன் எப்படி நடந்து கொண்டான் என்பதை நீர் பார்க்கவில்லையா?1
அவர்களுடைய சூழ்ச்சியை (அவன்) வீணாக ஆக்கவில்லையா? 2
இன்னும், அவர்கள் மீது பறவைகளை பல கூட்டங்களாக அனுப்பினான் 3
அவர்களை சுடப்பட்ட களிமண்ணின் கல்லைக் கொண்டு அவை எறிந்தன 4.
அதனால். மெல்லப்பட்ட வைக்கோலைப் போன்று உமது இறைவன் அவர்களை ஆக்கினான். 5
(அல்பீல் : 1-5).
விளக்கவுரை (தப்ஸீர்) :
-தூதரே!- அப்ரஹாவும் அவனது தோழர்களான யானைப் படையினரும் கஅபாவை இடிக்க நாடியபோது உமது இறைவன் அவர்களை என்ன செய்தான் என்பதை நீர் அறியவில்லையா?
கஃபாவை இடிப்பதற்கான அவர்களின் தீய சூழ்ச்சியை(சதித்திட்டத்தை) அல்லாஹ் தோல்வியடையச் செய்தான். அதனால் கஃபாவை விட்டும் மக்களைத் திருப்பிவிட வேண்டும் என்ற அவர்களின் ஆசை நிறைவேறவில்லை. அதில் எதனையும் அவர்களால் தொடக்கூட முடியவில்லை.
அவர்கள் மீது அல்லாஹ் பறவைகளை அனுப்பினான். அவை கூட்டங் கூட்டமாக அவர்களை நோக்கி வந்தன.
சுடப்பட்ட களிமண் கற்களை அவர்கள் மீது அவை எறிந்தன.
அல்லாஹ் அவர்களை விலங்குகள் தின்று மிதித்துவிட்ட வைக்கோலைப் போன்று ஆக்கிவிட்டான்.
பதில்: ஸூறதுல் குறைஷும் அதற்கான தப்ஸீர் விளக்கமும் :
பேரருளாளன் பேரன்பாளன் அல்லாஹ்வின் பெயரால்.
குறைஷிகளுக்கு (பிரயாணத்தின் மீது) விருப்பமுண்டாக்கி,
மாரி காலத்துடையவும் கோடைக்காலத்துடையவும் பிரயாணத்தில் அவர்களுக்கு மன விருப்பத்தை உண்டாக்கியமைக்காக-
இஅதனால். ந்த கஅபாவின் அதிபதியை அவர்கள் வணங்கவும் 3
அவன் (அவர்களை) பசியிலிருந்து பாதுகாத்து அவர்களுக்கு உணவளித்தான். இன்னும், (எதிரிகளின்) பயத்திலிருந்து அவர்களை பாதுகாத்தான்.
(குரைஷ் : 1 - 4)
விளக்கவுரை (தப்ஸீர்) :
இதன் கருத்தாவது, குளிர்கால பயணத்தையும், கோடைகால பயணத்தையும் அவர்கள் விரும்பிக் கைகொண்டிருந்ததேயாகும்.
அவர்கள் அச்சமின்றி யமனை நோக்கிச் செல்லும் குளிர்காலப் பயணத்தையும் ஷாம் தேசத்தை நோக்கிச் செல்லும் கோடைகாலப் பயணத்தையும்.
ஆகவே அவர்கள் இந்த இல்லத்தின் இறைவனான அல்லாஹ்வை மட்டுமே வணங்கட்டும். அவன்தான் அவர்களுக்கு இந்தப் பயணத்தை இலகுபடுத்திக் கொடுத்தான். அவனுக்கு இணையாக அவர்கள் யாரையும் ஆக்க வேண்டாம்.
அறபுகளின் உள்ளங்களில் ஹரமைக் குறித்தும் அங்கு வசிப்பவர்களைக் குறித்தும் கண்ணியத்தை ஏற்படுத்தியதன் விளைவாக, அவன்தான் அவர்களுக்குப் பசிக்கு உணவளித்தான்; மேலும் அச்சத்திலிருந்தும் அவர்களுக்கு அபயமளித்தான்.
பதில் : ஸூறதுல் மாஊனும் அதன் விளக்கமும் :
பேரருளாளன் பேரன்பாளன் அல்லாஹ்வின் பெயரால்.
