Skip to content
ஸூராக்களின் பட்டியல் /

الزُّمَر

الزُّمَر is chapter 39 of the Quran and has 75 verses. This page presents it in full in the Uthmani script, with a verse-by-verse translation of its meaning.

75 வசனங்கள் ஸூரா எண் 39
வசனத்திற்குச் செல்
தமிழ் · Baqavi
بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ

تَنزِيلُ ٱلۡكِتَٰبِ مِنَ ٱللَّهِ ٱلۡعَزِيزِ ٱلۡحَكِيمِ

அல்லாஹ்வினால்தான் இவ்வேதம் இறக்கப்பட்டுள்ளது. அவன் (அனைவரையும்) மிகைத்தவன் (அனைவரையும் அறிந்த) ஞானமுடையவன்.

إِنَّآ أَنزَلۡنَآ إِلَيۡكَ ٱلۡكِتَٰبَ بِٱلۡحَقِّ فَٱعۡبُدِ ٱللَّهَ مُخۡلِصٗا لَّهُ ٱلدِّينَ

(நபியே!) நிச்சயமாக நாம், உமக்கு இவ்வேதத்தை முற்றிலும் உண்மையைக் கொண்டு இறக்கி வைத்திருக்கிறோம். ஆகவே, முற்றிலும் அல்லாஹ்வுக்கு வழிப்பட்டு, பரிசுத்த மனதுடன் அவனை வணங்கி வருவீராக.

أَلَا لِلَّهِ ٱلدِّينُ ٱلۡخَالِصُۚ وَٱلَّذِينَ ٱتَّخَذُواْ مِن دُونِهِۦٓ أَوۡلِيَآءَ مَا نَعۡبُدُهُمۡ إِلَّا لِيُقَرِّبُونَآ إِلَى ٱللَّهِ زُلۡفَىٰٓ إِنَّ ٱللَّهَ يَحۡكُمُ بَيۡنَهُمۡ فِي مَا هُمۡ فِيهِ يَخۡتَلِفُونَۗ إِنَّ ٱللَّهَ لَا يَهۡدِي مَنۡ هُوَ كَٰذِبٞ كَفَّارٞ

பரிசுத்தமான வழிபாடு அல்லாஹ் ஒருவனுக்கே சொந்தமானது என்பதை அறிந்து கொள்ளுங்கள். எவர்கள் அல்லாஹ் அல்லாதவற்றை, தங்களுக்குப் பாதுகாவலர்களாக எடுத்துக் கொண்டிருக்கிறார்களோ அவர்கள், ‘‘அத்தெய்வங்கள் எங்களை அல்லாஹ்வுக்கு மிக்க சமீபமாக்கி வைக்கும் என்பதற்காகவே தவிர நாம் இவற்றை வணங்கவில்லை'' (என்று கூறுகின்றனர்). அவர்கள் தர்க்கித்துக் கொண்டிருக்கும் இவ்விஷயத்தைப் பற்றி, அல்லாஹ் (மறுமையில்) அவர்களுக்கிடையில் தீர்ப்பளிப்பான். நிச்சயமாக அல்லாஹ் (இத்தகைய) பொய்யர்களையும், (மனமுரண்டாக) நிராகரிப்பவர்களையும் நேரான வழியில் செலுத்துவதில்லை.

لَّوۡ أَرَادَ ٱللَّهُ أَن يَتَّخِذَ وَلَدٗا لَّٱصۡطَفَىٰ مِمَّا يَخۡلُقُ مَا يَشَآءُۚ سُبۡحَٰنَهُۥۖ هُوَ ٱللَّهُ ٱلۡوَٰحِدُ ٱلۡقَهَّارُ

அல்லாஹ் சந்ததி எடுத்துக்கொள்ள வேண்டுமென்று விரும்பி இருந்தால், அவன் படைத்தவற்றில் அவன் விரும்பிய (மேலான)வற்றைத் தேர்ந்தெடுத்துக் கொண்டிருப்பான். (எனினும், இத்தகைய விஷயங்களிலிருந்து) அவன் மிக பரிசுத்தமானவன். அல்லாஹ் ஒரே ஒருவன்தான். (அவனுக்குச் சந்ததி இல்லை. அனைவரையும்) அவன் அடக்கி ஆளுகிறான்.

خَلَقَ ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضَ بِٱلۡحَقِّۖ يُكَوِّرُ ٱلَّيۡلَ عَلَى ٱلنَّهَارِ وَيُكَوِّرُ ٱلنَّهَارَ عَلَى ٱلَّيۡلِۖ وَسَخَّرَ ٱلشَّمۡسَ وَٱلۡقَمَرَۖ كُلّٞ يَجۡرِي لِأَجَلٖ مُّسَمًّىۗ أَلَا هُوَ ٱلۡعَزِيزُ ٱلۡغَفَّٰرُ

அவன், வானங்களையும் பூமியையும் உண்மையான காரணத்திற்கே படைத்திருக்கிறான். (வீணுக்காக அல்ல.) அவனே இரவைச் சுருட்டிப் பகலை விரிக்கிறான். அவனே பகலைச் சுருட்டி இரவை விரிக்கிறான். சூரியனையும், சந்திரனையும் அடக்கி வைத்திருக்கிறான். இவை ஒவ்வொன்றும், அவற்றுக்குக் (குறிப்பிட்ட எல்லைக்குள்) குறிப்பிட்ட காலப்படி நடக்கின்றன. (நபியே!) அறிந்துகொள்வீராக: நிச்சயமாக அவன் தான் அனைவரையும் மிகைத்தவன் மிக மன்னிப்பவன்.