ஒரு மனிதன் வரிசைக்குப் பின்னால் தனித்து நின்று தொழுவதைக் கண்ட நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், தொழுகையை மீட்டுமாறு அவருக்கு ஏவினார்கள்.
வாபிஸா (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்:
ஒரு மனிதன் வரிசைக்குப் பின்னால் தனித்து நின்று தொழுவதைக் கண்ட நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், தொழுகையை மீட்டுமாறு அவருக்கு ஏவினார்கள்.
أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ رَأَى رَجُلًا صَلَّى وَحْدَهُ خَلْفَ الصَّفِّ، فَأَمَرَهُ أَنْ يُعِيدَ صَلَاتَهُ.
ஒரு மனிதன் வரிசைக்கு பின்னால் தனித்து நின்று தொழுவதைக் கண்ட நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தொழுகையை மீட்டுமாறு அவரிடம் ஏவுகின்றார்கள். இவ்வாறு அவர் தொழுத தொழுகை நிறைவேறவில்லை என்பதே அதன் காரணமாகும்.
கூட்டுத் தொழுகைக்காக நேரகாலத்துடன், முதலிலேயே வர ஆர்வமூட்டல். வரிசைக்குக் பின்னால் தனித்து நின்று தொழுது, தொழுகையை செல்லுபடியற்றதாக ஆக்கிக் கொள்ளாமல் இருக்க அறிவுறுத்தல்.
இப்னு ஹஜர் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறுகின்றார்கள்: வரிசைக்கு பின்னால் தனித்து நின்று யாராவது தொழுகையை ஆரம்பித்து, ருகூவில் இருந்து எழும்ப முன்னர் வரிசையில் சேர்ந்து கொண்டால், - அபூ பக்ரா (ரழி) அவர்களது ஹதீஸில் உள்ள பிரகாரம் - மீட்டவேண்டியதில்லை. அவ்வாறில்லாவிட்டால், இந்த ஹதீஸின் அடிப்படையில் மீட்டவேண்டும்.
ஸுனன் அபூ தாவூத் (2/ 18) (682).
ஸுனன் திர்மிதீ (1/ 268) (230).
ஸுனன் இப்னு மாஜா (2/ 137) (1004).
முஸ்னத் அஹ்மத் (29/ 524) (18000).
மேலதிகமாக (6)
سبل السلام شرح بلوغ المرام.
لمحمد الصنعاني (1/ 378).
توضيح الأحكام مِن بلوغ المرام.
لعبد الله البسام (2/ 509).
فتح ذي الجلال والإكرام شرح بلوغ المرام.
لابن عثيمين (2/ 288).