Skip to content
ஸூராக்களின் பட்டியல் /

الأحقَاف

الأحقَاف is chapter 46 of the Quran and has 35 verses. This page presents it in full in the Uthmani script, with a verse-by-verse translation of its meaning.

35 வசனங்கள் ஸூரா எண் 46
வசனத்திற்குச் செல்
தமிழ் · Omar Brief
بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ

حمٓ

ஹா, மீம்.

Explanation & meanings · 1
  1. ஸூரா பகராவின் 1-ஆவது வசனத்தின் அடிக்குறிப்பைப் பாருங்கள்.

تَنزِيلُ ٱلۡكِتَٰبِ مِنَ ٱللَّهِ ٱلۡعَزِيزِ ٱلۡحَكِيمِ

மிகைத்தவன், மகா ஞானவான் அல்லாஹ்விடமிருந்து இந்த வேதம் இறக்கப்படுகிறது.

مَا خَلَقۡنَا ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضَ وَمَا بَيۡنَهُمَآ إِلَّا بِٱلۡحَقِّ وَأَجَلٖ مُّسَمّٗىۚ وَٱلَّذِينَ كَفَرُواْ عَمَّآ أُنذِرُواْ مُعۡرِضُونَ

வானங்களையும் பூமியையும் அவை இரண்டிற்குமிடையில் உள்ளவற்றையும் உண்மையான காரணத்திற்கும் ஒரு குறிப்பிட்ட தவணைக்கும் தவிர நாம் படைக்கவில்லை. நிராகரிப்பவர்கள் தங்களுக்கு எச்சரிக்கப்பட்டதை புறக்கணிக்கின்றார்கள்.

قُلۡ أَرَءَيۡتُم مَّا تَدۡعُونَ مِن دُونِ ٱللَّهِ أَرُونِي مَاذَا خَلَقُواْ مِنَ ٱلۡأَرۡضِ أَمۡ لَهُمۡ شِرۡكٞ فِي ٱلسَّمَٰوَٰتِۖ ٱئۡتُونِي بِكِتَٰبٖ مِّن قَبۡلِ هَٰذَآ أَوۡ أَثَٰرَةٖ مِّنۡ عِلۡمٍ إِن كُنتُمۡ صَٰدِقِينَ

(நபியே) நீர் கூறுவீராக! அல்லாஹ்வை அன்றி நீங்கள் அழைக்கின்றவற்றை குறித்து நீங்கள் அறிவியுங்கள்! அவர்கள் பூமியில் எதைப் படைத்தார்கள் என்று எனக்கு காண்பியுங்கள்? அல்லது வானங்களில் (-அவற்றைப் படைத்ததில்) அவர்களுக்கு ஏதும் பங்கு இருக்கின்றதா? (அப்படி இருக்கிறதென்றால் அதற்கு ஆதாரமாக) இதற்கு முன்னுள்ள ஒரு வேதத்தை அல்லது (முன்னோரின்) கல்வியில் (அறிவு சார்ந்த ஆதாரங்களில் ஏதும்) மீதமிருப்பதை என்னிடம் கொண்டு வாருங்கள். நீங்கள் (கூறுவதில்) உண்மையாளர்களாக இருந்தால்.

وَمَنۡ أَضَلُّ مِمَّن يَدۡعُواْ مِن دُونِ ٱللَّهِ مَن لَّا يَسۡتَجِيبُ لَهُۥٓ إِلَىٰ يَوۡمِ ٱلۡقِيَٰمَةِ وَهُمۡ عَن دُعَآئِهِمۡ غَٰفِلُونَ

அல்லாஹ்வை அன்றி மற்றவர்களை அழைகின்றவர்களை விட மிகப் பெரிய வழிகேடர்கள் யார்? அவர்களோ அவர்களுக்கு (-அழைக்கப்படுபவர்கள் அழைப்பவர்களுக்கு) மறுமை நாள் வரை பதில் அளிக்க மாட்டார்கள். அவர்கள் அவர்களின் (-அழைக்கப்படுபவர்கள் அழைப்பவர்களின்) துஆவை (-அழைப்பை, பிரார்த்தனையை) அறிய மாட்டார்கள்.