(நபியே!) கூலி கொடுக்கும் நாளைப் பொய்யாக்குபவனை நீர் (கவனித்துப்) பார்த்தீரா?
ஆக, அத்தகையோனே அநாதைகளை (ஈவிரக்கமின்றி) விரட்டுகிறான். . 2
அவன் ஏழைகளுக்கு (உணவளிக்காததுடன்) உணவளிக்கும்படி (பிறரைத்) தூண்டுவதுமில்லை.3
இன்னும், (கவனமற்ற) தொழுகையாளிகளுக்குக் கேடுதான் 4
அவர்கள் எத்தகையோர் என்றால் தம் தொழுகையில் பராமுகமாக(வும், அசிரத்தையாக)வும் இருப்போர்.5
அவர்கள் (நற்காரியங்களை) பிறர் பார்ப்பதற்காக செய்கிறார்கள் 6
இன்னும், அற்ப பொருளை(யும் பிறருக்கு தானமாக அல்லது இரவலாகக் கொடுக்காது) தடுக்கிறார்கள்.
(ஸூறதுல் மாஊன் 1-7) (கைமாறாகப் பரிமாறப்படும் சிறு பொருட்கள்).
விளக்கவுரை (தப்ஸீர்) :
மறுமை நாளில் கூலி கொடுக்கப்படுவதை மறுப்பவனை உமக்குத் தெரியுமா?
அவன்தான் அநாதைகளின் தேவைகளை நிறைவேற்றாமல் கடுமையான முறையில் அவர்களைத் தள்ளிவிடுபவன்.
அவன் தன்னையோ, மற்றவர்களையோ ஏழைகளுக்கு உணவளிக்குமாறு தூண்டுவதுமில்லை.
தொழுகையாளிகளுக்கு அழிவும் வேதனையும் உண்டாகும்.
அவர்கள் தம் தொழுகையைவிட்டு அலட்சியமாக இருக்கிறார்கள். அதன் நேரம் முடியும் வரை அதனைப் பொருட்படுத்தாமல் இருக்கிறார்கள்.
அவர்கள் தங்களின் தொழுகையையும் செயல்பாடுகளையும் மக்களுக்குக் காட்டுவதற்காகவே செய்கிறார்கள். அல்லாஹ்வுக்காக மட்டும் அமல்களை செய்வதில்லை.
உதவுவதால் தங்களுக்கு எவ்விதப் பாதிப்பையும் ஏற்படுத்தாதவற்றினாலும் கூட மற்றவர்களுக்கு உதவுவதை தடுக்கிறார்கள்.
பதில் : ஸூறதுல் கவ்ஸரும் அதன் விளக்கவுரையும் :
பேரருளாளன் பேரன்பாளன் அல்லாஹ்வின் பெயரால்.
இன்னா அஃதய்னா கல்கவ்ஸர் 1((நபியே!) நிச்சயமாக நாம் கவ்ஸரை (எண்ணற்ற நன்மைகளை) உமக்குக் கொடுத்திருக்கின்றோம். இதன் கருத்து :
ஆகவே, உம் இறைவனுக்காகத் தொழுவீராக. இன்னும், (அவனுக்காகவே) அறுத்துப் பலியிடுவீராக! 2
நிச்சயமாக உம் பகைவன் (எவனோ) அவன்தான் சந்ததியற்றவன் 3﴾
(அல் கவ்ஸர்: 1-3)
விளக்கவுரை (தப்ஸீர்) :
-தூதரே!- நிச்சயமாக நாம் உமக்கு ஏராளமான நன்மைகளை வழங்கியுள்ளோம். அவற்றுள் சுவனத்தில் கிடைக்கும் கவ்ஸர் என்னும் நதியும் ஒன்று.
இந்த அருட்கொடைக்காக அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்துவீராக. இணைவைப்பாளர்கள் பலியிடுவதன் மூலம் தமது சிலைகளை நெருங்குவதற்கு மாறாக அவனுக்கு மட்டுமே தொழுது, அறுத்துப் பலியிடுவீராக.
நிச்சயமாக உம்மை வெறுப்பவன்தான் எல்லா நன்மைகளையும் இழந்தவனாவான். அவன் மறக்கப்பட்டுவிட்டான். அவன் நினைவுகூறப்பட்டாலும் தீய முறையிலேயே நினைவுகூறப்படுகிறான்.
பதில் : ஸூறதுல் காபிரூனும் அதன் விளக்கமும்:
பேரருளாளன் பேரன்பாளன் அல்லாஹ்வின் பெயரால்.
