'நிச்சயமாக அல்லாஹ் , இதயசுத்தியுடனும், அவனின் திருமுகத்தை நாடியும் மாத்திரம் செய்யும் செயல்கள் தவிர எதனையும் ஏற்றுக்கொள்வதில்லை' எனக் கூறினார்கள்.”
அபூ உமாமா அல்பாஹிலி ரழியல்லாஹு அன்ஹு கூறுகிறார்கள்:
“ஒரு மனிதர் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களிடம் வந்து, 'ஒரு மனிதன் வெகுமதிக்காகவும்; புகழுக்காகவும் போராடினால், அவனுக்கு என்ன கிடைக்கும்?' என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், 'அவனுக்கு எதுவும் கிடைக்காது' என்று கூறினார்கள். அவர் மூன்று முறை இக்கேள்வியைக் கேட்டார்; ஒவ்வொரு முறையும் நபி (ஸல்) அவர்கள், 'அவனுக்கு எதுவும் கிடைக்காது' என்று பதிலளித்தார்கள். பின்னர் நபி (ஸல்) அவர்கள், , 'நிச்சயமாக அல்லாஹ் , இதயசுத்தியுடனும், அவனின் திருமுகத்தை நாடியும் மாத்திரம் செய்யும் செயல்கள் தவிர எதனையும் ஏற்றுக்கொள்வதில்லை' எனக் கூறினார்கள்.”
جَاءَ رَجُلٌ إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: أَرَأَيْتَ رَجُلًا غَزَا يَلْتَمِسُ الْأَجْرَ وَالذِّكْرَ، مَا لَهُ؟ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَا شَيْءَ لَهُ» فَأَعَادَهَا ثَلَاثَ مَرَّاتٍ، يَقُولُ لَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَا شَيْءَ لَهُ» ثُمَّ قَالَ: «إِنَّ اللَّهَ لَا يَقْبَلُ مِنَ الْعَمَلِ إِلَّا مَا كَانَ لَهُ خَالِصًا، وَابْتُغِيَ بِهِ وَجْهُهُ»
அல்லாஹ்வின் கூலியையும், மக்களிடமிருந்து புகழையும் நற்பெயரையும் தேடி முஸ்லிம்களுடன் சேர்ந்து போரிட்ட ஒருவரின் நிலை குறித்து நபி (ஸல்) அவர்களிடம் ஒரு மனிதர் கேட்டார். அவருடைய கேள்வி, அல்லாஹ்விடமிருந்து அவருக்கு ஏதேனும் கூலி கிடைக்குமா என்பதுதான். அதற்கு நபி (ஸல்) அவர்கள், அவர் தனது நோக்கத்தில் மற்றவர்களை அல்லாஹ்வுடன் இணை வைத்ததால் அவருக்கு எந்த கூலியும் கிடைக்காது என்று பதிலளித்தார்கள். கேள்வி கேட்டவர் மூன்று முறை அதே கேள்வியைக் கேட்டபோதும் நபி (ஸல்) அவர்கள் அதே பதிலையே மீண்டும் கூறினார்கள். பின்னர் நபி (ஸல்) அவர்கள் ஒருவரின் செயல்கள் அல்லாஹ்வால் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டுமென்றால் கடைப்பிடிக்க வேண்டிய ஒரு சிறந்த அடிப்படையை விவரித்தார்கள். அல்லாஹ்வுக்கு முழுமையாகக் அடிபணிந்து, அவனுக்கு எதையும் அல்லது யாரையும் இணையாக்காமல், அவனுடைய கூலியை மட்டுமே எதிர்பார்த்து செய்யப்படும் செயல்கள் மாத்திரமே அவனால் ஏற்றுக்கொள்ளப்படும் செயல்களாகும். இந்த அடிப்படைக்கு மாற்றமாக அமைந்த எந்தச் செயலையும் அல்லாஹ் ஏற்றுக்கொள்வதில்லை.
அல்லாஹ்வுக்காக தூய்மையான எண்ணத்துடன் , நபி (ஸல்) அவர்களின் முன்மாதிரியைப் பின்பற்றி செய்யப்படும் அமல்களை மாத்திரமே அல்லாஹ் ஏற்றுக்கொள்கிறான்.
கேள்வி கேட்பவரின் நோக்கத்தையும் எதிர்பார்ப்புகளையும் முழுமையாக நிறைவேற்றும் வகையில் கேள்விகளுக்கு சிறந்த முறையில் பதிலளிப்பது முஃப்திகளின் (மார்க்கத் தீர்ப்பு வழங்கும் அறிஞர்களின்) நல்ல பண்பாடாகும்.
பிரச்சினையின் தீவிரத்தைப் பொறுத்து, குறித்த பிரச்சினைபற்றிய விடயத்தை உறுதிப்படுத்திக் கொள்ள கேள்வி மீண்டும் மீண்டும் கேட்கப்படலாம்.
அல்லாஹ்வின் பாதையில் போராடும் உண்மைப் போராளி , அல்லாஹ்வின் வார்த்தையை உயர்த்துவதற்காகவும், மறுமையில் அவனிடத்தில் வெகுமதி பெறுவதற்காகவும், தூய நோக்கத்துடன் போரடுபவரேயாவார். அவரின் போராட்டம் உலக இலாபத்திற்கான போராட்டமாக இருக்கமாட்டாது.
ஸுனன் அந்நஸாஈ (6/ 25) (3140).
மேலதிகமாக (4)
الترغيب والترهيب (2/194).
جامع العلوم والحكم (1/75).
نيل الأوطار (7/245).
ذخيرة العقبى في شرح المجتبى (26/205).