'நபி (ஸல்) அவர்கள், (துன்பத்தின்போது) அதிகமாகச் சப்தமிட்டு அழும் பெண்ணை விட்டும் மொட்டையடித்துக் கொள்ளும் பெண்ணை விட்டும் ஆடைகளைக் கிழித்துக் கொள்ளும் பெண்ணை விட்டும் தமது பொறுப்பை விலக்கிக் கொள்வதாக அறிவித்தார்கள். ' என்று கூறினார்கள்.
அபூபுர்தா இப்னு அபீமூஸா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
(என் தந்தை) அபூமூஸா (ரழி) அவர்கள் கடுமையான நோயால் மயக்க மடைந்துவிட்டார்கள். அவர்களின் தலை அன்னாருடைய மனைவியின் மடியில் இருந்தது. (தம் மனைவியின் எந்தப் பேச்சுக்கும்) அவரால் பதில் சொல்ல முடியவில்லை. பின்பு மயக்கம் தெளிந்தபோது,எவரிடமிருந்து நபி (ஸல்) அவர்கள் தமது பொறுப்பை விலக்கிக் கொண்டார்களோ அவரிடமிருந்து நானும் பொறுப்பை விலக்கிக்கொள்கிறேன் 'நபி (ஸல்) அவர்கள், (துன்பத்தின்போது) அதிகமாகச் சப்தமிட்டு அழும் பெண்ணை விட்டும் மொட்டையடித்துக் கொள்ளும் பெண்ணை விட்டும் ஆடைகளைக் கிழித்துக் கொள்ளும் பெண்ணை விட்டும் தமது பொறுப்பை விலக்கிக் கொள்வதாக அறிவித்தார்கள். ' என்று கூறினார்கள்.
وَجِعَ أَبُو مُوسَى وَجَعًا شَدِيدًا، فَغُشِيَ عَلَيْهِ وَرَأْسُهُ فِي حَجْرِ امْرَأَةٍ مِنْ أَهْلِهِ، فَلَمْ يَسْتَطِعْ أَنْ يَرُدَّ عَلَيْهَا شَيْئًا، فَلَمَّا أَفَاقَ، قَالَ: أَنَا بَرِيءٌ مِمَّنْ بَرِئَ مِنْهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، إِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بَرِئَ مِنَ الصَّالِقَةِ وَالحَالِقَةِ وَالشَّاقَّةِ.
அபூ புர்தா (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள், அவரது தந்தை அபூ மூஸா அல்-அஷ்அரி (ரழி) அவர்கள் கடுமையாக நோய்வாய்ப்பட்டு சுயநினைவை இழந்திருந்தார். அவரது தலை அவரது குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணின் மடியில் இருந்தது. அவள் சத்தமாக அழுது கொண்டிருந்தாள். ஆனால் அவர் மயக்கத்தில் இருந்ததால் அவளுக்கு ஏதும் கூற முடியவில்லை. அவர் சுயநினைவு திரும்பியபோது, அவர் கூறினார்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் யாரிடமிருந்து விலகிக்கொண்டார்களோ, அவர்களிடமிருந்து தானும் விலகிக்கொள்வதாகக் குறிப்பிட்டார். அவர்களின் விபரம் வருமாறு : 1-அஸ்-ஸாலிகா: சோதனையின் போது தனது குரலை உயர்த்தும் ஒரு பெண், அதாவது, சத்தமாகவும் உரத்த குரலிலும் அழும் ஒரு பெண். 2-அல்-ஹாலிகா: சோதனையின் போது தனது தலையை மொட்டையடிக்கும் ஒரு பெண். 3-அல்-ஷாக்கா: சோதனையின் போது தனது ஆடைகளைக் கிழிக்கும் ஒரு பெண். இவ்வாறான பழக்கவழக்கங்கள் இஸ்லாத்திற்கு முந்தைய அறியாமை காலத்தில் இருந்துவந்தது. அதற்கு பதிலாக, துயரங்களின் போது பொறுமையாக இருந்து, அதற்கான கூலியை அல்லாஹ்விடம் எதிரபார்குமாறு கட்டளையிடப்பட்டிருகிறார்கள்.
துயரங்களின் போது ஆடையை கிழித்தல், தலை முடியை மழித்தல், ஒலமிட்டு அழுதல் போன்றவை தடுக்கப்பட்டிருத்தல். இவை யாவும் பெரும்பாவங்களாகும்.
தனது துக்கத்தை வெளிப்படுத்தும் வகையில் ஒப்பாரி வைக்காது சாதாரணமாக அழுவது சோகமாக இருப்பது போன்றவை தடை செய்யப்பட்டதல்ல. அத்துடன் இவ்வாறு நடந்து கொள்வது அல்லாஹ்வின் தீர்ப்பை பொறுமையுடன் சகித்துக் கொள்வதற்கு முரணாகவும் அமைய மாட்டாது. மாறாக இது ஒருவரின் கருணையை அடையாளப்படுத்துவதாக அமையும்.
வார்த்தைகள் அல்லது செயல்கள் மூலம் அல்லாஹ்வின் வருந்தத்தக்க தீர்ப்புகளுக்கு அதிருப்தியை வெளிப்படுத்துவது தடைசெய்யப்பட்டுள்ளது.
துயரமான காலங்களில் பொறுமையைக் கடைப்பிடிப்பது அவசியமாகும்.
புஹாரி (2/ 81) (1296).
முஸ்லிம் (1/ 100) (104).
மேலதிகமாக (4)
تيسير العلام شرح عمدة الأحكام.
لعبد الله البسام (ص287).
تنبيه الأفهام شرح عمدة الأحكام.
لابن عثيمين (2/ 371).