Skip to content
617 ஹதீஸ்கள்

நபிமொழி ஹதீஸ்களின் கலைக்களஞ்சியம்

முடிவுகளை வடிகட்டு

617 இல் 19 அட்டைகள்

வடிகட்டிகளை நீக்கு
தனது தாயார், பின்து ரவாஹா அவர்கள் தனது (நுஃமானின்) தந்தையிடம் அவரது சொத்திலிருந்து, தனது மகனுக்காக சில அன்பளிப்புக்களை வழங்குமாறு கேட்டார். அவரும் ஒரு வருடமளவில் அதைத் தாமதப்படுத்திக் கொண்டிருந்த பின்னர், அவ்வாறு செய்யலாம் என அவருக்குத் தோன்றியது. அப்போது தாயார், என்னுடைய மகனுக்கு நீங்கள் வழங்கும் அன்பளிப்புக்காக நபியவர்களைச் சாட்சியாக வைக்கும் வரை நான் பொருந்திக் கொள்ள மாட்டேன் என்று கூறினார். உடனே, எனது தந்தை, சிறுவனாக இருந்த எனது கையைப் பிடித்து நபியவர்களிடம் அழைத்துச் சென்று, 'அல்லாஹ்வின் தூதரே! இவருடைய தாயார் பின்து ரவாஹா அவர்களுக்கு, நான் இவருக்கு வழங்கியுள்ள அன்பளிப்புக்காக உங்களை சாட்சியாளராக வைப்பது விருப்பமாக உள்ளது.' என்று கூறினார்கள். அப்போது நபியவர்கள், 'பஷீரே! இவரல்லாத வேறு பிள்ளைகள் உமக்கு உண்டா?' எனக் கேட்டார்கள். அதற்கவர், 'ஆம்' என்று கூறினார். அப்போது நபியவர்கள், 'அவர்கள் அனைவருக்கும் இதுபோன்று வழங்கியுள்ளீர்களா?' எனக் கேட்க, அவர், 'இல்லை' என்றார். அப்போது நபியவர்கள், 'அப்படியாயின் என்னைச் சாட்சியாளராக வைக்காதீர்கள். நான் அநீதத்திற்கு சாட்சியாக இருக்க மாட்டேன்' என்று கூறினார்கள். முஸ்லிமின் அறிவிப்பில், 'இதற்கு வேறொரவரைச் சாட்சியாக வைத்துக் கொள்ளுங்கள்' என்று கூறியதாக இடம்பெற்றுள்ளது.
சரியானது இமாம்களான புஹாரியும், முஸ்லிமும் இதை பதிவு செய்துள்ளனர். இதற்கு பல்வேறு வாசகங்கள் உள்ளன.
“பெண்கள் சமுதாயமே! தான தர்மங்கள் செய்யுங்கள். ஏனெனில், நரகவாசிகளில் நீங்களே அதிக எண்ணிக்கையில் எனக்குக் காட்டப் பட்டீர்கள்” என்று குறிப்பிட்டார்கள். அப்போது “அல்லாஹ்வின் தூதரே! ஏன் (எங்களுக்கு இந்த நிலை)?” எனப் பெண்கள் கேட்டதும். “நீங்கள் அதிகமாகச் சபிக்கிறீர்கள்; கணவனிடம் நன்றி இல்லாதவர்களாக நடந்து கொள்கிறீர்கள். அறிவிலும் மார்க்கத்திலும் குறைபாடுள்ளவர் களாகவும், தீர்க்கமான யோசனை உடைய ஆண்களின் கூர்மையான அறிவைக்கூட மழுங்க வைப்பவர்களாகவும் உங்களைப் போன்று வேறு யாரையும் நான் கண்டதில்லை” என்று கூறினார்கள். அப்போது அப்பெண்கள், “மார்க்கத்திலும் அறிவிலும் எங்களிடமுள்ள குறைபாடு என்ன, அல்லாஹ்வின் தூதரே?” என்று கேட்டார்கள். “பெண்களின் சாட்சியம் ஆண்களின் சாட்சியத்தில் பாதியல்லவா?” என்று நபி (ஸல்) அவர்கள் கேட்க, அப்பெண்கள், “ஆம் (பாதிதான்)” என்று பதிலளித்தார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “அது தான் அவளது அறிவின் குறைபாடாகும்” என்று கூறிவிட்டு, “ஒரு பெண்ணுக்கு மாதவிடாய் ஏற்பட்டால் (தூய்மையாகும் வரை) அவள் தொழுவதில்லை; நோன்பு நோற்பதில்லை அல்லவா?” என்று கேட்டார்கள். அப்பெண்கள் “ஆம் (தொழுவதில்லை; நோன்பு நோற்பதில்லை)” என்று பதிலளித்தார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் அதுதான் அவளது மார்க்கத்தி(ன் கடமையி)லுள்ள குறைபாடாகும்” என்று கூறினார்கள்.
சரியானது இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்.
'பதிலுக்கு பதில் உறவாடுகிறவர் (உண்மையில்) உறவைப் பேணுகிறவர் அல்லர்; மாறாக உறவு முறிந்தாலும் அந்த உறவுடன் இணைகிறவரே உறவைப் பேணுபவராவார்'
சரியானது இமாம் புஹாரி இதனைப் பதிவு செய்திருக்கிறார்
'பெண்களுக்குள் நுழைவதை நான் உங்களுக்கு எச்சரிக்கின்றேன்.' என்று நபியவர்கள் கூறினார்கள். அப்போது, அன்ஸாரிகளில் ஒருவர், 'கணவன் புறத்தால் வரும் ஆண் உறவுகள் (கணவனின் சகோதரர் போன்றவர்கள்) நுழைவது பற்றி என்ன கூறுகின்றீர்கள்?' என்று கேட்க, 'கணவன் புறத்தால் வரும் அந்த உறவு தான் மரணமே' என்று கூறினார்கள் நபியவர்கள்.
சரியானது இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்.
'அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் தலை முடியில் சிலதை வைத்து, சிலதை சிரைப்பதை தடுத்தார்கள்'.
சரியானது இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்.
''யார் தாம்பத்தியம் நடத்த சக்தி பெற்றிருக்கிறாரோ அவர் திருமணம் செய்து கொள்ளட்டும்; ஏனெனில், அது (தகாத) பார்வையைக் கட்டுப்படுத்தும்; கற்பைக் காக்கும். யார் அதற்குச் சக்தி பெறவில்லையோ அவர் நோன்பு நோற்கட்டும். அது அவரது இச்சையைக் கட்டுப்படுத்தும்
சரியானது இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்.
பெண்களின் ஆடையை அணியும் ஆண்களையும், ஆண்களின் ஆடையை அணியும் பெண்களையும் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சபித்தார்கள்.
சரியானது குப்ராவில் இமாம் நஸாஈயும், இமாம் இப்னு மாஜா அதே பொருளிலும், இமாம் அஹ்மதும் இதை பதிவு செய்துள்ளனர்
'வலீ (பொறுப்பாளர்) இல்லாமல் திருமணம் இல்லை'.
சரியானது இமாம்களான அபூதாவூத், திர்மிதீ, இப்னு மாஜா, அஹ்மத் ஆகியோர் இதனை பதிவு செய்துள்ளனர்.