நான் ஆஇஷா (ரழி) அவர்களிடம், “நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் வீட்டினுள் நுழைந்ததும் முதலில் என்ன செய்வார்கள்?" எனக் கேட்டதற்கு, "பல் துலக்குவார்கள்" என்றார்கள் அவர்கள்.
ஷுரைஹ் பின் ஹானி அவர்கள் கூறுகின்றார்கள்:
நான் ஆஇஷா (ரழி) அவர்களிடம், “நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் வீட்டினுள் நுழைந்ததும் முதலில் என்ன செய்வார்கள்?" எனக் கேட்டதற்கு, "பல் துலக்குவார்கள்" என்றார்கள் அவர்கள்.
سَأَلْتُ عَائِشَةَ، قُلْتُ: بِأَيِّ شَيْءٍ كَانَ يَبْدَأُ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا دَخَلَ بَيْتَهُ؟ قَالَتْ: بِالسِّوَاكِ.
நபி (ஸல்) அவர்கள் வீட்டினுள், இரவிலோ, பகலிலோ எந்த நேரத்தில் நுழைந்தாலும் முதலாவதாக பற்களை சுத்தப்படுத்துவது அவர்களது வழிமுறையாக இருந்தது.
பொதுவாக எல்லா நேரங்களிலும் பல் துலக்குவது மார்க்கமாகும். அதிலும் குறிப்பாக மார்க்கம் அடையாளப்படுத்தியுள்ள நேரங்களில் செய்வது முக்கியமாகும். உதாரணமாக, வீட்டில் நுழையும் போது, தொழுகையின் போது, வுழூவின் போது, தூங்கி எழுந்ததும், வாயில் துர்வாடை வரும் போது.
தாபிஈன்கள் நபி (ஸல்) அவர்களது நிலைமைகள் பற்றிக் கேட்டறிந்து, அவற்றைப் பின்பற்ற ஆர்வம் காட்டியுள்ளமை.
தகுதியானவர்களிடமிருந்தும், நன்கு அறிந்தவர்களிடமிருந்தும் அறிவைப் பெறல். அதாவது, நபியவர்கள் வீட்டினுள் நுழையும் போது என்ன செய்வார்கள் என ஆஇஷா (ரலி) அவர்களிடம் வினவப்படுகின்றது.
நபியவர்கள் வீட்டினுள் நுழைந்தவுடன் பற்களைத் துலக்கியதன் மூலம், தமது மனைவியருடன் நல்லமுறையில் நடந்துகொண்டுள்ளார்கள்.
முஸ்லிம் (1/ 220) (253).
மேலதிகமாக (6)
بهجة الناظرين شرح رياض الصالحين.
لسليم الهلالي (2/ 341).
نزهة المتقين شرح رياض الصالحين.
لمجموعة من الباحثين (2/ 851).
المنهاج شرح صحيح مسلم بن الحجاج.
النووي (3/ 144).