Skip to content
ஸூராக்களின் பட்டியல் /

القَصَص

القَصَص is chapter 28 of the Quran and has 88 verses. This page presents it in full in the Uthmani script, with a verse-by-verse translation of its meaning.

88 வசனங்கள் ஸூரா எண் 28
வசனத்திற்குச் செல்
தமிழ் · Omar
بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ

طسٓمٓ

தா சீன். (இப்போது ஓதிகாட்டப்படும்) இவை இந்த குர்ஆனுடைய இன்னும் தெளிவான வேதத்தின் வசனங்கள் ஆகும்.

تِلۡكَ ءَايَٰتُ ٱلۡكِتَٰبِ ٱلۡمُبِينِ

(உமக்கு இறக்கப்படும் வசனங்களாகிய) இவை, தெளிவான வேதத்தின் வசனங்களாகும்.

نَتۡلُواْ عَلَيۡكَ مِن نَّبَإِ مُوسَىٰ وَفِرۡعَوۡنَ بِٱلۡحَقِّ لِقَوۡمٖ يُؤۡمِنُونَ

நம்பிக்கை கொள்கின்ற மக்களுக்காக மூஸா இன்னும் ஃபிர்அவ்னின் செய்தியை உண்மையாக நாம் உமக்கு ஓதி காண்பிக்கிறோம்.

إِنَّ فِرۡعَوۡنَ عَلَا فِي ٱلۡأَرۡضِ وَجَعَلَ أَهۡلَهَا شِيَعٗا يَسۡتَضۡعِفُ طَآئِفَةٗ مِّنۡهُمۡ يُذَبِّحُ أَبۡنَآءَهُمۡ وَيَسۡتَحۡيِۦ نِسَآءَهُمۡۚ إِنَّهُۥ كَانَ مِنَ ٱلۡمُفۡسِدِينَ

நிச்சயமாக ஃபிர்அவ்ன் (எகிப்து) பூமியில் (மக்களை அடக்கி ஆண்டு) பெருமையடித்(து வந்)தான். இன்னும், அங்குள்ளவர்களை பல பிரிவுகளாக ஆக்கினான். அவர்களில் ஒரு வகுப்பாரை (-இஸ்ரவேலர்களை) பலவீனப்படுத்தி (அவர்களை துன்புறுத்தி)னான். அவர்களின் ஆண் பிள்ளைகளை அவன் கொல்வான். இன்னும், அவர்களின் பெண் (பிள்ளை)களை வாழவிடுவான். நிச்சயமாக அவன் கெடுதி செய்வோரில் ஒருவனாக இருந்தான்.

وَنُرِيدُ أَن نَّمُنَّ عَلَى ٱلَّذِينَ ٱسۡتُضۡعِفُواْ فِي ٱلۡأَرۡضِ وَنَجۡعَلَهُمۡ أَئِمَّةٗ وَنَجۡعَلَهُمُ ٱلۡوَٰرِثِينَ

இன்னும், பூமியில் பலவீனப்படுத்தப்பட்டவர்கள் மீது நாம் அருள்புரிவதற்கும் அவர்களை ஆட்சியாளர்களாக நாம் ஆக்குவதற்கும் (ஃபிர்அவ்னும் அவனுடைய சமுதாயமும் அழிக்கப்பட்டதன் பின்னர் அவர்களின் பூமிக்கும் சொத்துகளுக்கும்) சொந்தக்காரர்களாக அவர்களை நாம் ஆக்குவதற்கும் நாடினோம்.