Skip to content

அடிக்கடி சாபம் இடுபவர்கள், கியாமத் நாளில் சாட்சிகளாகவும், பரிந்துரை செய்பவர்களாகவும் இருக்கமாட்டார்கள்.'

நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதை தான் கேட்டதாக அபுத்தர்தா ரழியல்லாஹு அன்ஹு கூறுகின்றார்கள் :

அடிக்கடி சாபம் இடுபவர்கள், கியாமத் நாளில் சாட்சிகளாகவும், பரிந்துரை செய்பவர்களாகவும் இருக்கமாட்டார்கள்.'

«إِنَّ اللَّعَّانِينَ لَا يَكُونُونَ شُهَدَاءَ وَلَا شُفَعَاءَ يَوْمَ الْقِيَامَةِ».

இதனை இமாம் முஸ்லிம் பதிவு செய்துள்ளார்
சரியானது
விளக்கவுரை

சாபமிடுவதற்கு எவ்விதத்திலும் தகுதியற்றவர்களுக்கு அடிக்கடி சாபமிடுபவர் இருவகையான தண்டனைக்கு உட்படுகிறார் என நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் குறிப்பிடுகிறார்கள். முதல் தண்டனை, அடிக்கடி சாபமிடுபவர் கியாமத் நாளில் நபிமார்கள் தங்கள் சமூகங்களுக்கு அல்லாஹ்வின் செய்தியை எடுத்துச் சென்றதைப் பற்றி சாட்சியாக இருக்க மாட்டார். மேலும், அவனது சாட்சி உலக வாழ்க்கையிலும் ஏற்றுக் கொள்ளப்படாது, ஏனெனில் அவன் பாவநடத்தை (ஃபிஸ்க்) உடையவனாகக் கருதப்படுவான். அதேபோல், அல்லாஹ்வின் பாதையில் கொல்லப் பட்டு ஷஹீதாகும் சிறப்பும் அவனுக்கு வழங்கப்படாது. இரண்டாம் தண்டனை : அவன் கியாத் நாளில், நம்பிக்கையாளர்கள் (முஃமின்கள்) நரகத்தைச் சந்திக்க வேண்டிய நிலையில் உள்ள தங்கள் சகோதரர்களுக்காக பரிந்துரை செய்யும் போது, அவர்களுடன் சேர்ந்து பரிந்துரை செய்ய முடியாது.

ஹதீஸிலிருந்து பெறப்பட்ட சில பயன்கள்

சாபமிடுவது ஹராமாகும். அதிகமாக சாபமிடுவது பெரும் பாவங்களில் ஒன்றாகும்.

இந்த ஹதீஸில் கூறப்பட்ட தண்டனை, அடிக்கடி (வழக்கமாக) சாபமிடுபவருக்கே உரியது. ஒரு முறை அல்லது அரிதாக நடந்த தவறுக்காக இந்த கடும் தண்டனை இல்லை. மேலும் இஸ்லாத்தில்; அனுமதிக்கப்பட்ட (முபாஹ்) சாபம் இந்தத் தண்டனையில் சேராது. அதாவது, குறிப்பிட்ட நபரை பெயரிட்டு அல்லாமல், தீய பண்புகள் கொண்டவர்களை பொதுவாக சாபமிடுதல், ஷரீஅத்தில் வந்திருந்தால் அது அனுமதிக்கப் பட்டதாகும். அனுமதிக்கப்பட்ட சாபங்களின் உதாரணங்கள்: 'யூதர்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் அல்லாஹ் சாபம் இடுவானாக', 'அநியாயம் செய்பவர்கள்மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாவதாக', உருவம் வரைபவர்கள் மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாவதாக', 'லூத் (அலை) قوم மக்களின் செயலைச் செய்வோர்மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாவதாக', அல்லாஹ் அல்லாதவருக்காக பலி கொடுப்போர்மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாவதாக', ஆண்களில் பெண்களைப் போல நடப்பவர்களுக்கும், பெண்களில் ஆண்களைப் போல நடப்பவர்களுக்கும் அல்லாஹ்வின் சாபம் உண்டாவதாக' போன்றனவாகும். இவ்வாறான சாபங்கள், தீய செயல்களைத் தடுக்கவும், மக்களை எச்சரிக்கவும் ஷரீஅத்தில் வந்துள்ளதால், அவை தடை செய்யப்பட்ட சாபங்களில் உள்ளடங்க மாட்டாது.

கியாமத் நாளில் தமது சகோதர முஸ்லிம்களுக்கு ஷபாஅத் -பரிந்துரை- செய்வதற்கு முஃமின்களுக்கு சந்தர்ப்பம் கிடைக்கும் என்பதை உறுதிப் படுத்தியுள்ளமை.

மேற்கோள்கள்

முஸ்லிம் (4/ 2006) (2598).

மேலதிகமாக (6)

توضيح الأحكام من بلوغ المرام.

لعبد الله البسام (7/ 469).

منحة العلام في شرح بلوغ المرام.

لعبد الله الفوزان (10/ 297).

فتح ذي الجلال والإكرام.

لابن عثيمين (6/ 412).