Skip to content
ஸூராக்களின் பட்டியல் /

الذَّاريَات

الذَّاريَات is chapter 51 of the Quran and has 60 verses. This page presents it in full in the Uthmani script, with a verse-by-verse translation of its meaning.

60 வசனங்கள் ஸூரா எண் 51
வசனத்திற்குச் செல்
தமிழ் · Baqavi
بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ

وَٱلذَّٰرِيَٰتِ ذَرۡوٗا

(கடல் நீரை ஆவியாக்கிச் சிதறடிக்கும்) சூறாவளிகள் மீதும்,

فَٱلۡحَٰمِلَٰتِ وِقۡرٗا

(அந்த நீராவியை) சுமந்து செல்லும் மேகங்கள் மீதும்,

فَٱلۡجَٰرِيَٰتِ يُسۡرٗا

(பல பாகத்திற்கு அதை) எளிதாக(த் தாங்கிச்) செல்லும் மேகங்கள் மீதும்,

فَٱلۡمُقَسِّمَٰتِ أَمۡرًا

அதை (பூமியின் பல பாகங்களில்) மழையாக பிரித்துவிடும் வானவர்கள் மீதும் சத்தியமாக!

إِنَّمَا تُوعَدُونَ لَصَادِقٞ

(செயலுக்குத் தக்க கூலி கொடுக்கப்படுமென்று) உங்களுக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதி நிச்சயமாக உண்மையானதே.