Skip to content
617 ஹதீஸ்கள்

நபிமொழி ஹதீஸ்களின் கலைக்களஞ்சியம்

முடிவுகளை வடிகட்டு

617 இல் 6 அட்டைகள்

வடிகட்டிகளை நீக்கு
'நீங்கள் பாங்கோசையைக் கேட்டால் முஅத்தின் கூறுவது போன்று கூறுங்கள்'
சரியானது இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்.
பிலாலே தொழுகைகாக இகாமத் கூறுவீராக! அதன் மூலம் எமக்கு ஆறுதல் அளிப்பீராக என்றார்கள்.
சரியானது இதனை இமாம் அபூதாவுத் பதிவு செய்துள்ளார்
'(பாங்கு, இகாமத் ஆகிய) ஒவ்வொன்றுக்கும் இடையில் ஒரு (கூடுதல்) தொழுகை உண்டு. (பாங்கு, இகாமத் ஆகிய) இரு தொழுகை அறிவிப்புகள் இடையில் ஒரு (கூடுதல்) தொழுகை உண்டு' என (இரண்டு முறை) கூறிவிட்டு, மூன்றாவது முறை 'விரும்பியவருக்கு' என்றார்கள்.
சரியானது இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்.
பாங்கு சொல்பவர் 'அல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர் (பொருள் :அல்லாஹ் மிகப் பெரியவன், அல்லாஹ் மிகப் பெரியவன்)என்றால் நீங்களும் 'அல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர் என்று சொல்ல வேண்டும். பிறகு அவர் 'அஷ்ஹது அன்லா இலாஹ இல்லல்லாஹ்' (பொருள் : அல்லாஹ்வைத் தவிர உண்மையாக வணங்கப்படக்கூடிய வேறு இறைவனில்லை என்று நான் சாட்சிகூறுகிறேன்.) என்றால் நீங்களும் அஷ்ஹது அன்லா இலாஹ இல்லல்லாஹ் என்று சொல்ல வேண்டும். பிறகு அவர் அஷ்ஹது அன்ன முஹம்மதர் ரஸூலுல்லாஹ் (பொருள் : (முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் இறைவனின் தூதர் ஆவார்கள் என்று நான் உறுதி மொழிகிறேன்' என்றால் நீங்களும் அஷ்ஹது அன்ன முஹம்மதர் ரஸூலுல்லாஹ் என்று சொல்ல வேண்டும். பிறகு அவர் ஹய்ய அலஸ்ஸலாஹ், (பொருள் தொழுகைக்காக விரைந்து வாருங்கள்) என்றால், அப்போது நீங்கள் 'லாஹவ்ல வலாகுவ்வத்த இல்லா பில்லாஹ்' (பொருள்: நன்மையை செய்வதற்கோ தீமையிலிந்து தவிரந்திருக்கவோ அல்லாஹ்வின் உதவியின்றி முடியாது' என்று சொல்ல வேண்டும்; பிறகு அவர் 'ஹய்ய அலல்ஃபலாஹ்' என்றால் அப்போதும் நீங்கள் லாஹவ்ல வலா குவ்வத்த இல்லா பில்லாஹ் என்று சொல்லவேண்டும் பிறகு அவர் 'அல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர் என்றால் நீங்களும் அல்லாஹு அக்பர், அல்லாஹு அக்பர் என்று சொல்லவேண்டும்; பிறகு அவர் 'லாஇலாஹ இல்லல்லாஹ்' என்றால் நீங்களும் 'லாஇலாஹ இல்லல்லாஹ' என்று உள்ளத்தின் உறுதியுடன் கூறினால் அத்தகையோர் சுவர்க்கம் புகுவர்'.
சரியானது இதனை இமாம் முஸ்லிம் பதிவு செய்துள்ளார்
தொழுகை அறிவிப்பாளரின் (முஅத்தின்) அறிவிப்பை நீங்கள் செவியுற்றால் அவர் கூறுவதைப் போன்றே நீங்களும் கூறுங்கள். பின்பு என்மீது ஸலவாத் சொல்லுங்கள். ஏனெனில், என்மீது யார் ஒருமுறை ஸலவாத் சொல்கிறாரோ அதன் காரணத்தால் அவருக்குப் பத்து முறை அல்லாஹ் அருள்புரிகின்றான். பின்பு எனக்காக அல்லாஹ்விடம் வஸீலாவைக் கேளுங்கள். வஸீலா என்பது சொர்க்கத்திலுள்ள (உயர்) பதவியாகும்; அல்லாஹ்வின் அடியார்களில் ஒருவருக்குத்தான் அது கிடைக்கும். அந்த ஒருவர் நானாகவே இருக்க விரும்புகிறேன். எனவே, எனக்காக அந்தப் பதவியை (அல்லாஹ்விடம்) கேட்பவருக்கு (மறுமை நாளில்) எனது பரிந்துரை அவசியம் கிடைக்கும்.
சரியானது இதனை இமாம் முஸ்லிம் பதிவு செய்துள்ளார்
யாராவது அதானைக் கேட்ட போது, 'அல்லாஹும்ம ரப்ப ஹாதிஹித் தஃவதித் தாம்மா, வஸ்ஸலாதில் காஇமா, ஆதி முஹம்மதனில் வஸீலத வல் பழீலா, வப்அஸ்ஹு மகாமன் மஹ்மூதனில்லதீ வஅத்தஹ்' என்று கூறுகின்றாரோ, அவருக்கு மறுமையில் எனது சபாஆ (பரிந்துரை) கிடைக்கும். துஆவின் அர்த்தம் : யா அல்லாஹ் இந்த முழுமையான அழைப்பினதும் நிலையான தொழுகையினதும் ரப்பே! முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு வசீலா என்னும் அந்தஸ்தையும், சிறப்பையும் கொடுப்பாயாக! நீ வாக்களித்திருக்கின்ற புகழுக்குரிய அந்தஸ்துக்கு அவரை அனுப்புவாயாக.
சரியானது இமாம் புஹாரி இதனைப் பதிவு செய்திருக்கிறார்