Skip to content
ஸூராக்களின் பட்டியல் /

الفُرقَان

الفُرقَان is chapter 25 of the Quran and has 77 verses. This page presents it in full in the Uthmani script, with a verse-by-verse translation of its meaning.

77 வசனங்கள் ஸூரா எண் 25
வசனத்திற்குச் செல்
தமிழ் · Baqavi
بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ

تَبَارَكَ ٱلَّذِي نَزَّلَ ٱلۡفُرۡقَانَ عَلَىٰ عَبۡدِهِۦ لِيَكُونَ لِلۡعَٰلَمِينَ نَذِيرًا

(நன்மை தீமைகளைத் தெளிவாகப்) பிரித்தறிவிக்கும் இவ்வேதத்தை தன் அடியார் (முஹம்மது) மீது இறக்கியவன் மிக்க பாக்கியமுடையவன். இது உலகத்தார் அனைவரையும் அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதாக இருக்கிறது.

ٱلَّذِي لَهُۥ مُلۡكُ ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضِ وَلَمۡ يَتَّخِذۡ وَلَدٗا وَلَمۡ يَكُن لَّهُۥ شَرِيكٞ فِي ٱلۡمُلۡكِ وَخَلَقَ كُلَّ شَيۡءٖ فَقَدَّرَهُۥ تَقۡدِيرٗا

(இவ்வேதத்தை அருளியவன் எத்தகையவனென்றால்,) வானங்கள், பூமியின் ஆட்சி அவனுக்குரியதே! அவன் ஒரு சந்ததியை எடுத்துக் கொள்ளவும் இல்லை; அவனுடைய ஆட்சியில் அவனுக்கு ஒரு துணையுமில்லை. அவனே அனைத்தையும் படைத்து அவற்றுக்குரிய இயற்கைத் தன்மையையும் அமைத்தவன்.

وَٱتَّخَذُواْ مِن دُونِهِۦٓ ءَالِهَةٗ لَّا يَخۡلُقُونَ شَيۡـٔٗا وَهُمۡ يُخۡلَقُونَ وَلَا يَمۡلِكُونَ لِأَنفُسِهِمۡ ضَرّٗا وَلَا نَفۡعٗا وَلَا يَمۡلِكُونَ مَوۡتٗا وَلَا حَيَوٰةٗ وَلَا نُشُورٗا

(இவ்வாறெல்லாமிருந்தும் இணைவைத்து வணங்குபவர்கள்) அல்லாஹ் அல்லாதவற்றை தெய்வங்களாக எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். அவையோ (அல்லாஹ்வினால்) படைக்கப்பட்டவை. எதையும் அவை படைக்கவில்லை. எவ்வித நன்மையையும் தீமையையும் தங்களுக்கு செய்து கொள்ள அவை சக்தியற்றவை. உயிர்ப்பிக்கவோ, மரணிக்க வைக்கவோ, உயிர் கொடுத்து எழுப்பவோ அவை சக்திபெற மாட்டா.

وَقَالَ ٱلَّذِينَ كَفَرُوٓاْ إِنۡ هَٰذَآ إِلَّآ إِفۡكٌ ٱفۡتَرَىٰهُ وَأَعَانَهُۥ عَلَيۡهِ قَوۡمٌ ءَاخَرُونَۖ فَقَدۡ جَآءُو ظُلۡمٗا وَزُورٗا

‘‘ (திருகுர்ஆனாகிய) இது பொய்யாக அவர் கற்பனை செய்து கொண்டதே தவிர, வேறில்லை. இ(தைக் கற்பனை செய்வ)தில் வேறு மக்கள் அவருக்கு உதவி புரிகின்றனர்'' என்று நிராகரிப்பவர்கள் கூறுகின்றனர். ஆகவே, (நிராகரிப்பவர்கள் இவ்வாறு கூறுவதன் காரணமாக) அவர்கள் அநியாயத்தையும் பொய்யையுமே சுமந்து கொண்டனர்.

وَقَالُوٓاْ أَسَٰطِيرُ ٱلۡأَوَّلِينَ ٱكۡتَتَبَهَا فَهِيَ تُمۡلَىٰ عَلَيۡهِ بُكۡرَةٗ وَأَصِيلٗا

‘‘இது முன்னோர்களின் கட்டுக்கதைகள். காலையிலும் மாலையிலும் இவருக்கு ஓதிக் காண்பிக்கப்படுகிறது. அதை இவர் (மற்றொருவரின் உதவியைக் கொண்டு) எழுதி வைக்கும்படிச் செய்கிறார்'' என்று அ(ந்நிராகரிப்ப)வர்கள் கூறுகின்றனர்.