Skip to content
المَائدة /

வசனம் 103

5 : 103

வசனம் 103 of المَائدة (5 : 103). This page carries the verse in the Uthmani script with a translation of its meaning, at a stable URL that can be cited on its own.

المَائدة வசனங்கள் 120
ஸூரா · المَائدة
தமிழ் · Omar
5 : 103

مَا جَعَلَ ٱللَّهُ مِنۢ بَحِيرَةٖ وَلَا سَآئِبَةٖ وَلَا وَصِيلَةٖ وَلَا حَامٖ وَلَٰكِنَّ ٱلَّذِينَ كَفَرُواْ يَفۡتَرُونَ عَلَى ٱللَّهِ ٱلۡكَذِبَۖ وَأَكۡثَرُهُمۡ لَا يَعۡقِلُونَ

பஹீரா, ஸாயிபா, வஸீலா, ஹாம் (சிலைகளுக்காக நேர்ச்சை செய்யப்பட்ட) இவற்றில் எதையும் அல்லாஹ் ஏற்படுத்தவில்லை. எனினும், நிராகரிப்பவர்கள் அல்லாஹ் மீது பொய்யை கற்பனையாக இட்டுக்கட்டுகிறார்கள். இன்னும் அவர்களில் அதிகமானோர் (உண்மையை சிந்தித்து) புரியமாட்டார்கள்.

Explanation & meanings · 4
  1. பஹீரா: ஓர் ஒட்டகம் குறிப்பிட்ட எண்ணிக்கை அளவு குட்டிகளை ஈன்ற பின்னர் அதன் காதை அறுத்து சிலைகளுக்காக நேர்ச்சை செய்து விட்டுவிடுவது.
  2. ஸாயிபா: ஓர் ஒட்டகம் குறிப்பிட்ட வயதை அடைந்த பின்னர் அதை சிலைகளுக்காக நேர்ச்சை செய்து விட்டுவிடுவது.
  3. வஸீலா: தொடர்ந்து பெண் குட்டிகளை ஈன்றெடுக்கும் ஒட்டகத்தை சிலைகளுக்காக நேர்ச்சை செய்வது.
  4. ஹாம்: ஒரு பெண் ஒட்டகை குறிப்பிட்ட எண்ணிக்கை அளவு குட்டிகளை ஈன்றெடுக்க சினை ஆகுவதற்கு காரணமாக இருந்த ஆண் ஒட்டகை. அதை சிலைகளுக்காக நேர்ச்சை செய்து விட்டுவிடுவார்கள்.