Skip to content
ஸூராக்களின் பட்டியல் /

المؤمنُون

المؤمنُون is chapter 23 of the Quran and has 118 verses. This page presents it in full in the Uthmani script, with a verse-by-verse translation of its meaning.

118 வசனங்கள் ஸூரா எண் 23
வசனத்திற்குச் செல்
தமிழ் · Baqavi
بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ

قَدۡ أَفۡلَحَ ٱلۡمُؤۡمِنُونَ

நம்பிக்கையாளர்கள் நிச்சயமாக வெற்றி அடைந்து விட்டனர்.

ٱلَّذِينَ هُمۡ فِي صَلَاتِهِمۡ خَٰشِعُونَ

அவர்கள் மிக்க உள்ளச்சத்தோடு தொழுவார்கள்;

وَٱلَّذِينَ هُمۡ عَنِ ٱللَّغۡوِ مُعۡرِضُونَ

அவர்கள் வீணான காரியங்களிலிருந்து விலகி இருப்பார்கள்;

وَٱلَّذِينَ هُمۡ لِلزَّكَوٰةِ فَٰعِلُونَ

அவர்கள் ஜகாத்து கொடுத்து வருவார்கள்;

وَٱلَّذِينَ هُمۡ لِفُرُوجِهِمۡ حَٰفِظُونَ

அவர்கள் தங்கள் மர்மஸ்தானத்தை (விபசாரத்திலிருந்து) காப்பாற்றிக் கொள்வார்கள்;