உங்களில் யாரும் தனது இரு தோள்புயங்களிலும் எந்த ஒன்றும் இல்லாமல் ஒரு ஆடையில் தொழ வேண்டாம்.
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள் :
உங்களில் யாரும் தனது இரு தோள்புயங்களிலும் எந்த ஒன்றும் இல்லாமல் ஒரு ஆடையில் தொழ வேண்டாம்.
«لاَ يُصَلِّي أَحَدُكُمْ فِي الثَّوْبِ الوَاحِدِ لَيْسَ عَلَى عَاتِقَيْهِ شَيْءٌ».
இங்கு நபியவர்கள் ஒரே ஒரு ஆடையில் தொழுபவர், தனது தோள் புயங்கள் மேல் எதையும் வைத்து மறைக்காமல் தொழுவதை தடுக்கின்றார்கள். ஏனெனில் இரு தோள் புயங்களும் அவ்றத்தாக இல்லாவிட்டாலும், அவ்விரண்டையும் மறைப்பதுவே அவ்ரத்தை மறைப்பதை முழுமைப்படுத்தும். தொழுகையில் அல்லாஹ்வுக்கு முன்னிலையில் நிற்கும் போது இவ்வாறு மறைத்திருப்பது அவனை கண்ணியப் படுத்தும், மகத்துவப்படுத்தும் ஒரு அடையாளம் ஆகும்.
மறைக்கப்பட வேண்டியவற்றை மறைக்க முடியும் என்றால் ஒரு ஆடையில் தொழலாம்
இரு ஆடைகளிலும் தொழலாம். அதாவது ஒன்று உடம்பின் மேல் பகுதியையும் மற்றது கீழ்ப்பகுதியையும் மறைக்கும் விதமாக இருக்க வேண்டும்.
தொழுகையாளி அழகிய தோற்றத்தில் இருப்பது விரும்பத்தக்கதாகும்.
இரு தோள் புயங்களையும் அல்லது ஒன்றை மறைக்க முடியுமாக இருந்தால் மறைத்துக் கொள்வது கட்டாயம். சிலர் மேற்கூறிய தடை 'தவிர்ந்து கொள்வது ஏற்றமானது' (மக்ரூஹ்) என்று அர்த்தத்தை தரும் என்றும் கூறியுள்ளனர் (அதாவது அவ்வாறு மறைப்பது கட்டாயமல்ல).
நபித் தோழர்களிடம் பணம் குறைவாகவே இருந்தமை. எந்தளவுக்கென்றால், அவர்களில் சிலரிடம் இரு ஆடைகள் கூட இருக்கவில்லை.
இந்த ஹதீஸின் அர்த்தம் பற்றி இமாம் நவவி இவ்வாறு கூறுகின்றார்கள்: அவர் அந்த ஆடையை வேட்டியாக அணிந்து கொண்டு, தோள் புயத்தில் அதன் ஒரு பகுதியை வைக்காவிட்டால் அவரது அவ்ரத் வெளிப்பட வாய்ப்புள்ளது. ஆனால் ஒரு பகுதியை தோள் புயத்தில் வைத்துக் கொண்டால் அவ்வாறு ஆக மாட்டாது. அதேபோன்று அவர் தனது ஒரு கையாலோ அல்லது இரு கைகளாலுமோ அதை பிடித்துக் கொண்டே இருக்க வேண்டிய தேவையும் ஏற்படும். எனவே அது அவரைப் பராக்காக்கிவிடும். நெஞ்சுக்குக் கீழால், வலக்கரத்தை, இடக்கரத்தின் மீது வைத்தல், அதேபோன்று உயர்த்த வேண்டிய இடங்களில் உயர்த்தல் போன்ற ஸுன்னாக்கள் அவருக்குத் தப்பிவிடும். அலங்காரத்துக்குரிய பகுதியாக இருக்கும் மேற்பகுதி மறைக்கப்படாமல் விடப்படவும் செய்கின்றது. அல்லாஹ் கூறுகின்றான்: தொழும்போதெல்லாம் (ஆடைகளினால்) உங்களை அலங்கரித்துக் கொள்ளுங்கள்.
புஹாரி (1/ 81) (359).
முஸ்லிம் (1/ 368) (516).
மேலதிகமாக (10)
سبل السلام.
لمحمد الصنعاني (1/ 198).
توضيح الأحكام مِن بلوغ المرام.
لعبد الله البسام (2/ 8).
فتح ذي الجلال والإكرام شرح بلوغ المرام.
لابن عثيمين (1/ 501).
منحة العلام في شرح بلوغ المرام.
لعبد الله الفوزان (2/ 330).
تيسير العلام شرح عمدة الأحكام.
لعبد الله البسام (ص203).