(நபியே!) நீர் கூறுவீராக: நிராகரிப்போரே!1
நீங்கள் வணங்குவதை நான் வணங்க மாட்டேன் 2.
இன்னும், நான் வணங்குகிறவனை நீங்கள் வணங்குபவர்களாக இல்லை.
இன்னும்,நீங்கள் வணங்குபவற்றை நான் வணங்குபவனுமல்லன் 4
உங்கள் (வழிபாடுகளுக்குரிய) கூலி உங்களுக்குக் கிடைக்கும். இன்னும், எனது (வழிபாடுகளுக்குரிய) கூலி எனக்குக் கிடைக்கும்.
நிராகரிப்பாளர்கள்
விளக்கவுரை (தப்ஸீர்) :
-தூதரே!- நீர் கூறுவீராக: “அல்லாஹ்வை நிராகரிப்பவர்களே!”
நீங்கள் வணங்கும் சிலைகளை நான் தற்போதும் எதிர்காலத்திலும் ஒரு போதும் வணங்கமாட்டேன்.
நான் வணங்கும் அல்லாஹ் ஒருவனை நீங்கள் வணங்கக்கூடியவர்கள் அல்ல.
நீங்கள் வணங்கும் சிலைகளை நான் வணங்கக்கூடியவன் அல்ல.
உங்களுக்கு நீங்கள் உங்களுக்காக உருவாக்கிக் கொண்ட மார்க்கம். எனக்கு அல்லாஹ் என்மீது இறக்கிய மார்க்கம்.
பதில் : ஸூறதுன்னஸ்ரும் அதன் விளக்கவுரையும் :
பேரருளாளன் பேரன்பாளன் அல்லாஹ்வின் பெயரால்.
(நபியே! உமக்கு) அல்லாஹ்வுடைய உதவியும், (மக்காவின்) வெற்றியும் கிடைத்து, 1
அல்லாஹ்வுடைய மார்க்கத்தில் மக்கள் கூட்டம் கூட்டமாக நுழைவதையும் நீர் கண்டால்,, 2
ஆக, உம் இறைவனின் புகழைத் துதித்து தூய்மைப்படுத்துவீராக! இன்னும், அவனிடம் மன்னிப்புக் கோருவீராக! நிச்சயமாக அவன் மகா மன்னிப்பாளனாக, தவ்பாவை அங்கீகரிப்பவனாக இருக்கிறான்.3
(அந்நஸ்ர்: 1-3)
விளக்கவுரை (தப்ஸீர்) :
-தூதரே!- உம் மார்க்கத்திற்கு அல்லாஹ்வின் உதவியும் அதன் கண்ணியமும் வந்து, மக்கா வெற்றி நிகழும் போது.
இஸ்லாத்தில் மக்கள் கூட்டம் கூட்டமாக நுழைவதை நீர் காணும் போது.
அது நீர் அனுப்பப்பட்ட பணி முடிவடைவதற்கான அடையாளம் என்பதையும், உமது தவணை முடிவடைந்து உமது இறைவனை நீர் சந்திக்கும் காலம் நெருங்கிவிட்டதற்கான அடையாளம் என்பதையும் அறிந்துகொள்வீராக. எனவே, உதவி மற்றும் வெற்றி எனும் அருள் கிடைத்தமைக்கு நன்றி செலுத்தும் முகமாக உமது இறைவனைப் புகழ்ந்து துதி செய்வீராக. மேலும் அவனிடம் மன்னிப்புக் கோருவீராக. நிச்சயமாக அவன் அடியார்களின் பாவமன்னிப்பை ஏற்று அவர்களை மன்னிக்கக் கூடியவனாக இருக்கின்றான்.
பதில் : ஸூறதுல் மஸதும் அதன் விளக்கவுரையும் :
பேரருளாளன் பேரன்பாளன் அல்லாஹ்வின் பெயரால்.
அபூலஹபின் இரு கைகளும் நாசமடையட்டும் அவனும் அழியட்டும்,1
அவனுடைய செல்வமும் அவன் சம்பாதித்ததும் அவனுக்குப் பலனளிக்கவில்லை. (அல்லாஹ்வின் தண்டனையை அவனை விட்டும் தடுக்கவில்லை.)
