உங்களுக்கு முன்னிருந்தவர்களில் ஒரு மனிதர் இருந்தார். அவரிடம் ஒரு காயம் காணப்பட்டது. அவர் பொறுக்கமுடியாது, ஒரு கத்தியை எடுத்து, தனது கையை வெட்டிவிடவே, இரத்தம் பெருக் கெடுத்தோடி அவர் மரணித்துவிட்டார். அப்போது அல்லாஹ், 'என்னுடைய அடியான் என்னிடம் அவசரப்பட்டு வந்துவிட்டான். அவன் மீது நான் சுவனத்தை ஹராமாக்கி விடுகின்றேன்.' என்று கூறினான்.
ஹஸன் அல்பஸரீ அவர்கள் கூறுகின்றார்கள் : ஜுன்துப் பின் அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் அவர்கள் இந்தப் பள்ளிவாசலில் எமக்கு அறிவித்தார்கள். அவர்கள் அறிவித்ததில் இருந்து இன்னும் நாம் மறக்கவே இல்லை. ஜுன்துப் (ரலி) அவர்கள் நபியவர்கள் மீது இட்டுக்கட்டியிருப்பார் என்று நாம் பயப்படவும் மாட்டோம். நபி (ஸல்) அவர்கள் கூறியதாக, அவர்கள் இவ்வாறு கூறினார்கள் :
உங்களுக்கு முன்னிருந்தவர்களில் ஒரு மனிதர் இருந்தார். அவரிடம் ஒரு காயம் காணப்பட்டது. அவர் பொறுக்கமுடியாது, ஒரு கத்தியை எடுத்து, தனது கையை வெட்டிவிடவே, இரத்தம் பெருக் கெடுத்தோடி அவர் மரணித்துவிட்டார். அப்போது அல்லாஹ், 'என்னுடைய அடியான் என்னிடம் அவசரப்பட்டு வந்துவிட்டான். அவன் மீது நான் சுவனத்தை ஹராமாக்கி விடுகின்றேன்.' என்று கூறினான்.
«كَانَ فِيمَنْ كَانَ قَبْلَكُمْ رَجُلٌ بِهِ جُرْحٌ، فَجَزِعَ، فَأَخَذَ سِكِّينًا فَحَزَّ بِهَا يَدَهُ، فَمَا رَقَأَ الدَّمُ حَتَّى مَاتَ، قَالَ اللَّهُ تَعَالَى: بَادَرَنِي عَبْدِي بِنَفْسِهِ، حَرَّمْتُ عَلَيْهِ الجَنَّةَ».
இங்கு நபியவர்கள், எமக்கு முன்னர் வாழ்ந்த ஒரு சமுதாயத்தில் இருந்த ஒரு மனிதருக்கு ஒரு காயம் ஏற்பட்டபோது, அதன் வலியைப் பொறுக்க முடியாது, ஒரு கத்தியை எடுத்து, தன் கையை வெட்டி, மரணத்தை ஏற்படுத்திக் கொண்டார். அதாவது, இரத்தம் வழிந்தோடி, அவர் மரணித்து விட்டார் எனவும், அப்போது அல்லாஹ், 'என்னுடைய அடியான் என்னிடம் அவசரப்பட்டு வந்துவிட்டான். அவன் மீது நான் சுவனத்தை ஹராமாக்கி விடுகின்றேன்.' என்றும் கூறியதாக அறிவிக்கின்றார்கள்.
சோதனையில் பொறுமையாக இருப்பதன் சிறப்பு. மேலும், வலிகளின் போது வெறுப்பை வெளிப்படுத்தி, அதை விட சிரமமான ஒன்றுக்கு இட்டுச் செல்லாமல் இருத்தல்.
முன்சென்ற சமுதாயங்கள் பற்றி, படிப்பினைக்காகவும், நன்மைக்காகவும் பேசுதல்.
இப்னு ஹஜர் (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள் : அல்லாஹ்வின் உரிமைகளைக் பேணிக்கொள்ளல், அவன் தனது அடியார்கள் மீது கொண்டுள்ள இரக்கத்தைப் புரிந்துகொள்ளல். அதாவது, அவர்கள் தமது உயிர்களை மாய்த்துக்கொள்வதை அவன் தடுத்துள்ளான். ஏனெனில், உயிர்கள் அல்லாஹ்விற்கு சொந்தமானவையே!
உயிரைப் பறிக்கும் காரணிகளில் ஈடுபடுவதைத் தடுத்தல். மேலும், அது தொடர்பாகக் கடுமையான எச்சரிக்கை வந்துள்ளமை.
இப்னு ஹஜர் (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள் : இந்த மனிதர் மரணத்தை எதிர்பார்த்துத் தான் தன் கையை வெட்டிக் கொண்டாரே தவிர, அவ்வாறு வெட்டுவதன் மூலம் மருத்துவம் செய்து பெரும்பாலும் பயன் அடையலாம் எனும் எண்ணத்தில் வெட்டவில்லை.
புஹாரி (4/ 170) (3463).
முஸ்லிம் (1/ 107) (113).
மேலதிகமாக (5)
فتح الباري.
لابن حجر (3/ 227).
شرح النووي على مسلم (2/ 127).
تيسير العلام شرح عمدة الأحكام.
لعبد الله البسام (ص651).