Skip to content
617 ஹதீஸ்கள்

நபிமொழி ஹதீஸ்களின் கலைக்களஞ்சியம்

முடிவுகளை வடிகட்டு

617 இல் 3 அட்டைகள்

வடிகட்டிகளை நீக்கு

பதிவாகிய நூல்

“இறைவழியில் (அறப்போருக்குச் செல்லும்போது) ஒரு நாள் நோன்பு நோற்றவரின் முகத்தை, அல்லாஹ் நரக நெருப்பைவிட்டு எழுபது ஆண்டுகள் (பயணத்) தொலைவிற்கு அப்புறப்படுத்தி விடுவான்.”
சரியானது இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்.
, ''நீர் காலமெல்லாம் நோன்பு நோற்று, இரவெல்லாம் வழிபடுகிறீரா?' என்று கேட்டார்கள். நான் ''ஆம்' என்றேன். நபி (ஸல்) அவர்கள், ''அவ்வாறு நீர் செய்தால், அதன் காரணமாக கண்கள் உள்ளே சொருகிவிடும் உடல் நலிந்துவிடும். காலமெல்லாம் நோன்பு நோற்பவர் நோன்பு நோற்றவராக மாட்டார். (மாதம் தோறும்) மூன்று நாட்கள் நோன்பு நோற்பது காலமெல்லாம் நோன்பு நோற்பதாகும்' என்றார்கள். அதற்கு ''நான் இதைவிட அதிகமாக (நோற்பதற்கு) சக்தி உள்ளவன்' என்று கூறினேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ''அப்படியானால் நபி தாவூத் (அலை) அவர்களின் நோன்பை நோற்பீராக! அவர்கள் ஒருநாள் விட்டு ஒருநாள் நோன்பு நோற்பார்கள்; (எதிரிகளைச்) சந்திக்கும்போது பின்வாங்கவுமாட்டார்கள்' என்று கூறினார்கள்.
சரியானது இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்.
எனது உற்ற தோழர், முஹம்மத் (ஸல்) அவர்கள் எனக்கு மூன்று விடயங்களைக் கொண்டு உபதேசம் செய்தார்கள். 1.ஒவ்வொரு மாதமும் மூன்று நாட்கள் நோன்பு நோற்றல். 2. இரண்டு ரக்அத்கள் ழுஹாத் தொழுதல். 3. உறங்குவதற்கு முன்னர் வித்ர் தொழுதல்.
சரியானது இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்.