மறுமையில் அவன் கொழுந்துவிட்டெரியும் நெருப்பில் நுழைவான். 3
இன்னும், (விறகு சுமப்பவளான அவனுடைய மனைவியும்(_அந்நரகில் நுழைவாள்).. 4
அவளுடைய கழுத்தில் முறுக்கேறிய ஈச்சங்கயிறு ஒன்று இருக்கும்;(அதனால் அவளும் அழிவாள்).
(அல்மஸத் : 1-5).
விளக்கவுரை (தப்ஸீர்) :
நபி (ஸல்) அவர்களின் பெரியதந்தையான அபூலஹப் பின் அப்துல் முத்தலிபின் நஷ்டமான செயலினால் அவனது இரு கரங்களும் அழிந்துவிட்டன. ஏனெனில் அவன் நபி (ஸல்) அவர்களைத் துன்புறுத்திக் கொண்டிருந்தான். அவனது முயற்சி வீணாகிவிட்டது.
அவனது செல்வமும் பிள்ளைகளும் அவனுக்கு என்ன பயனை கொடுத்தது? அவனின் செல்வம் அவனை விட்டும் வேதனையைத் தடுக்கவுமில்லை. இறையருளையும் அவனுக்குப் பெற்றத்தரவில்லை.
அவன் மறுமை நாளில் கொழுந்துவிட்டெரியும் நெருப்பில்பிரவேசிப்பான். அதன் வெப்பத்தை அனுபவிப்பான்.
நபி (ஸல்) அவர்கள் செல்லும் பாதையில் முட்களைப் போட்டுத் தொல்லையளித்துக் கொண்டிருந்த அவனது மனைவியான உம்மு ஜமீல் அதில் நுழைவாள்.
அவளது கழுத்தில் மிகவும் இருக்கமாக திரிக்கப்பட்ட கயிறு கட்டப்பட்டிருக்கும். அவள் அதன் மூலம் நரகத்தின்பால் இழுத்துச் செல்லப்படுவாள்.
பதில் : ஸூறதுல் இக்லாஸும்; அதன் விளக்கவுரையும் :
பேரருளாளன் பேரன்பாளன் அல்லாஹ்வின் பெயரால்.
1(நபியே!) நீர் கூறுவீராக: அவன்_ “அல்லாஹ்” ஒருவனே!1
அல்லாஹ்தான் நிறைவான தலைவன் (-எல்லா உயர் தகுதிகளையும் உடையவன், எக்குறையுமற்றவன், எல்லாப் படைப்புகளின் தேவைகளையும் நிறைவேற்றுகிறவன், எத்தேவையுமற்றவன், உண்மையானவன், நிறைவானவன்) 2
(அவன் யாரையும்) பெற்றெடுக்கவில்லை. இன்னும், அவன் (யாராலும்) பெற்றெடுக்கப்படவுமில்லை. (ஆகவே, அவனுக்கு குழந்தையுமில்லை, தந்தையுமில்லை.)3
இன்னும், அவனுக்கு நிகராக ஒருவருமில்லை.
(ஸூறத்துல் இஹ்லாஸ்: 1-4
விளக்கவுரை (தப்ஸீர்) :
-நபியே!- நீர் கூறுவீராக: அவன் அல்லாஹ், அவனைத்தவிர வேறு இறைவன் இல்லை.
அதாவது படைப்புகளின் தேவைகள் அவனை நோக்கியே இருக்கிறது.
எனவே அவனுக்கு மகனும் இல்லை; தந்தையும் இல்லை.
அவனின் படைப்பில் அவனுக்கு ஒப்பாக எதுவும் எவருமில்லை.
பதில் : ஸூறதுல் பலகும் அதன் விளக்கவுரையும் :
பேரருளாளன் பேரன்பாளன் அல்லாஹ்வின் பெயரால்.
(நபியே!) நீர் கூறுவீராக: வைகறையின் இரட்சகனிடம் நான் பாதுகாவல் தேடுகிறேன்.1
அவன் படைத்தவற்றின் தீங்கைவிட்டும் 2.
இன்னும், காரிருள் படரும்போது இரவின் தீங்கை விட்டும்,
இன்னும், முடிச்சுகளில் ஊதுகிற சூனியக்காரிகளின் தீங்கை விட்டும்,
பொறாமைக்காரன் பொறாமைப்படும்போது, (அந்த) பொறாமைக்காரனின் தீங்கை விட்டும் (பாதுகாப்புத் தேடுகிறேன்). 5﴾
(அல்பலக் : 1-5)
விளக்கவுரை (தப்ஸீர்) :
-தூதரே!- நீர் கூறுவீராக: நான் அதிகாலையின் இறைவனிடம் பாதுகாவல் தேடுகிறேன்.
