எனக்கு சில வசனங்கள் இறக்கப்பட்டுள்ளன. அவற்றைப் போன்று வேறு வசனங்களைக் காணமுடியாது. (அவையே) முஅவ்விததைன் (எனப்படும் இரு குல் ஸூராக்களும்) ஆகும்.
நபி (ஸல்) அவர்கள் தனக்குக் கூறியதாக, உக்பா இப்னு ஆமிர் (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள் :
எனக்கு சில வசனங்கள் இறக்கப்பட்டுள்ளன. அவற்றைப் போன்று வேறு வசனங்களைக் காணமுடியாது. (அவையே) முஅவ்விததைன் (எனப்படும் இரு குல் ஸூராக்களும்) ஆகும்.
«أُنْزِلَ -أَوْ أُنْزِلَتْ- عَلَيَّ آيَاتٌ لَمْ يُرَ مِثْلُهُنَّ قَطُّ، الْمُعَوِّذَتَيْنِ».
நபிகள் (ஸல்) அவர்கள் தனக்குக் கூறியதாக, உக்பா இப்னு ஆமிர் (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள் : எனக்கு அல்லாஹ் சில வசனங்களை இறக்கியுள்ளான். அவற்றைப் போன்று (பாதுகாப்புத் தேடுவதில்) வேறு வசனங்களைக் காணமுடியாது. (அவையே) முஅவ்விததைன் (எனப்படும் ஸூரா அல்பலக் மற்றும் ஸூரா அந்நாஸ் ஆகிய ஸூராக்கள்) ஆகும்.
இவ்விரு ஸூராக்களினதும் மகத்தான சிறப்பைத் தெளிவுபடுத்தல்.
இவ்விரு ஸூராக்களையும் ஓதி, எல்லா தீமைகளையும் விட்டுப் பாதுகாப்புத் தேட ஆர்வமூட்டல்
முஸ்லிம் (1/ 558) (814).
ஸுனன் அந்நஸாஈ (2/ 158) (952).
மேலதிகமாக (1)
ذخيرة العقبى في شرح المجتبى (12/ 312).