Skip to content
ஸூராக்களின் பட்டியல் /

إبراهِيم

إبراهِيم is chapter 14 of the Quran and has 52 verses. This page presents it in full in the Uthmani script, with a verse-by-verse translation of its meaning.

52 வசனங்கள் ஸூரா எண் 14
வசனத்திற்குச் செல்
தமிழ் · Omar Brief
بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ

الٓرۚ كِتَٰبٌ أَنزَلۡنَٰهُ إِلَيۡكَ لِتُخۡرِجَ ٱلنَّاسَ مِنَ ٱلظُّلُمَٰتِ إِلَى ٱلنُّورِ بِإِذۡنِ رَبِّهِمۡ إِلَىٰ صِرَٰطِ ٱلۡعَزِيزِ ٱلۡحَمِيدِ

அலிஃப் லாம் றா. (நபியே!) இது ஒரு வேதம். மக்களை அவர்களுடைய இறைவனின் அனுமதியின்படி இருள்களிலிருந்து ஒளியின் பக்கம்; மிகைத்தவன், மகா புகழாளன் உடைய பாதையின் பக்கம் நீர் வெளியேற்றுவதற்காக இதை உமக்கு இறக்கி தந்தோம்.

Explanation & meanings · 1
  1. ஸூரா பகராவின் 1-ஆவது வசனத்தின் அடிக்குறிப்பைப் பாருங்கள்.

ٱللَّهِ ٱلَّذِي لَهُۥ مَا فِي ٱلسَّمَٰوَٰتِ وَمَا فِي ٱلۡأَرۡضِۗ وَوَيۡلٞ لِّلۡكَٰفِرِينَ مِنۡ عَذَابٖ شَدِيدٍ

அல்லாஹ், வானங்களில் உள்ளவையும் பூமியில் உள்ளவையும் அவனுக்கே சொந்தமானவையாகும். நிராகரிப்பாளர்களுக்கு கடினமான தண்டனையின் கேடு உண்டாகுக!

ٱلَّذِينَ يَسۡتَحِبُّونَ ٱلۡحَيَوٰةَ ٱلدُّنۡيَا عَلَى ٱلۡأٓخِرَةِ وَيَصُدُّونَ عَن سَبِيلِ ٱللَّهِ وَيَبۡغُونَهَا عِوَجًاۚ أُوْلَٰٓئِكَ فِي ضَلَٰلِۭ بَعِيدٖ

(நிராகரிப்பவர்கள்) மறுமையை விட உலக வாழ்வை விரும்புவார்கள்; அல்லாஹ்வின் பாதையை விட்டு (மக்களை) தடுப்பார்கள்; அதில் கோணலை(யும் குறையையும்) தேடுவார்கள். இவர்கள் தூரமான வழிகேட்டில் உள்ளனர்.

وَمَآ أَرۡسَلۡنَا مِن رَّسُولٍ إِلَّا بِلِسَانِ قَوۡمِهِۦ لِيُبَيِّنَ لَهُمۡۖ فَيُضِلُّ ٱللَّهُ مَن يَشَآءُ وَيَهۡدِي مَن يَشَآءُۚ وَهُوَ ٱلۡعَزِيزُ ٱلۡحَكِيمُ

(நபியே!) எந்த ஒரு தூதரையும் அவருடைய மக்களின் மொழியைக் கொண்டே தவிர நாம் அனுப்பவில்லை. (காரணம்) அவர் அவர்களுக்கு (மார்க்கத்தை) தெளிவுபடுத்துவதற்காக ஆகும். ஆகவே, அல்லாஹ் தான் நாடுபவர்களை வழி கெடுக்கிறான். தான் நாடுபவர்களை நேர்வழி செலுத்து கிறான். அவன்தான் மிகைத்தவன், மகா ஞானவான்.

وَلَقَدۡ أَرۡسَلۡنَا مُوسَىٰ بِـَٔايَٰتِنَآ أَنۡ أَخۡرِجۡ قَوۡمَكَ مِنَ ٱلظُّلُمَٰتِ إِلَى ٱلنُّورِ وَذَكِّرۡهُم بِأَيَّىٰمِ ٱللَّهِۚ إِنَّ فِي ذَٰلِكَ لَأٓيَٰتٖ لِّكُلِّ صَبَّارٖ شَكُورٖ

“உம் சமுதாயத்தை இருள்களில் இருந்து ஒளியின் பக்கம் வெளியேற்று; அல்லாஹ்வின் அருட்கொடைகளை அவர்களுக்கு ஞாபகமூட்டு” என்று திட்டமாக மூஸாவை நம் அத்தாட்சிகளைக் கொண்டு (அவரது மக்களிடம்) நாம் அனுப்பினோம். மிக பொறுமையாளர், மிக நன்றியறிபவர் எல்லோருக்கும் நிச்சயமாக இதில் (பல) அத்தாட்சிகள் இருக்கின்றன.