Skip to content

மோசடியின் (ஏமாற்றின்) சில வகைகள் யாவை?

الباب / الفصل
قسم الأخلاق

السؤال

س٢١: ما بعض أنواع الغش المحرم؟

கேள்வி 21 : மோசடியின் (ஏமாற்றின்) சில வகைகள் யாவை?

الجواب

ج:الغش في البيع والشراء، وهو إخفاء عيب السلعة.

  • الغش في تعلم العلم، ومثل ذلك غش الطلاب في الامتحانات.
  • الغش في القول كشهادة الزور والكذب.
  • عدم الوفاء بما تقول وما تتفق به مع الناس.
  • وفي النهي عن الغش: أنَّ رسولَ اللهِ صلى الله عليه وسلم مرَّ على صُبْرةِ طعامٍ، فأَدخَلَ يدَه فيها، فنالَتْ أصابعُه بَلَلًا، فقال:

«ما هذا يا صاحِبَ الطَّعامِ؟» قال: أصابَتْهُ السَّماءُ يا رسولَ اللهِ. قال: «أفلا جَعَلْتَه فَوقَ الطَّعامِ كَيْ يَراهُ النَّاسُ؟ مَن غَشَّ فليس مِنِّي»

رواه مسلم.

الصُّبْرَة: هي الكَوْمةُ من الطَّعام.

பதில் - கொடுக்கல் வாங்கலின் போது பொருட்களின் குறைகளை மறைத்து நுகர்வோருக்கு மோசடி செய்தல்.

  • கல்வியை கற்பதில் மோசடி செய்தல் . மாணவர்கள் பரீட்சைகளின் போது மோசடி செய்வது இதற்கான உதாரணம்.
  • பேச்சில் மோசடி செய்வது, பொய்சாட்சியம் மற்றும் பொய்யுரைத்தல் போன்றதே.
  • மனிதர்களுடன் சேர்ந்து முடிவு செய்து பேசியதை நிறைவேற்றாமையும் மோசடியாகும்.
  • மோசடி தடை செய்யப்பட்டுள்ளது பற்றிய ஹதீஸ் பின்வருமாறு : நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள், உணவு தானியம் விற்பனை செய்யும் ஒரு வியாபாரியை கடந்து சென்றார்கள். தங்களின் கரத்தை தானியக் குவியலுக்குள் நுழைத்தார்கள். உள்ளே ஈரப்பதம் தென்பட்டது. அப்போது அவர்கள் :

"உணவுப் பொருட்களின் உரிமையாளரே! என்ன இது?" என்று கேட்டார்கள். அதற்கு அவர், "இதில் மழை பட்டுவிட்டது, அல்லாஹ்வின் தூதரே!" என்றார். அப்போது அவர்கள், "மக்கள் பார்க்க அதனை உணவுக்கு மேலே வைத்திருக்கக் கூடாதா? யார் மோசடி செய்கிறாரோ அவர் என்னைச் சார்ந்தவர் அல்லர்" என்று கூறினார்கள்.

(ஆதாரம் : முஸ்லிம்.)

"அஸ்ஸுப்ரது" என்பது உணவுக் குவியல் என்பதைக் குறிக்கிறது.