Skip to content

'(பாங்கு, இகாமத் ஆகிய) ஒவ்வொன்றுக்கும் இடையில் ஒரு (கூடுதல்) தொழுகை உண்டு. (பாங்கு, இகாமத் ஆகிய) இரு தொழுகை அறிவிப்புகள் இடையில் ஒரு (கூடுதல்) தொழுகை உண்டு' என (இரண்டு முறை) கூறிவிட்டு, மூன்றாவது முறை 'விரும்பியவருக்கு' என்றார்கள்.

நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக, அப்துல்லாஹ் இப்னு முகஃப்பல் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிப்பதாவது :

'(பாங்கு, இகாமத் ஆகிய) ஒவ்வொன்றுக்கும் இடையில் ஒரு (கூடுதல்) தொழுகை உண்டு. (பாங்கு, இகாமத் ஆகிய) இரு தொழுகை அறிவிப்புகள் இடையில் ஒரு (கூடுதல்) தொழுகை உண்டு' என (இரண்டு முறை) கூறிவிட்டு, மூன்றாவது முறை 'விரும்பியவருக்கு' என்றார்கள்.

«بَيْنَ كُلِّ أَذَانَيْنِ صَلَاةٌ، بَيْنَ كُلِّ أَذَانَيْنِ صَلَاةٌ» ثُمَّ قَالَ فِي الثَّالِثَةِ: «لِمَنْ شَاءَ».

இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்.
சரியானது
விளக்கவுரை

ஐவேளைத் தொழுகைக்கான அழைப்பு -அதான்- மற்றும் இகாமத்திற்கு மத்தியில் நப்லான –உபரியான தொழுகை உண்டு என நபியவர்கள் மூன்று முறை கூறி தெளிவு படுத்தினார்கள். மூன்றாவது முறை கூறும் போது இதனை விரும்பியவர் தொழுது கொள்ளலாம் என்று குறிப்பிட்டார்கள்.

ஹதீஸிலிருந்து பெறப்பட்ட சில பயன்கள்

பாங்கிற்கும் இகாமத்துக்கும் இடையில் தொழுவது சுன்னத் ஆகும்.

நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் சில விடயங்களைத் திரும்பத் திரும்பச் சொல்வார்கள்; இது அனைவரும் கேட்பதை உறுதி செய்வதற்கும், அவர் கூறும் கருத்தை வலியுறுத்துவதற்கும் ஆகும்.

ஹதீஸில் பயன்படுத்தப்தப்பட்டுள்ள '(அதானைன்) என்பது இரண்டு அதான்கள் என்பது, தொழுகைக்கான அழைப்பு –அதான்- மற்றும் இகாமத்தைக் குறிக்கும். இது போன்று சூரியனையும் சந்திரனையும் குறிக்க கமரைன் (இரண்டு சந்திரன்கள); என்றும், அபூபக்கர் மற்றும் உமரைக் குறிக்க உமரைன் இரண்டு உமர்கள் என்று பயன்படுத்துவது அரபு மொழி மரபாகும்.

தொழுகைக்கான அழைப்பு என்பது தொழுகைக்கான நேரம் தொடங்கிவிட்டதை அறிவிப்பதாகும், மேலும் இகாமத் என்பது தொழுகை தொடங்கப் போகிறது என்பதற்கான அறிவிப்பாகும்.

மேற்கோள்கள்

புஹாரி (1/ 128) (627).

முஸ்லிம் (1/ 573) (838).

மேலதிகமாக (2)

البحر المحيط الثجاج في شرح صحيح الإمام مسلم بن الحجاج (16/ 671).

النهاية في غريب الحديث والأثر (31).