'உங்களுக்குச் சில ஆட்சித் தலைவர்கள் நியமிக்கப்படுவார்கள். அவர்களிடம் நீங்கள் நன்மையையும் காண்பீர்கள்; தீமையையும் காண்பீர்கள். தீமையை (மனதால்) வெறுத்தவர் பிழைத்தார்; மறுத்தவர் தப்பித்தார். (இதற்கு மாறாக,) யார் (தீமையைக் கண்டு) திருப்தி அடைந்து (அதற்குத்) துணை போனாரோ
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக உம்முல் முஃமினீன் உம்மு ஸலமா ரழியல்லாஹு அன்ஹா கூறுகின்றார்கள் :
'உங்களுக்குச் சில ஆட்சித் தலைவர்கள் நியமிக்கப்படுவார்கள். அவர்களிடம் நீங்கள் நன்மையையும் காண்பீர்கள்; தீமையையும் காண்பீர்கள். தீமையை (மனதால்) வெறுத்தவர் பிழைத்தார்; மறுத்தவர் தப்பித்தார். (இதற்கு மாறாக,) யார் (தீமையைக் கண்டு) திருப்தி அடைந்து (அதற்குத்) துணை போனாரோ (அவருக்குக் குற்றத்தில் பங்கு உண்டு)' என்று கூறினார்கள். மக்கள், 'அல்லாஹ்வின் தூதரே! அவர்களுடன் நாங்கள் போரிடலாமா?' என்று கேட்டார்கள். 'இல்லை. அவர்கள் தொழுகையை நிறைவேற்றும் வரை (வேண்டாம்)' என்று கூறினார்கள்.
«سَتَكُونُ أُمَرَاءُ فَتَعْرِفُونَ وَتُنْكِرُونَ، فَمَنْ عَرَفَ بَرِئَ، وَمَنْ أَنْكَرَ سَلِمَ، وَلَكِنْ مَنْ رَضِيَ وَتَابَعَ» قَالُوا: أَفَلَا نُقَاتِلُهُمْ؟ قَالَ: «لَا، مَا صَلَّوْا».
(ஒரு காலம் வரும் அக்காலத்தில்) ஆட்சித் தலைவர்களினால் சில பிரதிநிதிகள் எமக்கு நியமிக்கப்படுவார்கள், அவர்களிடம் மார்க்கத்திற்கு உடன்பட்ட சில நன்மைகளையும் காண்போம், ஷரீஆவுக்கு முரண்பட்ட சில பாவங்களையும் காண்டு அவற்றை நாம் மறுக்கும் நிலையில் இருப்போம் என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் இந்த ஹதீஸில் குறிப்பிடுகிறார்கள். அதனைத் தடுக்க சக்தியற்று, உள்ளத்தால் வெறுத்தவர் பாவத்திலிருந்தும் நயவஞ்சகத்தனத்திலிருந்தும் தப்பிக் கொண்டவராவார். கையினாலோ, நாவினாலோ தடுக்க சக்தி பெற்று, தடுத்தவரும் பாவத்திலிருந்து அதற்கு துணையாக இருப்பதிலிருந்தும் தப்பிவிட்டார். இருப்பினும் அவர்களது செயலைப் பார்த்து திருப்தியடைந்து, துணை போனவர்கள் அவர்களைப் போன்றே அழிந்து போவார்கள். பின் தோழர்கள் அவர்களை எதிர்த்து நாம் போராடவா என நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களிடம் வினவினார்கள். அதற்கு நபியவர்கள் அவர்கள் தொழுகையை நிலைநாட்டும் வரை போர் தொடுக்க வேண்டாமெனத் தடுத்தார்கள்.
...:
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் எதிர்காலத்தில் நடக்கவிருக்கும் நிகழ்வுகளை முன்னறிவுப்புச் செய்தமையும், அவர்கள் அறிவித்தது போன்று அவை நிகழ்ந்தமையும் அவர்களது நபித்துவத்தின் அற்புதங்களில் ஒன்றாகும்.
தீமையை ஏற்று திருப்தியடைவதும் அதற்கு துணைபோவதும் தடுக்கப்பட்டுள்ளது. அதனை தடுப்பதும் கண்டிப்பதும் கடமையாகும்.
பிரதிநிதிகள் மார்க்கத்திற்கு முரணான செயலை உருவாக்கினால் மக்கள் அதற்கு கட்டுப்படுவது கூடாது.
முஸ்லிம் பிரதிநிதிகள் -ஆட்சியாளர்களுக்கெதிராக கிளர்ச்சி செய்வதன் விளைவாக குழப்பம், இரத்தம் சிந்துதல், பாதுகாப்பு அற்றுப்போதல் போன்ற நிலைகள் ஏற்படுவதால் கிளர்ச்சி செய்வது தடுக்கப்பட்டுள்ளது. எனவே பாவிகளான தலைவர்களது தீமைகளை சகித்துக் கொண்டு, அவர்களது துன்புறுத்தல்களைப் பார்த்து பொறுமை காப்பது சிறந்தது என மார்க்கம் கருதுகிறது.
தொழுகை இஸ்லாத்தின் மிகப்பெரும் குறியீடாகும், அதுவே இஸ்லாத்தையும் நிராகரிப்பையும் வேறுபடுத்தக்கூடிய மிகப்பெரும் அடையாளம்.
முஸ்லிம் (3/ 1480) (1854).
மேலதிகமாக (12)
المفهم لما أشكل من تلخيص كتاب مسلم (4/ 64).
البحر المحيط الثجاج في شرح صحيح الإمام مسلم بن الحجاج (32/ 206).
بهجة الناظرين شرح رياض الصالحين.
لسليم الهلالي (1/ 279).
تطريز رياض الصالحين.
لفيصل بن عبد العزيز المبارك (ص150).
الشرح الممتع على زاد المستقنع.
لابن عثيمين (11/ 323).
شرح رياض الصالحين.
لابن عثيمين (2/ 435).
نزهة المتقين شرح رياض الصالحين.
مجموعة من الباحثين (1/ 211).