தீங்கு விளைவிக்கும் படைப்புகளின் தீங்குகளிலிருந்தும்.
இரவில் வெளிப்படும் உயிரினங்கள், கொள்ளையர்கள் ஆகியோரின் தீங்குகளிலிருந்தும் அல்லாஹ்விடம் பாதுகாவல் தேடுகிறேன்.
முடிச்சுகளில் மந்திரித்து ஓதும் சூனியக்கார பெண்களின் தீங்கிலிருந்தும் பாதுகாவல் தேடுகிறேன்.
மக்களுடன் வெறுப்புக் கொண்டு அவர்களுக்கு அல்லாஹ்வினால் வழங்கப்பட்டுள்ள அருள்கள் அழிந்து விட வேண்டும் என பொறாமை கொள்ளும் பொறாமைக்காரனின் கெடுதியை விட்டும் நான் பாதுகாப்புத் தேடுகிறேன்.
பதில் : ஸூறதுன்னாஸும் விளக்கவுரையும் :
பேரருளாளன் பேரன்பாளன் அல்லாஹ்வின் பெயரால்.
(நபியே!) நீர் கூறுவீராக: மனிதர்களின் இரட்சகனிடம் நான் பாதுகாவல் தேடுகிறேன்
(அவன்தான்) மனிதர்களின் (உண்மையான) அரசன். 2
(அவனே) மனிதர்களின் வணக்கத்திற்குரிய உண்மையான இறைவன்.3
வீணான மனக்குழப்பங்களை, சந்தேகங்களை ஏற்படுத்தக்கூடியவனும் , (அல்லாஹ்வின் பெயரைக் கூறும்போது) மறைந்துவிடக் கூடியவனுமாகிய ஷைத்தானின் தீங்கை விட்டும் (பாதுகாப்புத் தேடுகிறேன்).
அவன் மக்களுடைய நெஞ்சங்களில் வீண் எண்ணங்களை ஏற்படுத்துகிறான் 5
(இத்தகையோர்) ஜின்களில் மற்றும் மனிதர்களில் இருக்கின்றனர்.
ஸுறத்துன்னாஸ் :(1-6)
விளக்கவுரை (தப்ஸீர்) :
-நபியே!- நீர் கூறுவீராக: நான் மனிதர்களின் இரட்சகனிடம் பாதுகாப்பும் அடைக்கலமும் தேடுகிறேன்.
அவன் நாடியவிதத்தில் அவர்களின் விவகாரங்களை கையாள்கிறான். அவனைத் தவிர அவர்களுக்கு வேறு அரசன் யாருமில்லை.
அவர்களின் உண்மையான வணக்கத்திற்குரியவன், அவனைத் தவிர அவர்களுக்கு உண்மையாக வணக்கத்திற்குத் தகுதியானவன் யாரும் இல்லை.
மனிதர்களின் உள்ளங்களில் ஊசலாட்டங்களை ஏற்படுத்தும் ஷைத்தானின் தீங்கை விட்டும்.
அவன் மனிதர்களின் உள்ளங்களில் ஊசலாட்டத்தை ஏற்படுத்துகிறான்.
இவ்வாறு தீய எண்ணங்களை ஏற்படுத்துவோர் ஜின்களிலும் மனிதர்களிலும் உள்ளனர்.
பதில் : அமீருல் முஃமினீன் அபூ ஹப்ஸ் உமர் இப்னுல் கத்தாப் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதை தான் கேட்டதாக அறிவிக்கிறார்கள் :
'செயல்கள் அனைத்தும் எண்ணங்களைப் பொருத்தே அமைகின்றன. ஒவ்வொருவருக்கும் அவர் எண்ணியதற்கேற்பவே கூலி கிடைக்கிறது. எவரின் ஹிஜ்ரத் ( தேசம் துறந்து செல்லல்) அல்லாஹ்வையும் அவனின் தூதரையும் நோக்காகக் கொண்டமைந்தால் அவரின் ஹிஜ்ரத் அல்லாஹ்வுக்கும் அவனின் திருத்தூதருக்குமானதாக அமையும். எவரின் ஹிஜ்ரத் உலக நலன்களை அடைந்து கொள்வதை நோக்காகக் கொண்டிருந்தால் அல்லது ஒரு பெண்ணை திருமணம் முடிக்கவேண்டும் என்றிருந்தால். அவரின் ஹிஜ்ரத் அதற்குரியதாகவே அமையும்'.
