Skip to content
617 ஹதீஸ்கள்

நபிமொழி ஹதீஸ்களின் கலைக்களஞ்சியம்

முடிவுகளை வடிகட்டு

617 இல் 3 அட்டைகள்

வடிகட்டிகளை நீக்கு
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களிடம் வந்து, அல்லாஹ்வின் தூதரே! ஷைத்தான் எனக்கும், எனது தொழுகைக்குமிடையில் குறுக்கிட்டு எனது ஓதலை குழப்புகிறான் என்று கூறிய போது, நபியவர்கள்; "அவன்தான் ஹின்ஸப் எனப்படும் ஷைத்தான், அவன் குழப்புவதை நீர் உணர்ந்தால் அவனை விட்டும் அல்லாஹ்விடம் பாதுகாப்பு தேடிவிட்டு, உமது இடது பக்கத்தில் மூன்று விடுத்தம் துப்பிவிடு' என்று கூற, நான் அவ்வாறே செய்தேன், அல்லாஹ் அவனை விட்டும் என்னை காப்பாற்றி விட்டான் என்று கூறினார்கள்.
சரியானது இதனை இமாம் முஸ்லிம் பதிவு செய்துள்ளார்
ஒரு மனிதர் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களிடம் வந்து கூறினார்: 'அல்லாஹ்வின் தூதரே, -ஒருவிடயத்தை மறைமுகமாக சுட்டிக்காட்டி- எம்மில் ஒருவருக்கு இது போன்ற எண்ணங்கள் ஏற்படுகின்றன - அவர் அது பற்றி பேசுவதை விட நெருப்புக் கனலாக இருக்க விரும்புகிறார்', அப்போது நபியவர்கள் 'அல்லாஹ் மிகப் பெரியவன், அல்லாஹ் மிகப் பெரியவன்,ஷைத்தானின் சூழ்ச்சியை மனக்குழப்பமாக மாற்றிய அல்லாஹ்வுக்கே புகழனைத்தும் என்று கூறினார்கள்.
சரியானது இமாம்களான அபூதாவூத், குப்ரா எனும் நூலில் நஸாஈ ஆகியோர் இதனை பதிவு செய்துள்ளனர்.
உண்மையாளரும் உண்மைப்படுத்தப்பட்டவருமான இறைத்தூதர்ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் எங்களிடம் அறிவித்தார்கள்: உங்கள் படைப்பு உங்கள் தாயின் வயிற்றில் நாற்பது நாட்களில் ஒருங்கிணைக்கப்படுகிறது. பிறகு அதே போன்ற காலத்தில் (40 நாட்களில் அட்டை - போன்று) ஒரு கருக்கட்டியாக மாறுகிறது. பிறகு, அதே போன்ற காலத்தில் சதைப் பிண்டமாக மாறுகிறது. பிறகு அல்லாஹ் ஒரு வானவரை (அதனிடம்) அனுப்புகிறான். அந்த வானவருக்கு நான்கு கட்டளைகள் பிறப்பிக்கப்படுகின்றன. (அவை:) அதன் (கருவாக இருக்கும் அந்த மனிதனின்) செயலையும் (அவனுடைய செயல்கள் எப்படியிருக்கும் என்பதையும்), அதன் வாழ்வாதாரத்தையும் (அவனுக்க என்னென்ன எந்த அளவு கிடைக்கும் என்பதையும்), அதன் வாழ்நாளையும் (அவன் எவ்வளவு காலம் வாழ்வான் எப்போது இறப்பான் என்பதையும்), அது (இறுதிக் கட்டத்தில்) துர்பாக்கியசாலியா, நற்பேறுடையதா என்பதையும் ( விதித்தபடி) எழுது' என்று அந்த வானவருக்குக் கட்டளையிடப்படும். பிறகு அதனுள் உயிர் ஊதப்படும். இதனால் தான், உங்களில் ஒருவர் (நற்) செயல் புரிந்து கொண்டே செல்வார். எந்த அளவிற்கென்றால் அவருக்கும் சொர்க்கத்திற்குமிடையே ஒரு முழம் (தொலைவு) தான் இருக்கும். அதற்குள் அவரின் விதி அவரை முந்திக் கொள்ளும். அவர் நரகவாதிகளின் செயலைச் செய்து விடுவார். (அதன் விளைவாக, நரகம் புகுந்து விடுவார்,) மேலும் உங்களில் ஒருவர் (தீய) செயல் புரிந்து கொண்டே செல்வார். எந்த அளவிற்கென்றால் அவருக்கும் நரகத்திற்குமிடையே ஒரேயொரு முழம் (தொலைவு) தான் இருக்கும். அதற்குள் விதி அவரை முந்திக் கொள்ளும். அதனால் அவர் சொர்க்கவாதிகளின் செயலைச் செய்வார். (அதன் காரணத்தால் சொர்க்கம் புகுவார்.)
சரியானது இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்.