எனது இந்த (மஸ்ஜிதுந் நபவீ) பள்ளியில் தொழுவது ஏனைய பள்ளிவாசல்களில் தொழும் ஆயிரம் தொழுகைகளை விடச் சிறந்ததாகும். ஆனால் (மக்காவிலுள்ள) மஸ்ஜிதுல் ஹராம் பள்ளிவாசலைத் தவிர.
நபிஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அபூஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள் :
எனது இந்த (மஸ்ஜிதுந் நபவீ) பள்ளியில் தொழுவது ஏனைய பள்ளிவாசல்களில் தொழும் ஆயிரம் தொழுகைகளை விடச் சிறந்ததாகும். ஆனால் (மக்காவிலுள்ள) மஸ்ஜிதுல் ஹராம் பள்ளிவாசலைத் தவிர.
«صَلَاةٌ فِي مَسْجِدِي هَذَا خَيْرٌ مِنْ أَلْفِ صَلَاةٍ فِيمَا سِوَاهُ إِلَّا الْمَسْجِدَ الْحَرَامَ».
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் தமது பள்ளியில் தொழுவதன் சிறப்பை இந்த ஹதீஸில் தெளிவுபடுத்தியுள்ளார்கள். அதாவது இந்த உலகத்தில் உள்ள பள்ளிகளில் தொழும் தொழுகைக்கு கிடைக்கும் கூலியை விடவும் மஸ்ஜிதுன் நபவியில் தொழுவது ஆயிரம் தொழுகைக்குரிய கூலியைவிடவும் அதிகம் நன்மைகளை பெற்றுத்தரவல்லது. மக்காவிலுள்ள மஸ்ஜிதுல் ஹராமில் தொழுவது மஸ்ஜிதுன் நபவியில் தொழுவதை விடவும் அதிகம் நன்மையை பெற்றுத்தரவல்லது.
...:
அல் மஸ்ஜிதுல் ஹராமிலும் மஸ்ஜிதுன் நபவியிலும் தொழுவதற்கான நன்மை இரட்டிபாக்கப் பட்டிருத்தல்.
மஸ்ஜிதுல் ஹராமில் தொழுவது ஏனைய பள்ளிவாயில்களில் ஒரு இலட்சம் தொழுகைகளை தொழுவதை விடவும் சிறப்புக்குறியது.
புஹாரி (2/ 60) (1190).
முஸ்லிம் (2/ 1012) (1394).
மேலதிகமாக (2)
فتح الباري (3/67).
البحر المحيط الثجاج في شرح صحيح الإمام مسلم بن الحجاج (24/ 684).
நூல்களில் மேற்கோள்
4 நூல்கள்- அல்குர்ஆன் மற்றும் சுன்னாவின் ஒளியில் ஹஜ், உம்ரா மற்றும் சியாரா தொடர்பான பல விடயங்களின் ஆய்வும் விளக்கமும்التحقيق والإيضاح لكثير من مسائل الحج والعمرة والزيارة - النسخة المعتمدةஎன்னுடைய இப்பள்ளியில் தொழுவது மஸ்ஜிதுல் ஹராத்தைத் தவிர ஏனைய பள்ளிகளில் தொழும் ஆயிரம் தொழுகைகளை விட மேலானதாகும்." [109]
- மஸ்ஜிதுன் நபவியின் சிறப்புகளும் ஒழுங்குகளும், நபி ﷺ அவர்களின் கப்ர் மற்றும் அவர்களின் இரு தோழர்களின் கப்ருகளை ஜியாரத் செய்வது தொடர்பான சட்டங்களும்.فضائل وآداب المسجد النبوي، وأحكام زيارة قبر النبي عليه الصلاة والسلام وقبري صاحبيه"என்னுடைய இந்த மஸ்ஜிதில் (மஸ்ஜிதுன் நபவியில்) ஒரு தொழுகை, அல்-மஸ்ஜித் அல்-ஹராமைத் தவிர, மற்ற மஸ்ஜிதுகளில் தொழும் ஆயிரம் தொழுகைகளை விடச் சிறந்ததாகும்.".[2]