(ஆதாரம் : புஹாரி, முஸ்லிம்).
இந்த ஹதீஸிலிருந்து பெறப்படும் பயன்கள் :
- எல்லா அமல்களுக்கும் நிய்யத் - அவசியமாகும். தொழுகை நோன்பு ஹஜ் மற்றும் ஏனைய எல்லா வணக்களுக்கும் நிய்யத் என்பது அவசியமாகும்.
- அல்லாஹ்வுக்காக நிய்யத் வைப்பதில் மனத்தூய்மையை கடைப்பிடிப்பது அவசியமாகும்.
பதில் : நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக உம்மு அப்தில்லாஹ் உம்முல் முஃமினீன் ஆஇஷா ரழியல்லாஹு அன்ஹா அறிவிக்கிறார்கள் :
'எமது இந்த மார்க்த்தில் இல்லாத புதிய ஒரு விடயத்தை மார்க்கமாக யார் உண்டாக்குகிறானோ அவருடைய அந்தப் புதுமை நிராகரிக்கப்படும்'.
(ஆதாரம் : புஹாரி, முஸ்லிம்).
இந்த ஹதீஸிலிருந்து பெறப்படும் பயன்கள் :
- மார்க்கத்தில் நூதன அனுஷ்டானங்கள் - புதுமைகள் -உருவாக்கப்படுவதை தடை செய்தல்.
- மார்க்கம் என்ற பெயரில் புதிதாக உருவாக்கப்பட்ட செயல்கள் யாவும் ஏற்றுக்கொள்ளபடாது, அவைகள் நிராகரிக்கப்பட வேண்டியவைகளாகும்.
பதில் : அன்உமரப்பனல் கத்தாப் ரழியல்லாஹு அன்ஹு கால உமர் இப்னுல் கத்தாப் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள் :
பைனமா நஹ்னு ஜுலூஸுன் இண்ட ரஸூலில்லாஹி ﷺ தாத யவ்மின், இத் தலஅ அலைனா ரஜுலுன் ஷதீது பயாதில் லிபாஸி, ஷதீது ஸவாதிஷ் ஷஅ்ரி, லா யுரா அலைஹி அஸருஸ் ஸஃபரி, வலா யஅ்ரிஃபுஹு மின்னா அஹத். ஹத்தா ஜலஸ இலன்னபிய்யி ﷺ, ஃபஅஸ்னத ருக்பதஹு இலா ருக்பதைஹி, வவளஅ கஃப்பைஹி அலா ஃபகிதைஹி, வகால: “யா முஹம்மது! அக்பிர்னீ அனில் இஸ்லாம்.” ஃபகால லஹு: “அல்இஸ்லாமு: அன் தஷ்ஹத அன் லா இலாஹ இல்லல்லாஹு, வஅன்ன முஹம்மதன் ரஸூலுல்லாஹி, வதுகீமஸ்ஸலாத், வதுஃத்திஸ்ஸகாத், வதஸூம ரமளான், வதஹுஜ்ஜல் பைத இனிஸ்ததஅ்த இலைய்ஹி ஸபீலா.” கால: “ஸதக்த.” ஃபஅஜிப்னா லஹு யஸ்அலுஹு வயுஸத்திகுஹு. கால: “அக்பிர்னீ அனில் ஈமான்.” கால: “அன் துஃமின பில்லாஹி, வமலாஇகதிஹி, வகுதுபிஹி, வருஸுலிஹி, வல்யவ்மில் ஆகிரி, வதுஃமின பில்கதரி கைரிஹி வஷர்ரிஹி.” கால: “ஸதக்த.” கால: “ஃபஅக்பிர்னீ அனில் இஹ்ஸான்.” கால: “அன் தஅ்புதல்லாஹ கஅன்னக தராஹு, ஃபஇல்லம் தகுன் தராஹு, ஃபஇன்னஹு யராக்க.” கால: “ஃபஅக்பிர்னீ அனிஸ்ஸாஅஹ்.” கால: “மல்மஸ்ஊலு அஃலமு மினஸ்ஸாஇல்.” கால: “ஃபஅக்பிர்னீ அன் அமாராதிஹா.” கால: “அன் தலிதல் அமது ரப்பதஹா, வஅன் தரல் ஹுஃபாதல் உராதல் ஆலத ரிஆஷ்ஷாஇ, யததாவலூன ஃபில்புன்யான்.”ஸும்மன்தலக ஃபலபிஸ மல்லிய்யன்.ஸும்ம கால: “யா உமர்! அதத்ரீ மனிஸ்ஸாஇல்?”கல்து: “அல்லாஹு வரஸூலுஹு அஃலம்.”