Skip to content
ஸூராக்களின் பட்டியல் /

المُلك

المُلك is chapter 67 of the Quran and has 30 verses. This page presents it in full in the Uthmani script, with a verse-by-verse translation of its meaning.

30 வசனங்கள் ஸூரா எண் 67
வசனத்திற்குச் செல்
தமிழ் · Baqavi
بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ

تَبَٰرَكَ ٱلَّذِي بِيَدِهِ ٱلۡمُلۡكُ وَهُوَ عَلَىٰ كُلِّ شَيۡءٖ قَدِيرٌ

(மனிதர்களே! வானம் பூமி உடைய) ஆட்சி எல்லாம் எவன் கையில் இருக்கிறதோ அவன் மிக பாக்கியமுடையவன். (வானம் பூமிகளை அழிக்கவும், ஆக்கவும்) அவன் (விரும்பியவாறு அவற்றைச் செய்ய) அனைத்தின் மீதும் ஆற்றலுடையவன்.

ٱلَّذِي خَلَقَ ٱلۡمَوۡتَ وَٱلۡحَيَوٰةَ لِيَبۡلُوَكُمۡ أَيُّكُمۡ أَحۡسَنُ عَمَلٗاۚ وَهُوَ ٱلۡعَزِيزُ ٱلۡغَفُورُ

உங்களில் மிகத்தூய்மையான அமல் செய்பவர்கள் யார் என்று சோதிப்பதற்காகவே, அவன் மரணத்தையும், வாழ்க்கையையும் படைத்திருக்கிறான். அவன் (அனைவரையும்) மிகைத்தவன்; மிக மன்னிப்புடையவன் ஆவான்.

ٱلَّذِي خَلَقَ سَبۡعَ سَمَٰوَٰتٖ طِبَاقٗاۖ مَّا تَرَىٰ فِي خَلۡقِ ٱلرَّحۡمَٰنِ مِن تَفَٰوُتٖۖ فَٱرۡجِعِ ٱلۡبَصَرَ هَلۡ تَرَىٰ مِن فُطُورٖ

அவனே ஏழு வானங்களையும் அடுக்கடுக்காகப் படைத்தவன். (மனிதனே!) அந்த ரஹ்மானுடைய படைப்பில் நீ ஒரு ஒழுங்கீனத்தையும் காணமாட்டாய். மற்றொரு முறை (அதைக் கவனித்துப்)பார். அதில் ஒரு பிளவை நீ காண்கிறாயா?

ثُمَّ ٱرۡجِعِ ٱلۡبَصَرَ كَرَّتَيۡنِ يَنقَلِبۡ إِلَيۡكَ ٱلۡبَصَرُ خَاسِئٗا وَهُوَ حَسِيرٞ

(பின்னும்) மேலும் இரு முறைப் பார்! (இவ்வாறு நீ எத்தனை முறை துருவித் துருவிப் பார்த்த போதிலும் ஒரு குறையையும் காண முடியாது.) உன் பார்வைதான் அலுத்து, கேவலமுற்று உன்னிடம் திரும்பிவிடும்.

وَلَقَدۡ زَيَّنَّا ٱلسَّمَآءَ ٱلدُّنۡيَا بِمَصَٰبِيحَ وَجَعَلۡنَٰهَا رُجُومٗا لِّلشَّيَٰطِينِۖ وَأَعۡتَدۡنَا لَهُمۡ عَذَابَ ٱلسَّعِيرِ

நிச்சயமாக நாம், சமீபமாக உள்ள வானத்தை (பூமியிலுள்ளவர்களுக்கு நட்சத்திர) விளக்குகளைக் கொண்டு அலங்காரமாக்கி வைத்தோம். மேலும், அவற்றை ஷைத்தான்களுக்கு ஓர் எறிகல்லாகவும் அமைத்தோம். இன்னும் அவர்களுக்கு நரக வேதனையையும் நாம் தயார்படுத்தி வைத்திருக்கிறோம்.