12 : 51
قَالَ مَا خَطۡبُكُنَّ إِذۡ رَٰوَدتُّنَّ يُوسُفَ عَن نَّفۡسِهِۦۚ قُلۡنَ حَٰشَ لِلَّهِ مَا عَلِمۡنَا عَلَيۡهِ مِن سُوٓءٖۚ قَالَتِ ٱمۡرَأَتُ ٱلۡعَزِيزِ ٱلۡـَٰٔنَ حَصۡحَصَ ٱلۡحَقُّ أَنَا۠ رَٰوَدتُّهُۥ عَن نَّفۡسِهِۦ وَإِنَّهُۥ لَمِنَ ٱلصَّٰدِقِينَ
(அரசர் அப்பெண்களை அழைத்து) “நீங்கள் யூஸுஃபை உங்கள் விருப்பத்திற்கு அழைத்த போது உங்கள் நிலை என்ன?” என்று கேட்டார். “அல்லாஹ் பாதுகாப்பானாக. நாங்கள் அவரிடத்தில் ஒரு தீங்கையும் அறியவில்லை” என்று (அப்பெண்கள்) கூறினர். அதிபரின் மனைவியோ “இப்போது உண்மை வெளிப்பட்டு விட்டது. நான்தான் அவரை (நிர்பந்தமாக) என் விருப்பத்திற்கு அழைத்தேன். நிச்சயமாக அவர் உண்மையாளர்களில் உள்ளவர்” என்று கூறினாள்.