கால: “ஃபஇன்னஹு ஜிப்ரீல், அதாகும் யுஅல்லிமுகும் தீனகும்.” கருத்து : ஒரு நாள் நாங்கள் இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடன் உட்கார்ந்திருந்தோம். அப்போது மிக வெண்மையான ஆடை அணிந்த, மிகவும் கருப்பான தலைமுடியையுடைய ஒரு மனிதர் எங்கள் முன் வந்து நின்றார். பயணம் செய்ததற்கான அறிகுறிகள் எதுவும் அவரிடம் தென்படவில்லை. எங்களில் யாருக்கும் அவரைத் தெரியாது. அவர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் அருகில் சென்று, தனது முழங்கால்களை நபியவர்களின் முழங்கால்களோடு சேர்த்து, தனது இரு கைகளையும் தன் தொடைகள் மீது வைத்து அமர்ந்தார். பின்னர், 'முஹம்மதே, இஸ்லாத்தைப் பற்றி எனக்குச் சொல்லுங்கள்' என்றார். அதற்கு அவர்கள், 'இஸ்லாம் என்பது உண்மையாக வணங்கப்படத் தகுதியானவன் அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லையென்றும், முஹம்மது அல்லாஹ்வின் தூதர் என்றும் சாட்சியம் கூறுவது, தொழுகையை நிறைவேற்றுவது, ஸகாத் கொடுப்பது, ரமழான் மாதத்தில் நோன்பு நோற்பது, உங்களால் முடிந்தால் ஹஜ் செய்வது இவைகளாகும்' என்றார்கள். இதற்கு அவர், 'நீங்கள் சரியாகவே சொன்னீர்கள்' என்றார். அவர் கேள்வி கேட்பதும் அதனை அவரே உண்மைப்படுத்துவதும் எங்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. பின்னர் அவர், 'ஈமான் குறித்து எனக்குச் சொல்லுங்கள்' என்றார். 'அது அல்லாஹ்வின் மீதும், அவனது வானவர்கள், அவனது வேதங்கள், அவனது தூதர்கள், இறுதி நாள் மீதும் நம்பிக்கை கொள்வதும், மேலும் நன்மையும் தீமையும் இறை விதியின்படியே நடக்கின்றன என்று நம்புவதுமாகும்' என்று கூறினார்கள். இதைக் கேட்ட அவர், 'நீங்கள் சரியாகவே சொன்னீர்கள்' என்றார். அதனைத் தொடர்ந்து அவர், 'இஹ்ஸான் பற்றி எனக்குச் சொல்லுங்கள்' என்றார். 'நீங்கள் அல்லாஹ்வை நேரில் பார்ப்பது போன்று வணங்குவதாகும். நீங்கள் அவனைப் பார்க்காத போதிலும் அவன் மெய்யாகவே உங்களைப் பார்த்துக் கொண்டுதான் இருக்கின்றான்' எனச் சொன்னார்கள். பின்னர் அவர், 'எனக்கு நியாயத் தீர்ப்பு நாள் குறித்துச் சொல்லுங்கள்' என்றார். அதற்கு, 'இந்தக் கேள்வியைக் கேட்கப்படுபவர், கேட்பவரை விட அதிகமாக அறிந்தவர் அல்லர்' என்றார்கள். பின்னர் அவர், 'அதன் அடையாளங்கள் குறித்து எனக்குச் சொல்லுங்கள்' என்றார். அதற்கு, 'அடிமைப்பெண் தனது எஜமானியைப் பெற்றெடுப்பாள். மேலும் காலணிகளில்லாத, முறையான ஆடைகளற்ற, வறியவர்களான ஆடுமேய்ப்போர் ஆடம்பரமாக கட்டிடங்களைக் கட்டுவதில் போட்டி போட்டுக் கொண்டிருப்பதைப் பார்ப்பீர்கள்' என்றார்கள். பிறகு அவர் திரும்பிச் சென்றுவிட்டார். நான் அங்கேயே சிறிது நேரம் தாமதித்தேன். பிறகு, 'உமரே! கேள்வி கேட்டவர் யாரென்று உங்களுக்குத் தெரியுமா?' எனக் கேட்டார்கள். 'அல்லாஹ்வும் அவனது தூதருமே நன்றாக அறிவார்கள்' என்றேன் நான். 'அவர் ஜிப்ரீல் ஆவார். அவர் உங்களுக்கு உங்கள் மார்க்கத்தைக் கற்றுத் தருவதற்காக வந்தார்' என்று கூறினார்கள்.
