وَلَقَدۡ مَكَّنَّٰهُمۡ فِيمَآ إِن مَّكَّنَّٰكُمۡ فِيهِ وَجَعَلۡنَا لَهُمۡ سَمۡعٗا وَأَبۡصَٰرٗا وَأَفۡـِٔدَةٗ فَمَآ أَغۡنَىٰ عَنۡهُمۡ سَمۡعُهُمۡ وَلَآ أَبۡصَٰرُهُمۡ وَلَآ أَفۡـِٔدَتُهُم مِّن شَيۡءٍ إِذۡ كَانُواْ يَجۡحَدُونَ بِـَٔايَٰتِ ٱللَّهِ وَحَاقَ بِهِم مَّا كَانُواْ بِهِۦ يَسۡتَهۡزِءُونَ
உங்களுக்கு நாம் எதில் வசதியளிக்க வில்லையோ அதில் (எல்லாம்) அவர்களுக்கு நாம் வசதியளித்தோம். இன்னும், அவர்களுக்கு செவியையும் பார்வைகளையும் உள்ளங்களையும் ஏற்படுத்தினோம். ஆனால், அவர்கள் அல்லாஹ்வின் அத்தாட்சிகளை மறுப்பவர்களாக இருந்தபோது அவர்களின் செவியும் அவர்களின் பார்வைகளும் அவர்களின் உள்ளங்களும் அவர்களை விட்டும் (அல்லாஹ்வின் தண்டனையில்) எதையும் தடுக்கவில்லை. அவர்கள் எதை பரிகாசம் செய்பவர்களாக இருந்தார்களோ அது (-அல்லாஹ்வின் தண்டனை) அவர்களை சூழ்ந்து கொண்டது.