(ஆதாரம் : முஸ்லிம்.)
இந்த ஹதீஸிலிருந்து பெறப்படும் பயன்கள் :
1-இஸ்லாத்தின் ஐந்து அடிப்படைக் கடமைகள் குறிப்பிடப்பட்டுள்ளமை. அவைகளாவன :
"உண்மையாக வணங்கப்படத் தகுதியானவன் அல்லாஹ்வைத் தவிர யாருமில்லை, முஹம்மத் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் என்றும் சாட்சியம் கூறுதல்".
தொழுகையைக் கடைப்பிடிப்பிடித்தல் (நிலைநாட்டுதல்),
ஸகாத்தை தகுதியானோருக்கு கொடுத்தல்
ரமளான் மாதத்தில் நோன்பு நோற்றல்,
புனித ஹஜ் கடமையை இறைஆலயத்திற்குச் சென்று நிறைவேற்றுதல்.
- ஈமானின் அடிப்படை அம்சங்கள் குறிப்பிடப்பட்டுள்ளமை. அவை 6 ஆகும்.
அல்லாஹ்வை நம்புவதல்.
2-மலக்குமார்களை நம்புதல்.
3-வேதங்களை நம்புதல்.
4-நபிமார்களை –தீர்கதரிசிகளை- நம்புதல்.
- மறுமை நாளை நம்புதல்.
6-நன்மை தீமை இறைவிதியின் படியே நிகழும் என்பதை நம்புதல்.
3 இஹ்ஸானின் ருக்ன் பற்றி குறிப்பிடப்பட்டிருத்தல் அதன் ருக்ன் ஒன்றாகும் . அதாவது, அல்லாஹ்வை நீ பார்ப்பது போல் வணங்குவதாகும். நீ அவனைக் காணாவிட்டாலும் அவன் உன்னை பார்த்துக் கொண்டிருக்கிறான்.
- மறுமை நாள் ஏற்படும் நேரம் குறித்து அல்லாஹ்வைத்தவிர வேறு யாரும் அறியமாட்டார்கள்.
பதில் : நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அபூஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள் :
'முஃமின்களில் நற்குணங்களில் பரிபூரணம் பெற்றவரே இறை நம்பிக்கையில் பரிபூரணம் பெற்றவராவார்'.
(ஆதாரம் : திர்மிதி, இந்த ஹதீஸ் குறித்து இமாம் திர்மிதி அவர்கள் ஹஸன் ஸஹீஹ் எனத் தீர்ப்பளித்துள்ளார்.)
இந்த ஹதீஸிலிருந்து பெறப்படும் பயன்கள் :
- நற்குணத்தைக் கடைபிடிக்குமாறு தூண்டுதல்.
- ஈமானின் பரிபூரணத்துவம் நிறைவான நற்குணத்தில் உள்ளது.
- ஈமான் (நற்குணத்தால்) அதிகரிக்கும். (துர்குணங்களால்) குறைந்து விடும்.
பதில் : நபிஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக இப்னு உமர் ரழியல்லாஹு அன்ஹுமா அறிவிக்கிறார்கள் :
'யார் அல்லாஹ் அல்லாதவற்றின் மீது சத்தியம் செய்கிறாரோ அவர் அவனை நிராகரித்து விட்டார். அல்லது அவனுக்கு இணைவைத்துவிட்டார்'.
(ஆதாரம் : திர்மிதி).
இந்த ஹதீஸிலிருந்து பெறப்படும் பயன்கள் :
- அல்லாஹ்வைத் தவிர வேறு எவற்றிலும் சத்தியம் செய்வது கூடாது.
- அல்லாஹ் அல்லாதவற்றின் மீது சத்தியம் செய்வது சிறிய வகை ஷிர்க்காகும்.